ஆனையும் பூனையும்
கோழி கோழி கொ கொ கொகொண்டைச் சேவல் கொக் கரக்கோகுயிலே குயிலே கூ கூ கூகொஞ்சுங் கிளியே அக்கக்காகாக்கை காக்கை கா கா காகத்துங் குருவீமர் மெய் மெய் மெய்அன்பாய்த் தீனி வை வை வைமாடே மாடே மா மா மாவண்டிக் குதிரை ஹீ ஹீ ஹீஆடே ஆடே மே மே மேஅசையும் எருமை ஙொய் நொய் நொய்பூனை பூனை மியாவ் மியாவ் மியாவ்பூச்சி நாயே லொள் லொள் லொள்அவைநம் தோழர் மெய் மெய் மெய்அன்பாய்த் தீனி வை வை வை.
எத்தனை பெரிய யானை—அதற்கு
எத்தனை சின்ன வால்!
குத்தும் வெள்ளைத் தந்தம்—பெரிய
குன்றைப் போல வயிறு!
தூணைப் போல கால்—முன்னால்
தொங்கி ஆடும் மூக்கு!
காது ரண்டும் முறம்போல்—அதன்
கண்கள் சின்ன வட்டம்
எத்தனை பெரிய யானை—அதற்கு
எத்தனை சின்ன வால்!
அம்மா அம்மா கன்றுக் குட்டீஆரைக் கூப்பிட்டாய் கன்றுக் குட்டீசும்மா சும்மா கத்தாதேஅம்மா சீக்கிரம் வந்திடுவாள்.
அம்மா அம்மா கன்றுக் குட்டீஆரைக் கூப்பிட்டாய் கன்றுக் குட்டீபச்சைப் புல்லு நான் தருவேன்பசியைப் போக்கிக் கொள்ளாயோ?
அம்மா அம்மா கன்றுக் குட்டீஆரைக் கூப்பிட்டாய் கன்றுக் குட்டீஅம்மா சீக்கிரம் வந்திடுவாள்அன்பாய்ப் பாலும் தந்திடுவாள்.
கட்டு மரம் போகுது பார் ;கடலில் நீச்சம் போடுதுபார் !பட்டுப் பூச்சி யிறகைப் போலப்பாய் விரித்துப் பாயுது பார் !அலைகள் மேலே தாவுது பார்;ஆட்டம் ஆடிக் காட்டுது பார் !மலையைப் போல அலை வந்தாலும்மலைக் காமல் தாண்டுது பார் !தொடு வானம் தொட்டுக்கொண்டுதூரத் திலே செல்லுது பார் !அடை யாளம் தெரியா மல்அத்தனை சின்ன தாகுது பார் !கட்டு மரம் போகுது பார் ;கடலை உழுது தள்ளுது பார் !எட்டி எட்டி மீன் பிடிக்கஏலே லமே போடுது பார் !
ஆனையொன்று வந்ததாம்அசைந்தசைந்து நடந்ததாம்பூனையொன்று பார்த்ததாம்பதுங்கிக் கிட்டச் சென்றதாம்ஆனை மேலே ஏறியேஅழகாய்ப் பவனி வந்திடப்பூனை யாசை கொண்டதாம்பதுங்கிப் பதுங்கிச் சென்றதாம்ஆனை காதை ஆட்டியேஅங்குமிங்கும் பார்த்ததாம்தூணைப் போலக் காலிலேதொத்தியேற எண்ணியேபூனை பதுங்கி யானையின்வாலின் பக்கம் போனதாம்ஆனை தும்பிக் கையினைஆட்டிச் சத்தம் செய்ததாம்பூனை பயந்து நடுங்கியேபாய்ந்து ஓடி மறைந்ததாம்ஆனையொன்று வந்ததாம்அசைந்தசைந்து சென்றதாம்.
இந்து மாமா வாவாசந்த மாமா வாவா
பொங்கும் கடல் மேலேதங்கக் குடும்பம் போலே
இந்து மாமா வாவாசந்த மாமா வாவா
வானத்திலே ஊர்ந்துபாலைப்போலே காய்ந்து
மீனக் கூட்டம் சூழ்ந்துமேகக் கூட்டம் பாய்ந்து
இந்து மாமா பந்து மாமாசந்த மாமா வாவா.
மீனே மீனே மின்னும் மீனே
தண்ணீ ருக்குள் தாவும் மீனே
கெண்டை அவுரி கெளுத்தி மீனே
எந் நேரமும்நீ தண்ணீ ருக்குள்
மூழ்கியிருந்தால் மூச்சடைக் காதோ?
எந்நே ரமும் தண்ணீர் வீட்டில்
குஞ்சுக ளுடனே கூடியி ருந்தால்
சொக்கா யில்லை துணிகளு மில்லை
கம்பளி யாடைகள் கட்டவு மில்லை
கூதல் வந்தால் ஏதுநீ செய்வாய்?
வட்டமிடுங் கருடா-திருமால்
வாகனமாங் கருடா
பட்டமதைப் போலே-அசையாது
பறந்து மிதக்குங் கருடா
சங்கு முகத்துக் கருடா-தரைமேல்
தாவிப்பாயும் கருடா
எங்கள் தாத்தா கண்டால்-உடனே
எழுந்து வணங்கும் கருடா
ஐப்பசி மாதம் வந்தது
அடை மழையும் பேயுது
ஆட்டுக்குட்டீ ஆட்டுக்குட்டீ
வீட்டுக்குள்ளே ஓடிவா.
சும்மா நீயும் மழையிலே
துள்ளித் துள்ளி ஓடாதே
அம்மா கண்டால் வைவாளே
ஆட்டுக்குட்டீ ஆட்டுக்குட்டீ
டக் டக் கடிகாரம்
தட்டத்திலே பணியாரம்
குட்டிக் குட்டிச் சுண்டெலி
எட்டி எட்டிப்-பார்க்குதாம்
தட்டத்திலே கண்ணை வைத்துக்
கிட்டக் கிட்ட நகருதாம்
டண் டண் கடிகாரம்
தாவியோடுதாம் சுண்டெலி !
பட்டம் பறக்குது பார்பாய்ந்துமேகம் சுற்றுது பார்வட்டமிட்டுப் பறவைபோலவானில் ஓங்கி ஆடியாடிப்பட்டம் பறக்குது பார்
கட்டிநாங்கள் விட்ட பட்டம்காற்றில் ஏறிப் பாயும்பட்டம்குட்டிக்கரணம் போடும் பட்டம்கோணல் வாலை ஆட்டும் பட்டம்பட்டம் பறக்குது பார்
பட்டம் போலே நானும் மேலேபறந்து பறந்து திரியவேணும்கட்டிலாது வானவெளியில்கருடன்போல மிதக்கவேணும்பட்டம் பறக்குது பார்
Comments
Loading comments…