046-066

சென்னை வருகை

சில காலமாக ஆசிரியருக்கு உடல் நலம் சரியில்லாமையில்லாமையால் சிதம்பரம் கல்லூரிப் பணியை விட்டுவிட்டுப் போகவேண்டுமென்ற எண்ணம் இருந்து வந்தது. வயிற்றில் அடிக்கடி வலி உண்டாயிற்று. உணவு ஜீரணம் ஆகவில்லை. எனவே, கல்லூரியிலிருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை செட்டியாருக்குத் தெரிவித்தார். அவர், "அந்தப் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்று தோன்றுகிறதோ அவரை நியமித்துவிட்டு, உங்கள் விருப்பப்படி செய்யலாம்" என்று தெரிவித்தார். தமக்கு அடுத்தபடி மீனாட்சி கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொன்னோதுவார் என்பவரை முதல்வராக நியமிக்க ஏற்பாடு செய்துவிட்டு ஆசிரியர் அங்கிருந்து விலகிக்கொண்டார்.

Comments

Loading comments…