அறத்துப்பால்

நாலடியார் - செய்யுளும் செய்திகளும்

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்டமறுசிகை நீக்கியுண் டாரும் வறிஞராய்ச்சென்றிரப்பர் ஒரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்றுண்டாக வைக்கற்பாற் றன்று. ⁠1

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுபகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்சகடக்கால் போல வரும்.⁠2

யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்சேனைத் தலைவராய்ச் சென்றோரும்ஏனைவினைஉவப்ப வேறாகி வழ்வர்தாம் கொண்டமனையாளை மாற்றார் கொள.⁠3

நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்துஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்வந்தது வந்தது கூற்று. ⁠4

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்பின்னாவ தென்று பிடித்திரா முன்னேகொடுத்தார் உயப்போவர் கோடில்திக் கூற்றம்தொடுத்தாறு செல்லும் சுரம். ⁠5

இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை;-ஆற்றப்பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின், நாளைத்தமீஇம் தழிஇம் தண்ணம் படும். ⁠6

தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்கூற்றம் அளந்துதும் நாளுண்ணும்; ஆற்றஅறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்பிறந்தும் பிறவாதா ரில். ⁠7

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாதபுல்லறி வாளர் பெருஞ்செல்வம் எல்லில்கருங்கொண்மு வாய்திறந்த மின்னுப்போல் தோன்றிமருங்கறக் கெட்டு விடும். ⁠8

உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்துன்னருங் கேளிர் துயர்களையான்-கொன்னேவழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆஇழந்தான் என் றெண்ணப் படும். ⁠9

உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்கெடாஅது நல்லறமும் செய்யார்-கொடாஅதுவைத்தீட்டி னார்இழப்பர்; வான்தோய் மலைநாட!உய்த்தீட்டும் தேனீக் கரி. ⁠10

2. இளமை நிலையாமைநரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீராமன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றிஇன்னாங் கெழுந்திருப் பார். ⁠11

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்அற்புத் தளையும் அவிழ்ந்தன; உட்காணாய்;வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததேஆழ்கலத் தன்ன கலி. ⁠12

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்பல்கழன்று பண்டம் பழிகாறும்-இல்செறிந்துகாம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையேஏம நெறிபடரு மாறு. ⁠13

தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டுன்றாவீழா இறக்கும் இவள்மாட்டும்-காழ்இலாமம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல்அம்மனைக்கோல் ஆகிய ஞான்று. ⁠14

எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்தனக்குத்தாய் நாடியே சென்றாள்;-தனக்குத்தாய்ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்டேகும் அளித்திவ் வுலகு. ⁠15

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணிமுறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்கமறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சிஅறிவுடை யாளர்கண் இல். ⁠16

பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை-நனிபெரிதும்வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்கோல்கண்ண ளாகும் குனிந்து ⁠17

பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனைஇருசிகையும் உண்டீரோ என்றுவரிசையால்உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்எண்ணார் அறிவுடை யார். ⁠18

மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாதுகைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்மின்;முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்நற்காய் உதிர்தலும் உண்டு ⁠19

ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் பீட்பிதுக்கிப்பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. ⁠20

3. யாக்கை நிலையாமை

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்தலைமிசைக் கொண்ட குடையர்-நிலமிசைத் துஞ்சினார்என்றெடுத்துத் துற்றப்பட் டாரல்லால்எஞ்சினார் இவ்வுலகத் தில். ⁠21

வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்வீழ்நாள் படாஅ தெழுதலால்-வாழ்நாள்உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்நிலவார் நிலமிசை மேல். ⁠22

மன்றம் கறங்க மணப்பறை யாயினஅன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றைஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறேவலிக்குமாம் மாண்டார் மனம். ⁠23

சென்றே எறிப ஒருகால்; சிறுவரைநின்றே எறிப பறையினை-நன்றேகாண்முக்காலைக் கொட்டினுள் முடித்தீக் கொண்டுஎழுவர்செத்தாரைச் சாவார் சுமந்து. ⁠24

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் மணங்கொண்டீண்டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமேடொண்டொண்டொ டென்னும் பறை. ⁠25

நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;தோற்பையுள் நின்று தொழிலறச் செய்துட்டும்கூத்தன் புறப்பட்டக் கால். ⁠26

படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித்-தடுமாற்றம்தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரைநேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல். ⁠27

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்றயாக்கையா லாய பயன்கொள்க;-யாக்கைமலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கேநிலையாது நீத்து விடும். ⁠28

