சிறப்புரை

மருத்துவ களஞ்சியப் பேரகராதி

வறுமைச் குழலுக்கு ஆளான குடும்பத்தில் பிறந்துபெற்றோர் செய்தொழிலில் தானும் உழைத்தவாரே,பள்ளியில் சேர்ந்து படித்திடத் தானே வலியச் சென்று சேர்ந்து,ஓய்வு வாய்த்த போதெல்லாம் ஏடுகள் பல பயின்று,இனம் பிள்ளையாய்த் தந்தை பெரியாரின் பேச்சினைக் கேட்டு,சமூகத்தின் மூடநம்பிக்கைகளை மறுக்கும் துணிவெய்தி,அறிஞர் அண்ணாவின் உரையினைக் கேட்டு ஊக்கங்கொண்டு,பள்ளியிலேயே கட்டுரை வரைவதில் வல்லவனாகி,பின்னர் பேச்சாற்றலும் காட்டிப் பரிசுகள் பல பெற்று,தமிழறிஞர் பலராலும் பாராட்டப்பட்ட மாணவ மணியாகி,அண்ணாமலை பல்கலைக் கழகம் சார்ந்து தமிழின் முதுகலைஞனாகி,தமிழ்த் தொண்டே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு,வாய்த்த கல்லூரி ஆசிரியர் பணியையும் ஊதியத்தையும் துறந்துதமிழ் ஆக்கத்திற்கே முழுநேரம் உழைத்திடும் உறுதி பூண்டு,ஏடுகட்கு எழுதுவதையே வாழ்க்கைத் தொழிலாக ஏற்று,தென்மொழிகள் புத்தக நிறுவனத்தின் பணியின் சேர்ந்து,அறிவியல் தொழில்நுட்ப நூல்களும் கலை ஏடுகளும் வெளிவரமூலநூலைச் சீர்செய்து மெய்ப்புத் திருத்துவதில் திறன்காட்டி,முத்திங்கள் இதழான 'புத்தக நண்ப'னைச் சீருற வெளியிட்டு,யுனெஸ்கோவின் அறிவியல் பேழையாம் 'கூரியர்' ஏட்டின்தமிழ்ப்பதிப்பை வெளியிடும் பணியிலும் பங்கேற்றுத்தன் மதிநுட்பம் காட்டியும் நிறுவனத்தார் மதிப்பைப் பெற்றும்பொறுப்பாசிரியராய் உயர்ந்து, கால் நூற்றாண்டாகஅதன் செவிலித் தாயாகச் சீராட்டி வளர்த்து வருபவர்தான்என் நண்பர் மணவை முஸ்தபா என்னும் தமிழ் மறவர்

சைக்கிள் - ஈருருளி, மிதிவண்டி எனவும்,பிளசர் கார் - மகிழுந்து, சீருந்து எனவும்,பஸ் - பேருந்து, பயணி உந்து எனவும்,டிரெயின் - தொடர்வண்டி - நீராவி வண்டி எனவும்,ஏரோபிளேன் - விமானம், வானூர்தி எனவும்.

Comments

Loading comments…