பாரியும் மாரியும்
தமிழின்பம்
"பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லைநாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்தபரந்தோங்கு சிறப்பிற் பாரி"
"பாரி பாரி என்றுபல ஏத்திஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்பாரி ஒருவனும் அல்லன்மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே"
“அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்குன்றும் கொண்டார்யாம் எந்தையு மிலமே"
"மிடுக்கி லாதானை வீம னேவிறல்விசய னேவில்லுக் கிவனென்றுகொடுக்கி லாதானைப் பாரி யேயென்றுகூறினும் கொடுப் பாரிலைபொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்எந்தைபுகலூர் பாடுமின் புலவீர்காள்அடுக்கு மேல்அமரர் உலக மாள்வதற்குயாதும் ஐயுற வில்லையே”
Comments
Loading comments…