நான் ஒரு நாடோடி. 70 ஆண்டுகளுக்கு மேலாக, நாடு முழுவதும் அலைந்து திரிந்து சுற்றிப் பார்த்திருக்கிறேன். இந்துக்கள் அல்லாத இஸ்லாமிய, கிறிஸ்தவ,புத்த, சமண, பார்சியக் குடும்பங்களிலெல்லாம் கணவன், மனைவி சன்டைகள் மிகக் குறைவு. பாழ்பட்ட நம்முடைய சமுதாயத்தில்தான் கணவன், மனைவி சண்டைகள் மிக மிக அதிகமாக இருக்கின்றன இதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் திருமணக் காலங்களில், அவரவர்களின் மத குருமார்கள், வாழ்க்கை என்றால் என்ன? வாழ்வது எப்படி? என்பதை உணர்த்தி, மணமக்களுக்கு அறிவுரையும் கூறி வாழ்க்கையில் ஈடுபடுத்துகிறார்கள்.
ஆனால் நாமோ, அறியாத ஒருவரைக் கொண்டு வந்து வைத்து, தெரியாத சடங்குகள் எதை, எதையோ செய்து, புரியாத மொழியில் எது எதையோ சொல்லி, வாழ்க்கை என்றால் இன்னதென அறிவிக்காமலேயே, அவர்களை வாழ்க்கையில் ஈடுபடுத்தி வருகிறோம். அதன் விளைவே இது.
இனியேனும், இத் தவறுகளைச் செய்யாமல், திருமண நாட்களில் சில தமிழ் அறிஞர்களைக் கொண்டு மணமக்களுக்கு அறிவுரையும், அறவுரையும் கூறுவது நலமாகும். அவ்வகையில், நான் இன்று சில அறிவுரைகளை, அறவுரைகளைக் கூறுகிறேன்.
Comentarios
Cargando comentarios…