தமிழும் சைவமும்

தமிழின்பம்

"ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ"

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே"

"எவ்வுயிரும் பராபரன்சந் நிதிய தாகும்இலங்கும்.உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில்"

"கொல்லா விரதம் குவலயமெ லாம்ஓங்கஎல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே"

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்”

"அறிவினால் மிக்க அறுவகைச் சமயம்அவ்வவர்க்கு ஆங்கே ஆரருள் புரிந்து"

"விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயம் செய்தேஎரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்"

"குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும்பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும்இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே"

"சாத்தி ரம்பல பேசும்ச ழக்கர்காள்கோத்தி ரமும்குல மும்கொண்டு என்செய்வீர்"

"சாதிகுலம் பிறப்பென்னும் கழிப்பட்டுத் தடுமாறும்ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு"

"அங்கமெல்லாம் குறைந்தழுகு தொழுநோயராய்ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராயின்அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே"

Comments

Loading comments…