யுத்த காண்டம்
கம்பராமாயணம்
“வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடுஇலங்கை புக்கான்”
“வான் நகும் மண்ணும் எல்லாம் தாம் நகும்;நெடுவயிரத் தோளான்தான்நகும் பகைவர் எல்லாம் நகுவர்என்றுஅதற்கு நாணான்வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்இயல்மிதிலை வந்தசானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்பு கின்றான்’
“உறங்குகின்ற கும்ப கன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்இறங்கு கின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலேஉறங்கு வாய் உறங்கு வாய்இ னிக் கிடந்து உறங்குவாய்”
“நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்போர்க்கோலம் செய்துவிட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன்;தார்க்கோல மேனிமைந்த என் துயர்தவிர்த்தியாயின்கார்க்கோல மேனியாயனைக் கூடுதி கடிதிள்”
“ஆகுவது ஆகும் காலத்து; அழிவதும் அழிந்து சீந்திப்போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்;சேகுஅறத் தெளிந்தோர் நின்னில் யார்உளர்? வருத்தம் செய்யாது,ஏகுதி, எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்”
“வெள்எருக்கஞ் சடைமுடியான் வெற்புஎடுத்ததிருமேனி மேலும்கீழும்எள்இருக்கும் இடன்இன்றி உயிர் இருக்கும்இடன்நாடி இழைத்த வாறோ?கள்இருக்கும் மலர்க்கூந்தல் சானகியைமனச்சிறையில் கரந்த காதல்உள்இருக்கும் எனக்கருதி உடல்புகுந்துதடவியதோ? ஒருவன் வாளி”
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்தபரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்றவிரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!
வண்மைஇல்லை ஒர் வறுமை இன்மையால்;திண்மைஇல்லை நேர் செறுதர் இன்மையால்;உண்மைஇல்லை பொய்யுரை இல்லாமையால்;வெண்மை இல்லை பல்கேன்வி மேவலால்
Comments
Loading comments…