704. தான் செல்வன் என்று அறியாதவனே வறிஞன்.
பால் ரிச்சர்ட்
705. உலக உடைமைகளை ஒரு பொருளாக மதியாதவரே உண்மையான செல்வர்.
பால் ரிச்சர்ட்
706.வறிஞர் என்பவர் கொஞ்சமாக உடையவர் அல்லர். அதிகமாக ஆசைப்படுபவரே யாவர்.
ஆவ்பரி
707.வறுமையினும் பெருங்கேடுமில்லை; செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை.
கதே
708.வறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும்.
பெர்னார்ட்ஷா
709. வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது.
மாஜினி
710.எவன் பாக்கியசாலி? மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டு லயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன்.
ரஸ்கின்
711.யோக்கியமான வறிஞர் சில சமயமேனும் வறுமையை மறந்திருக்க முடியும். ஆனால் யோக்கியமான செல்வரோ வறுமையை ஒரு நாள் கூட மறந்திருக்க முடியாது.
செஸ்டர்ட்டன்
712.செல்வமே வறுமைக்குக்காரணம்; குவியல் உயர உயர குழி ஆழமாகிக்கொண்டே போகும். ஒருவனுடைய மிதமிஞ்சிய ஊண் மற்றொருவனுடைய பட்டினியாகும்.
பால் ரிச்சர்ட் 713. கிறிஸ்து வறுமையை ஒரு அறமாக வகுத்தார்; கிறிஸ்தவர் அதை ஒரு குற்றமாகக் கருதுகின்றனர்; ஆனால் வருங்காலத்தவரோ செல்வத்தையே ஒரு குற்றமாக இகழ்வர்.
பால் ரிச்சர்ட்
714.இயேசு கூறும் அதர்மச் செல்வம் எது? அனைவர்க்கும் சொந்தமாயிராத சகல செல்வமும் அதர்மச் செல்வமேயாகும்.
பால் ரிச்சர்ட்
715.குறையாத செல்வமும் குலையாத சமாதானமும் கோழைகளைக் கோடிக்கணக்காய்ப் பெற்றுத்தள்ளும். வறுமையே என்றும் மனவுறுதியின் தாய்.
ஷேக்ஸ்பியர்
716.வறுமைதான் கலாதேவியின் பிதிரார்ஜிதம்.
பர்ட்டன்
717.வறுமை என்பது அஞ்சியவரை அடிக்கவரும் போக்கிரியாகும். ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது நல்ல குணமுடையதே.
தாக்கரே
718.வறிஞரே பாக்கியசாலிகள். ஏனெனில் அவரோடுதான் வறிஞர் எப்பொழுதும் வதிந்து கொண்டிருப்பதிலர்.
செஸ்டர்ட்டன்
719.நாணங்கொள்ள வேண்டிய விஷயம் . வறிஞனாயிருப்பதன்று, வறிஞனாயிருக்க நாணங்கொள்வதே.
பழமொழி
720.அனேக சமயங்களில் வறுமை ஆடம்பரங்களிலும் அளவுகடநத செலவுகளிலும் ஒளித்து வைக்கப்படும்.
ஜாண்ஸன்
Comments
Loading comments…