வஞ்சினம் வெடித்தது
‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்;இளையன் இவன்’ என உளையக் கூறிப்படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும் தேரும் மாவும்படையமை மறவரும் உடையம் யாம்’ என்றுஉறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச்சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரைஅருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடுஒருங்ககப் படேஎன் ஆயின், பொருந்தியஎன் நிழல் வாழ்நர் செல் நிழற் காணாது‘கொடியன்எம் இறை’ எனக் கண்ணீர் பரப்பிக்குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்விமாங்குடி மருதன் தலைவன் ஆகஉலகமொடு நிலையஇய பலர்புகழ் சிறப்பிற்புலவர் பாடாது வரைகஎன் நிலவரை! புரப்போர் புன்கண் கூர,இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே!
Comments
Loading comments…