வரந்தரு காதை
சிலம்பின் கதை
“இடுக்கண் வருங்கால் நடுக்கம் அடையாதீர்;தெய்வத்தைப் போற்றுவிர்; ஞானிகளை மதிப்பீர்;பொய்பேசுவதைத் தவிர்ப்பீர்; புறம் கூறுதல் ஒழிப்பீர்;ஊன் உணவு ஒழிப்பீர்; உயிர்க் கொலை செய்யற்க;தானம்பல செய்க; தவம்பல ஏற்க;செய்ந் நன்றி மறவாதீர்; தீயார் நட்பு இகழ்க;பொய்ச்சான்று கூறாதீர்; மெய்ம்மை விட்டு அகலாதீர்;அறவோரை அணுகுக; பிறவோரை விலக்குக;பிறன் மனைவியை நயக்காதீர்; உயிர்களுக்கு ஊறு செய்யாதீர்;இல்லற வாழ்வு இனியது; ஒழுக்கம் ஒம்புக;கள், காமம், பொய், பயனற்ற சொற்கள்இவை தீமை பயக்கும்; இவற்றை நீக்கி வாழ்க;இளமையும், யாக்கையும், செல்வமும் நில்லா;உள்ள நாட்களில் உறுதிகளைத் தேடுக;இதுவே வீட்டு நெறி; பயனுள்ள வாழ்க்கை”
Comments
Loading comments…