அணிற்பிள்ளை

மழலை அமுதம்

கொறித்துக் கொறித்துத் தின்னுமாம்குதித்துக் குதித்து ஆடுமாம்பறித்துப் பறித்துப் பழங்களைபாங்காய் உண்ணும் அழகைப் பார் !இரண்டு கைகளால் எடுத்துமேஇங்கும் அங்கும் பார்க்குமாம்பருந்து வந்தால் பாய்ந்தோடும்பக்க மரங்களில் பதுங்கிடும்வாயிலின் முன்னால் ஓடிடும்வாலைத் தூக்கியே ஆடிடும்ஆயிரம் அழகு அணிலைப் பார் !அன்பாய் என்னுளம் கவர்ந்திடும்முன்னுள் சேதுவை மேடு செய்யமுயன்றான் இராகவன் அந்நாளில்கல்லும் மலைகளும் கொணர்ந்தங்கேகட்டும் முயற்சியில் பங்கு பெறகடமை அணிலும் தான் புரியகல்லும் மணலையும் போட்டதுவாம்கண்டான் இராமன் மகிழ்ந்தெடுத்துகையால் அன்புடன் தடவினனேகைவிரல் பட்ட இடத்தினிலேகம்பிகள் தங்கமாய்த் தோன்றினவே.

Comments

Loading comments…