இரத்தல்

அறிவுக் கனிகள்

815. இரப்போரைக் குதிரைமேல் ஏற்றி வைத்தால் குதிரை இறக்கும்வரை சவாரி செய்து கொண்டிருப்பர்.

ஷேக்ஸ்பியர்

816.உண்மையான இரவலனே உண்மையான அரசனாவான்.

லெஸ்லிங்

817.இரவலனாய் வாழ்பவன் இறைவனாயிருக்க விரும்புகின்றான். இறைவனாய் வாழ்ந்தவன் இரவலனாய் வாழவில்லை என்று வருந்துகின்றான்.

ஹால்

நீட்சே

818.இரவலரை இல்லாமல் செய்யவேண்டும், அவர்க்குக் கொடுப்பதும் வேதனை தருகிறது, கொடுக்காமலிருப்பதும் வேதனை தருகிறது.

நீட்சே

819.இரப்போருக்கு ஈபவர் இரப்போர் ஆக்குபவர்.

ஹேவோர்ட்

Comments

Loading comments…