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணிஇன்னினியே செய்க அறவினை;-இன்னினியேநின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்சென்றான் எனப்படுத லால். ⁠29

கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றிவாளாதே போவரால் மாந்தர்கள்-வாளாதேசேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போலயாக்கை தமர்க்கொழிய நீத்து. ⁠30

4.அறன் வலியுறுத்தல்

அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றிமிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்தவத்தால் தவஞ்செய்யா தார். ⁠31

ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ, அறமறந்துபோவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே-ஓவாதுதின்றுளுற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள்சென்றன செய்வ துரை. ⁠32

வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிராமனத்தின் அழியுமாம் பேதை-நினைத்ததனைத்தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்தெல்லை இகந்தொருவு வார். ⁠33

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்பெரும்பயனும் ஆற்றவே கொள்க;-கரும்பூர்ந்தசாறுபோல் சாலவும் பின் உதவி மற்றதன்கோதுபோல் போகும் உடம்பு. ⁠34

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்வருங்கால் பரிவ திலர். ⁠35

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாதுபின்றையே நின்றது கூற்றமென் றெண்ணிஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்மருவுமின் மாண்டார் அறம்.⁠36

மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்எத்துணையும் ஆற்றப் பலவானால்-தொக்கஉடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்கிடந்துண்ணப் பண்ணப்படும். ⁠37

உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டிஇறப்ப நிழற்பயந் தாஅங்-கறப்பயனும்தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்வான்சிறிதாப் போர்த்து விடும். ⁠38

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்வைகலை வைத்துணரா தார். ⁠39

மான அருங்கலம் நீக்கி இரவென்னும்ஈன இளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தால்ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்புநீட்டித்து நிற்கும் எனின். ⁠40

5.தூயதன்மை

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர்நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை-யாக்கைக்கோர்ஈச்சிற கன்னதோர் தோல்ஆறினும் வேண்டுமேகாக்கை கடிவதோர் கோல். ⁠41

தோல்போர்வை மேலும் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்மீப்போர்வை மாட்சித் துடம்பானால்-மீப்போர்வைபொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்பைம்மறியாப் பார்க்கப் படும். ⁠42

தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிபொய்க்கோலம் செய்ய ஒழியுமே-எக்காலும்உண்டு வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்கண்டுகை விட்ட மயல். ⁠43

தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்றுகண்ணில்புன் மாக்கள் கவற்ற-விடுவெனோஉண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்னகண்ணீர்மை கண்டொழுகு வேன். ⁠44

முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்கல்லாப்புன் மாக்கள் கவற்ற-விடுவெனோஎல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்கபல்லென்பு கண்டொழுகு வேன். ⁠45

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்தொடரும் நரம்பொடு தோலும்-இடையிடையேவைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள். ⁠46

ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப்-பேதைபெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்தகருத்தோலால் கண்விளக்கப் பட்டு. ⁠47

பண்டம் அறியார் படுசார்ந்தும் கோதையும்கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல்-மண்டிப்பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்முடைச்சாகா டச்சிற் றுழி. ⁠48

கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி-ஒழிந்தாரைப்போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்றுசாற்றுங்கொல் சாலச் சிரித்து. ⁠49

உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச்-செயிர்தீர்ந்தார்கண்டிற் றிதன்வண்ண மென்பதனால் தம்மையோர்பண்டத்துள் வைப்ப திலர். ⁠50

6. துறவு

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்தவத்தின்முன் நில்லாதாம் பாவம்-விளக்குநெய்தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினைதீர்விடத்து நிற்குமாம் தீது.⁠51

நிலையாமை நோய்முப்புச் சாக்காடென் றெண்ணித்தலையாயார் தங்கருமம் செய்வார்-தொலைவில்லாச்சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்பித்தரின் பேதையார் இல்.⁠52

இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்செல்வம் வலிஎன் றிவையெல்லாம்-மெல்லநிலையாமை கண்டு நெடியார் துறப்பர்தலையாயார் தாம்உய்யக் கொண்டு.⁠53

துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளைஇன்பமே காமுறுவர் ஏழையார்-இன்பம்இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறடைவொழிந்தார் ஆன்றமைந் தார். ⁠54

கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னேபிணியொடு முப்பும் வருமால்-துணிவொன்றிஎன்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோநன்னெறி சேர நமக்கு. ⁠55

