தம்பி! கவனி
அறிவுக்கு உணவு
சுறுசுறுப்பாயிரு! ஆனால், படபடப்பாயிராதே!பொறுமையாயிரு! ஆனால், சோம்பேறியாயிராதே!பற்றற்று இரு! ஆனால், காட்டுக்குப் போய்விடாதே!இல்லறத்தை நடத்து! ஆனால், காமவெறியனாயிராதே!
வீரனாயிரு! ஆனால், போக்கிரியாயிராதே!அன்பாயிரு! ஆனால், அடிமையாயிராதே!கொடையாளியாயிரு! ஆனால், ஒட்டாண்டியாய் விடாதே!
சிக்கனமாயிரு! ஆனால், கருமியாயிராதே;இரக்கம் காட்டு! ஆனால், ஏமாறிப் போகாதே!
Comentarios
Cargando comentarios…