நிப்பான் நாட்டுக் கவிதை

காட்டு வழிதனிலே

காதலால் வாடி இன்னுயிர்தேய்த்தேன் என்றால்அவள் துடிப்பாளே! ஐயகோ!ஈரமில்லா உயிரே

வெறுத்தேன் நான் உனை.

எரிதனில் பொங்கும்எழில் நனி பெருகும் பங்கயமே!உனைப் போன்ற உயிரழகுக்கன்னிகளைக் காணுங்கால்-நானோ

நெஞ்சம் புழுங்குகின்றேன்.

வழியில்லா வாரிதியில்செல்லும் சிறு தோணிக்கும்இளங் காற்றில் ஒரு நல்ல

வழிகாட்டி காண்கிறதே!

இளவேனில் வந்தவுடன்புள்ளினங்கள் ஆயிரமாய்ப் பாடி நிற்கும்;எல்லாம் உருமாறி,இளமை எய்தி எழில் காட்டும்;என்னை மட்டும் முதுமை கவ்வும்.

அவனியிலேவிசுப்பினிலேகடவுளரே இல்லையெனில்காதலியைக் காணாது

என்னுயிர் தான் நீங்கிடுமே.

ஆஹா! பேரெழில் இரவுதேய்ந்து கழிகின்றதே!என் துன்பம் எழுதும் தரமாமோ?இவ்விரவைத் தூங்கித் தொலைப்போரைஎண்ணிக்

கன வருத்தம் கொள்ளுகின்றேன்.

காதலா, நாளை நீ என்னை மறந்திடுவாய்;இன்று நீ என்னை நினைந்துள்ள போதே

என்னுயிர் தான் ஏகாதோ!

மனைவிபால் அன்புமிதந்துள்ள தம்மாஆஹா... நான் குடிக்கும் தண்ணீரில்அவளுடைய நளின முகம் காண்கிறதேஒரு கணமும் அவளை

மறக்க முடியாதே.

Comments

Loading comments…