மாண்ட குணத்தோடு மக்கட்பே றில்லெனினும்பூண்டான் கழித்தற் கருமையால்-பூண்டமிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணேகடியென்றார் கற்றறிந் தார். ⁠56

ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்தாக்கருந் துன்பங்கள் தாந்தலை-வந்தக்கால்நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்காக்கும் திருவத் தவர். ⁠57

தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால்-உம்மைஎரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்றுபரிவது உம் சான்றோர் கடன். ⁠58

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்றஐவாய வேட்கை அவாவினைக்-கைவாய்கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்விலங்காது வீடு பெறும். ⁠59

துன்பமே மீதுாரக் கண்டும் துறவுள்ளார்இன்பமே காமுறுவர் ஏழையார்-இன்பம்இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்பசைதல் பரியாதாம் மேல். ⁠60

7. சினமின்மை

மதித்திறப் பாரும் இறக்க மதியாமிதித்திறப் பாரும் இறக்க-மிதித்தேறிஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்காயும் கதமின்மை நன்று. ⁠61

தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காதுகண்டுழி யெல்லாம் துறப்பவோ-மண்டிஅடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்முடிகிற்கும் உள்ளத் தவர். ⁠62

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்ஒவாதே தன்னைச் சுடுதலால்-ஓவாதேஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. ⁠63

நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்வேர்த்து வெகுளார் விழுமியோர்-ஓர்த்ததனைஉள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்துள்ளித்துண் முட்டுமாம் கீழ். ⁠64

இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்இல்லான் கொடையே கொடைப்பயன் -எல்லாம்ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்பொறுக்கும் பொறையே பொறை ⁠65

கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர்-ஒல்லைஇடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்குடிமையான் வாதிக்கப் பட்டு. ⁠66

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமைஆற்றாமை என்னார் அறிவுடையார்-ஆற்றாமைநேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்பேர்த்தின்னா செய்யாமை நன்று. ⁠67

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளிகெடுங்காலம் இன்றிப் பரக்கும்-அடுங்காலைநீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமேசீர்கொண்ட சான்றோர் சினம். ⁠68

உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்வான்தோய் குடிப்பிறந்தார்க் கில். ⁠69

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை-நீர்த்தன்றிக்கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோமேன்மக்கள் தம்வாயால் மீட்டு. ⁠70

8. பொறையுடமை

கோதை யருவிக் குளிர்வரை நன்னாடபேதையோ டியாதும் உரையற்க-பேதைஉரைப்பிற் சிதைந் துரைக்கும் வகையான்வழுக்கிக் கழிதலே நன்று. ⁠71

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றதுதாரித் திருத்தல் தகுதிமற்-றோரும்புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்சமழ்மையாக் கொண்டு விடும். ⁠72

காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்ஏதிலார் இன்சொலின் தீதாமோ-போதெலாம்மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!ஆவ தறிவார்ப் பெறின். ⁠73

அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சிஉறுவ துலகுவப்பச் செய்து-பெறுவதனால்இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்துன்புற்று வாழ்தல் அரிது. ⁠74

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண்-உண்டாயின்ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின்தூற்றாதே தூர விடல் ⁠75

இன்னா செயினும் இனிய ஒழிகென்றுதன்னையே தான்நோவின் அல்லது-துன்னிக்கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!விலங்கிற்கும் விள்ளல் அரிது. ⁠76

பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்தஅரிய பொறுப்பஎன் றன்றோ-அரியரோஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!நல்லசெய் வார்க்குத் தமர். ⁠77

வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்குஅற்றம் அறிய உரையற்க-அற்றம்மறைக்குந் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்துறக்குந் துணிவிலா தார். ⁠78

இன்பம் பயந்தாங் கிழிவு தலைவரினும்இன்பத்தின் பக்கம் இருந்தைக்கு இன்பம்ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!பழியாகா ஆறே தலை. ⁠79

தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின்ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க-வான்கவிந்தவையக மெல்லாம் பெறினும் உரையற்கபொய்யோ டிடைமிடைந்த சொல். ⁠80

9. பிறர்மனை நயவாமை

அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால்-நிச்சலும்கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்நம்பற்க நாணுடை யார். ⁠81

அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா-பிறன்தாரம்நச்சுவார்ச் சேரும் பகைபழி-பாவம்என்றுஅச்சத்தோ டிந்நாற் பொருள். ⁠82

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமற் காப்பச்சம்எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோஉட்கான் பிறன்இல் புகல். ⁠83

