அழகும் முத்தும்
தமிழின்பம்
"மேனியெல்லாம் கண்ணுறலால் வேள்விரும்பும்தன்மையினால்ஆணபசுந் தோகையினால் ஆடலினால் - மீனவன்நேர்
மானபரா! நெல்லைநகர் வாழுமுத்துச் சாமிமன்னா!கானமயில் ஒப்பாம் கரும்பு"
"காய்சினம்இல் லாதான் கருணைமுத்துச் சாமிவள்ளல்வாய்மையுளான் பாடி வருவோர்க்குத் - தாய்நிகர்வான்எல்லையில்லா மாண்பொருளை ஈவான் இவனிடத்தில்இல்லையென்ற சொல்லே இலை"
"அங்கங் களவால் அதுகண் டுதைப்புறலால்எங்கும் மிதியடியென் றேசொல்லால் - வெங்கல்கரடுமுட்களு சாததினால் காமர்முத்துச் சாமிதிருடனைஒப் பாகும் செருப்பு"
"காராள மாமரபிற்கன்னன்முத்துச் சாமியெனும்சீராளன் வாய்ச்சொற்கள்தெள்ள முதம்அம்மான!சீராளன் வாய்ச்சொற்கள்தெள்ளமுதம் ஆமாயின்ஆராய்ந்து தேவர்கள் உண்டாடுவரோ அம்மானை!அருமைப் புலவர்கள்கொண்டாடுவா ரம்மானை!"
"மாணுறஎல் லாம்படித்தமன்னன்முத்துச் சாமிவள்ளல்ஆண்மைத் திறத்தில்மதயானைகா ணம்மானை!ஆண்மைத் திறத்தில்மதயானையென்ட தாமாயின்காணுமிவன் அங்கங்கருமையோ அமமானைகற்றவர்க்கங் கங்கருமைகாட்டுவான் அம்மானை"
"சில்லென்று பூத்த செழுமலர்ப்பூங் காவனத்தில்வில்லொன்று செங்கையுடன் மேவி வரும்போதில்"
"ஊமையோ, வாயிலையோ ஒர்வசனம் நீஉரைத்தால்தீமையோ வாய்திறந்து செப்பினால் ஆகாதோ'
"வெள்ளரிக் காயா, விரும்பும்அவ ரைக்காயாஉள்ளமிள காயாஒருபேச் கரைக்காயா"
"வாரா திருந்தால் இனிநானுன்வடிவேல் விழிக்கு மையெழுதேன்மதிவாள் துதற்குத் திலகமிடேன்மணியால் இழைத்த பணிபுனையேன்
பேரா தரத்தி னொடுபழக்கம்பேசேன் சிறிதும் முகம்பாரேன்பிறங்கு சுவைப்பால் இனிதுாட்டேன்பிரிய முடன் ஒக் கலையில்வைத்துத்
தேரார் வீதி வளங்காட்டேன்செய்ய கனிவாய் முத்தமிடேன்திகழு மணித்தொட் டிலில்ஏற்றித்திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்தவழும் குழந்தாய் வருகவே!சாலிப் பதிவாழ் காந்திமதித்தாயே வருக! வருகவே!"
Comments
Loading comments…