039-066

பரிபாடல் வெளியீடு

சங்க நூல்களில் பரிபாடல் என்ற தொகை நூல் ஒன்று உண்டு. உரையாசிரியர் கொடுத்துள்ள விவரங்களிலிருந்து அதில் 70 பாடல்கள் இருந்தனவாகத் தெரிய வருகிறது. அந்த 70 பாடல்களும் கிடைக்கவில்லை. அதற்குப் பரிமேலழகர் உரை இருந்தது. பல இடங்களில் தேடியும் எல்லாப் பரிபாடல்களும் அடங்கிய சுவடியே கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றை வைத்துக்கொண்டு ஆராய்ந்து, ஒருவகையாகச் செப்பம் செய்து 1918-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த நூலை வெளியிட்டார்.

Comments

Loading comments…