சில குறிப்புகள்

புது மெருகு

ப. 21. இங்கே குறிப்பிட்ட செய்யுள் வருமாறு:

அளிதோ தானே பாரியது பறம்பேநளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்உழவர் உழாதன நான்குபயன் உடைத்தேஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மேஇரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மேமூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மேநான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்துதிணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மேவான்கண் அற்றவன் மலையே, வானத்துமீன்கண் அற்றதன் சுனையே, ஆங்குமரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும்தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்யான்அறி குவன்அது கொள்ளு மாறே:சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணிவிரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வரஆடினிர் பாடினிர் செலினே,நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே.—புறநானூறு, 109

அளிதோ தானே பேரிருங் குன்றேவேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதேநீலத்து இணைமலர் புரையும் உண்கட்கிணைமகட் கெளிதாற் பாடினள் வரினே.—புறநானூறு,111

உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசைவாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்றுசெழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டுதடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டியாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையாதுஆளிடூஉக் கடந்து வாளமர் உழக்கிஏந்துகோட் டியானை வேந்தர் ஓட்டியகடும்பரிப் புரவிக் கைவண் பாரி.

—நக்கீரர் பாட்டு - அகநானூறு, 78.

புலங்கந் தாக இரவலர் செலினேவரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும்உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்நிரைபறைக் குரீயீஇனம் காலைப் போகிமுடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கிரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப்படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு.—ஔவையார் பாட்டு - அகநானூறு, 303.

இவ்வரலாற்றுக்கு ஆதாரமான பாட்டு வருமாறு:திணை - வஞ்சி, துறை - துணைவஞ்சி.

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகிநெடிய என்னாது சுரம்பல கடந்துவடியா நாவின் வல்லாங்குப் பாடிப்பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்திஓம்பா துண்டு கூம்பாது வீசிவரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைபிறர்க்குத் தீதறிந் தன்றோ இன்றே, திறப்படநண்ணார் நாண அண்ணாந் தேகிஆங்கினி தொழுகின் அல்லது ஓங்குபுகழ்மண்ணாள் செல்வம் எய்தியநும்மோ ரன்ன செம்மலும் உடைத்தே.—புறநானூறு, 47.

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினேமாநிறை வில்லதும் பன்னாட் காகும்நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினேவாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினேகோடி யாத்து நாடுபெரிது நந்தும்மெல்லியன் கிழவ னாகி வைகலும்வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடுபரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

யானை புக்க புலம்போலத்தானும் உண்ணான், உலக மும் கெடுமே.—புறநானூறு, 184.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்கால்உண வாகச் சுடரொடு கொட்கும்அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்தன்னகம் புக்க குறுநடைப் புறவின்தபுதி அஞ்சிச் சீரை புக்கவரையா ஈகை உரவோன் மருக.நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்தேர்வண் கிள்ளி தம்பி, வார்கோற்கொடுமர மறவர் பெரும, கடுமான்கைவண் தோன்றல், ஐயம் உடையேன்ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்பார்ப்பார் நோவன செய்யலர், மற்றிதுநீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறிநின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே,தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்,இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக்காண்டரு மொய்ம்ப காட்டினை, ஆகலின்யானே பிழைத்தனன் சிறக்கநின் ஆயுள்;

மிக்குவரும் இன்னீர்க் காவிரிஎக்கர் இட்ட மணலினும் பலவே!—புறநானூறு, 43.

ப.64 சாதுவன் செய்த உபதேசம்:

மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்:பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்நல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும்அல்லறம் செய்வோர் அருநர கடைதலும்உண்டென உணர்தலின் உறவோர் களைந்தனர்;கண்டனை யாகெனக் கடுநகை எய்திஉடம்புவிட் டோடும் உயிர்உருக் கொண்டோர்இடம்புகும் என்றே எமக்கீங் குரைத்தாய்அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் அவ்வகைசெவ்வனம் உரையெனச் சினவா திதுகேள்உற்றதை உணரும் உடல்உயிர் வாழ்வுழி;மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடின்தடிந்தெரி யூட்டினுந் தான்உண ராதெனின்உடம்பிடைப் போனதொன் றுண்டென உணர்கபோனார் தமக்கோர் புக்கில்உண் டென்பதுயானோ வல்லேன் யாவரும் உணர்குவர்உடம்பீண் டொழிய உயிர்பல காவதம்கடந்துசேட் சேறல் கனவினும் காண்குவைஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினைபூண்ட யாக்கையிற் புகுவது தெளிநீ.

முந்நீர் வலம்புரி சோர்ந்தசைந்துவாய்முரன்று முழங்கி யீன்றமெய்ந்நீர்த் திருமுத் திருபத்தேழ்கோத்துமிழ்ந்து திருவில் வீசும்செந்நீர்த் திரள்வடம்போல் சிந்தாமணியோதி உணர்ந்தார் கேட்டார்இந்நீர ராயுயர்வர் ஏந்துபூந்தாமரையாள் காப்பா ளாமே. (3143)

சங்க கிரிதுருக் கத்திற் சிறையினிற் சார்ந்திடுநாள்சங்கை யிலாதொரு பாவாணன் சென்று தமிழுரைக்கஅங்கண் இருந்துதன் இல்லாள் கழுத்தில் அணிந்திருக்கும்மங்கலி யந்தனைப் பெற்றளித் தான்கொங்கு மண்டலமே. (66)

வாணன் உரைத்திட மால்ராமப் பையன் மனமகிழ்ந்துவேணது கேளெனச் சம்பந்தச் சர்க்கரை வேளினுமிவ்வீணரைக் காவல் விடீரென்று கூறிட விட்டிடலும்தாணுவென் றிம்முடிக் காணிக்கைச் சாசனம் தந்தனரே

என்பது ஒரு தனிப்பாடல்; இச்சதகப் பதிப்பாசிரியர் ஸ்ரீ தி.அ.முத்துச்சாமிக் கோனார் மேற்கோள் காட்டியது.

அம்புவி மெச்சுகுன் றத்தூரில் ஆயரில் ஆய்கலைதேர்எம்பெரு மானைக் கொடுதக்கை என்னும் இசைத்தமிழால்நம்பும் இராம கதையைஅன் பாக நவிலஇசைவம்பவிழ் தார்ப்புயன் நல்லய னுங்கொங்கு மண்டலமே.குறுமுனி நேர்தமிழ் ஆழியுண் வாணர் குழாம்வியப்பஅறிவில் இளைஞரே ஆண்மக்கள் என்ன அறுதியிட்டசிறிய இடைச்சிஎம் பெருமான் மனைவி சிறந்துவளர்மறுவறு சங்க கிரிசேர் வதுகொங்கு மண்டலமே.—கொங்கு மண்டல சதகம், 63,64.

Comments

Loading comments…