சிறுபாணன் சென்ற பெருவழி

"தொன்மா விலங்கைக் கருவொடு பெயரியநன்மா விலங்கை மன்னருள்ளும்மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்"

"இழுமென ஒலிக்கும் புனலம் புதவிற்பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்இல்லோர் சொன்மலை நல்லியக் கோடன்"

"பாடல் சான்ற நெய்தல் நெடுவழிமணிநீர் வைப்பு மதிலொடு பெயரியபனினீர் படுவிற் பட்டினம்"

"குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்செல்லிசை நிலைஇய பண்பின்நல்லியக் கோடன்"

"திறல்வேல் நுதியில் பூத்த கேணிவிறல்வேல் வென்றி வேலூர் எய்தின்உறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பைஎயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறுதேமா மேனிச் சில்வளை ஆயமொடுஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்."

"மருதஞ் சான்ற மருதத் தண்பணைஅந்தணர் அருகா அருங்கடி வியநகர்அந்தண் கிடங்கின் அவனாமூ ரெய்தின்வலம்பட நடக்கும் வலிபுணர் எருத்தின்உரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கைபிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்பவிழுங்கா லுலக்கை யிருப்புமுகந் தேய்த்தவவைப்பு மாணரிசி யமலைவெண் சோறுகவைத்தாள் அலவன் கலவையோடு பெருகுவிர்."

Comments

Loading comments…