போர் மூளுதல்

அதிகமான் நெடுமான் அஞ்சி

கட்டி அன்ன காரி மேலோன்தொட்டது கழலே; கையது வேலே;

சுட்டி யதுவும் களிறே; ஒட்டியதானை முழுதுடன் விடுத்து, நம்யானை காமின்; அவன் பிறிது எறி பலனே.

புள்ளிக் காரி மேலோன்; தெள்ளிதின்உள்ளினும் பனிக்கும் ஒருவே லோனே;குண்டுநீர்க் கிடங்கிற் கெண்டை பார்க்கும்மணிநிறச் சிறுசிரல் போலநம்அணிநல் யானைக்கு ஊறுஅளக் கும்மே.

பல்சான் றீரே, பல்சான் றீரேவீழ்ந்த புரிசைச் சேர்ந்த ஞாயில்கணையின் தூர்ந்த கன்றுமேய் கிடங்கின்மல்லல் மூதூர்ப் பல்சான் றீரே!

பலநாள் வருந்தி, இளையரும் முதியரும்நன்னுதல் மகளிரும் இன்னும்கண்டு உவப்ப,யாமங் கொள்வரும் ஒழிய.

...மேல்நாள்கொல்படை மொய்த்த குன்றுயர் விழுப்புண்நெய்யிடைப் பஞ்சு சேர்த்திப் பையெனக்கருங் குரல் நொச்சி மிலைந்ததிருந்துவேல் விடலை காப்புஅமைத் தனனே.

Comments

Loading comments…