சுந்தர காண்டம்

கம்பராமாயணம்

‘ஆவியந்துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்;தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்;தேவு தெண்கடல் அமிழ்துகொண்டு அனங்கவேள் செய்தஒவியம் புகைஉண்டதே ஒதுக்கின்ற உருவாள்'

“வன்மருங்குல்வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்;கல்மருங்கெழுந்து என்றும் ஒர்துளிவரக் காணாநன் மருந்துபோல் நலனற உணங்கிய நங்கை,மென்மருங்குல்போல்வேறுளஅங்கமும் மெலிந்தாள்”.

“மெய்த்திருப்பதம் மேவுஎன்ற போதினும்இத்திருத்துறந் ‘து’ ஏகென்ற போதினும்சித்திரத்தின் அலர்ந்தசெந் தாமரைஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.”

“கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்னகர்அண்டர் நாயக! இனித் தவிர்தி ஐயமும்பண்டுளதுயரும்என்று அனுமன் பன்னினான்.”

“விற்பெரும் தடந்தோள் வீர!வீங்கு நீர் இலங்கை வெற்பில்நற்பெரும் தவத்தள் ஆயநங்கையைக் கண்டேன் அல்லேன்;இற்பிறப்பு என்பது ஒன்றும்இரும்பொறை என்பது ஒன்றும்கற்பெனப் படுவதொன்றும்களிநடம் புரியக் கண்டேன்”

Comments

Loading comments…