தமிழ் மக்கள், தமிழ் மரபின் வழி திருமணம் செய்து கொண்டு, சீரும் சிறப்புமாக, இல்லற வாழ்வில், புகழோடும், வளமோடும் வாழ வேண்டும்.
இந்த நன்மரபுக்கு, முத்தமிழ்க் காவலரும் முதுபேரறிஞருமாகிய கி. ஆ. பெ. வி. அவர்கள் வழிகாட்டுகின்றார்கள். இந்நூல் அவர்கள் பல திருமணங்களை நடத்தி வைத்துப் பேசிய பேச்சுக்களின் தொகுப்பாகும்.
திருமணம் செய்து கொண்டவர்களுக்கும், செய்து கொள்ளப் போகிற மணமக்களுக்கும், இந்நூல் சிறந்த ஊன்று கோலாக நின்று உதவும் சிறப்புடையது.
வாழ்வாங்கு வாழ விரும்பும் தமிழக மக்கள். இதனை ஏற்றுப் பயன் பெறுவது நல்லது.
Comentarios
Cargando comentarios…