தமிழ்ப் பழமொழிகள் 4 — ல
விரித்து உடுத்தினால் அழுக்குப் படும்.விரித்த உலகில் தெரிந்தவர் சிலர்.விரியன் புரளுகிறது போல.
விருத்தாசலம் போனால் திரட் பாவம் போகும்.விருத்தர நாரீ பதிவ்ரதா.விருதுக்காகவா வேட்டை ஆடுகிறது?விருதுகூறி வந்து செடியிலே நுழைகிறது போல.விருதுப்பட்டிக்குப் போன சனியனை வீட்டுக்கும் வந்து விட்டுப்போ என்றானாம்.
விருதுபட்டிச் சனியனை விலைக்கு வாங்கினது போல.விருந்து இட்டுப் பகையை விளைக்கிறது .(இட்டா - பகைமையை.)விருந்து இல்லாச் சோறு மருந்தோடு ஒக்கும்.விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.விருந்துக்காகவா வேட்டை ஆடுவது?
விருந்துக்கு அழைத்து விஷத்தைக் கொடுத்தது போல.விடுத்துக்கு நான்; பரியப் பணம் அண்ணளைக் கேள்.விருந்தும் மருந்தும் மூன்று நாள்.(வேனை, பொழுது.)விருந்தைப் பண்ணிற் பொருந்தப் பண்ணு.விருப்பத்தினால் ஆகாதது விம்பினால் ஆகுமா?
விரும்பினால் வேம்பும் கரும்பு ஆகும்.விருஷ்டியில் விதை மேல்,விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா(விதை .)விரைக்கு விட்ட காய் போல.{விதைக்கு.)விரைக் கோட்டையில் எலியை வைத்துக் கட்டினது போல(விதைக் கோட்டையில் பெருச்சாளி புகுந்தாற் போல.)
விரை முந்தியோ மரம் முந்தியோ?{விதை .)விரைவில் கருமம் சிதையும் இடராய் விடும்.(பழமொழி நானூறு.)வில் அடியால் சாகாதது, கல் அடியால் சரகுமா?வில் அம்பை விடச் சொல் அம்பு கொடியது.வில் அம்போ, சொல் அம்போ?
வில் இல்லாதவன் அம்பு தேடுவானேன்?வில்லங்கத்தை விலைக்கு வாங்கினாற் போல.வில்லுக்குச் சேரன்; சொல்லுக்குக் கீரன்,வில்லுக்கு விஜயன்; சொல்லுக்கு அரிச்சந்திரன்.வில்லுக்கு விஜயன்; சொல்லுக்குக் கீரன்.
வில்லுக்கு விஜயன்; பரிக்கு நகுலன்.வில்லுக் குனியாது எய்தால் விலகாது எதிரிபடை.(எதிர்த்த பகை.)வில்லும் விளாங்காயுமாக இருக்கிறது,வில்வப் பழம் தின்பார் பித்தம் போக; பனம்பழம் தின்பார்பசி போக.வில்வம் பித்தம் தீர்க்கும்; பனை பசி தீர்க்கும்,
வில் வளைந்தால் மோசம் தரும்.வில் வளைவதும் பெரியோர்கள் பணிவதும் நல்லதற்குஅடையாளம் அல்ல.விலக்கக் கூடாத துன்பத்துக்கு விசனப்படாதே. விலங்கும் பறவையும் விதித்த கோடு கடவா,(தவறா,)விலங்கு வேண்டாம்; குட்டையில் மாட்டு என்றது போல,
விலங்கு வேண்டாம்; தொழுவில் இருக்கிறேன்,விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக் கொண்டது போல.விலா இறச் சிரிப்பார்கள்.விலாங்கு மீன் வழுக்கி ஓடுவது போல.விலைக்குக் கொண்டு விருதுக்கு வேட்டை ஆடுகிறது.
விலைமகட்கு அழகு மேனி மினுக்குதல்.விலை மோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக்கல்யாணம் பண்ணுவான்,(தலைமகனுக்கு )விலை மோரில வெண்ணெய் எடுப்பது.(வெண்ணெய் எடுத்தாளாம்.)விவேகத்தில் மேன்மை அவிவேகத்தை ஒழித்தல்,விழக்குழி பாய்ச்சுகிறது.
விழலுக்கு இறைத்த நீர் போல.விழலுக்கு முத்துலை போட்டு இறைத்தேன்.விழிக்கு விழி பாய்ச்சுகிறது.
Comments
Loading comments…