மக்கட் செல்வம்
ஆறு செல்வங்கள்
பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனும் மற் றென்னுடையரேனும் உடையரோ—இன்னடிசில்புக்களையுந் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய் மக்களையிங் கில்லா தவர்
படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும்உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்குறு குறு நடந்து சிறுகை நீட்டிஇட்டுந் தொட்டுங் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்ந்துமயக்குறு மக்களை இல்லோர்க்குப்பயக்குறை யில்லை தாம் வாழும் நாளே என்பதே.
மாசில் வீணையும் மாலை மதியமும்வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்மூசு வண்டறை பொய்கையும் போன்றதேஈசன் எந்தை இணையடி நீழலே.
1. வீணை-காதுக்கு இனிமை தரும்.கண்ணுக்கு? மூக்குக்கு? நாவுக்கு? உடம்புக்கு?
2. கற்கண்டு-நாவுக்கு இனிமை தரும்.காதுக்கு? மூக்குக்கு? கண்ணுக்கு? உடம்புக்கு?
3. மலர்-கண்ணுக்கும் மூக்குக்கும் இனிமை தரும்.உடம்புக்கு? நாவுக்கு? காதுக்கு?
4. பலாச்சுளை—நாவுக்கு, கண்ணுக்கு, மூக்குக்கு இனிமை தரும்.
காதுக்கு? உடம்புக்கு?
5. கிளி—கண்ணுக்கு, காதுக்கு, உடம்புக்கு இனிமை தரும்.
நாவுக்கு? மூக்குக்கு?
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும்ஒண்டொடி கண்ணே உள என்பதே.
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்ந்து உற்றறியும் ஐம்புலனும்திண்டோளான் கண்ணே உள.
உச்சி முகர்தல்—மூக்குக்கு இன்பம்ஈன்ற ஞான்று—கண்ணுக்கு இன்பம்அவர் சிறுகை அளாவியகூழ்—வாய்க்கு இன்பம்மக்கள் மெய் திண்டல்—உடற்கின்பம்மற்று அவர் சொற்கேட்டல்—இன்பம் செவிக்கு
தக்கார் தகவிலர் என்பது அவரவர்எச்சத்தால் காணப் படும்
மகனைப் பெற்றுக் கொடுப்பது எனது கடமைஅவனைச் சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமைஅவனை நல்வழி நடத்துதல் வேந்தனின் கடமைஅவனுக்கு வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லனின் கடமை
போர்க்களம் புகுந்து யானைகளைக் குத்தி வீத்திக்களிப்புடன் திரும்புதல் காளையின் கடமை.
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மைஒழுக்கம் விழுப்பம் தரும்இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்
Comentarios
Cargando comentarios…