கண்ணன்

மழலை அமுதம்

1. கண்ணன் எங்கள் கண்ணனாம்கடல் நீல வண்ணனாம்வெண்ணெய் உண்ணும் கண்ணனாம்வேணு கானக் கண்ணனாம்

2. கன்றை மேய்த்து வந்தவன்காளிய நடனம் புரிந்தவன்குன்றை ஏந்திக் காத்தவன்கோகுல மைந்தன் கண்ணனாம்.

3. அன்பர் யார்க்கும். நல்லவன்அருள் சுரந்தே காப்பவன்துன்பம் போக்க வல்லவன்தொழுது போற்றி வணங்குவோம்.

Comments

Loading comments…