காணின் குடிப்பழியாம், கையுறின் கால்குறையும்ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; நீள்நிரயத்துன்பம் பயக்குமால், துச்சாரி நீகண்டஇன்பம் எனக்கெனைத்தால் கூறு. ⁠84

செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ உம்மைவலியாற் பிறர்மணைமேற் சென்றாரே, இம்மைஅலியாகி ஆடிஉண் பார். ⁠85

பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்கல்யாணஞ் செய்து கடிப்புக்க-மெல்லியற்காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்ஏதின் மனையாளை நோக்கு. ⁠86

அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇவம்பலன் பெண்மரீஇ மைந்துற்று நம்பும்நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்தலைநக்கி யன்ன துடைத்து. ⁠87

பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;உரவோர்கண் காமநோய் ஓ!ஒ! கொடிதே;விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்உரையாது.உள் ஆறி விடும். ⁠88

அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்;-வெம்பிக்கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்அவற்றினும் அஞ்சப் படும். ⁠89

ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்குநீருள் குளித்தும் உயலாகும்;-நீருள்குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறிஒளிப்பினும் காமம் சுடும். ⁠90

10. ஈகை

இல்லா விடத்தும் இயைந்த அளவினால்உள்ள விடம்போற் பெரிதுவந்து-மெல்லக்கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்(கு)அடையாவாம் ஆண்டைக் கதவு. ⁠91

முன்னரே சாம்நாள் முனிதக்க முப்புளபின்னரும் பீடழிக்கும் நோயுள;-கொன்னேபரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதுங்கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. ⁠92

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்;கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்விடுக்கும் வினையுலந்தக் கால். ⁠93

இம்மி யரிசித் துணையானும் வைகலும்நும்மில் இயைவ கொடுத்துண்மின்-உம்மைக்கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்(து)அடாஅ அடுப்பி னவர். ⁠94

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்குஉறுமா றியைவ கொடுத்தல்-வறுமையால்ஈதல் இசையா தெனினும் இரவாமைஈதல் இரட்டி யுறும். ⁠95

நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்கபடுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;குடிகொழுத்தக் கண்ணுங் கொடுதத்துண்ணா மாக்கள்இடுகாட்டுள் ஏற்றைப் பனை. ⁠96

பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்செயற்பால செய்யா விடினும்-கயற்புலால்புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!என்னை உலகுய்யு மாறு. ⁠97

ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையாதாற்றாதார்க் கீவதாம் ஆண்கடன்-ஆற்றின்மலிகடல் தண்சேர்ப்ப மாறிவார்க் கீதல்பொலிகடன் என்னும் பெயர்த்து ⁠98

இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும்அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க-முறைப்புதவின்ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோல்பைய நிறைத்து விடும். ⁠99

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர்கொடுத்தார் எனப்படுஞ் சொல். ⁠100

11. பழவினை

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்றுவல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப்பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்தகிழவனை நாடிக் கொளற்கு. ⁠101

உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்ஒருவழி நில்லாமை கண்டும்-ஒருவழிஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்(பு) இட்டுநின்றுவழ்ந் தக்க(து) உடைத்து ⁠102

வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை,அளந்தன போகம் அவர்அவர் ஆற்றால்விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்காரெனச் செய்தாரும் இல். ⁠103

உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,பெறற்பா லனையவும் அன்னவாம்; மாரிவறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்சிறப்பின் தணிப்பாரும் இல். ⁠104

தினைத்துணைய ராகிதத்தந் தேசுள் ளடக்கிப்பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்,நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலைவினைப்பய னல்லாற் பிற. ⁠105

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்கல்லாதார் வாழ்வ தறிதிரேல்-கல்லாதார்!சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்கோதென்று கொள்ளாதாம் கூற்று. ⁠106

இடும்பைசுடர் நெஞ்சத்தார் எல்லாருங் காணநெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம்-அடம்பப்பூஅன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்பமுன்னை வினையாய் விடும். ⁠107

அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்பழியோடு பட்டவை செய்தல்-வளியோடிநெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!செய்த வினையான் வரும். ⁠108

ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;வேண்டினும் வேண்டா விடினும் உறற்பாலதீண்டா விடுத லரிது. ⁠109

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாராஉறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்இறுகாலத் தென்னை பரிவு. ⁠110

12. மெய்ம்மை

இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்வசையன்று வையத் தியற்கை-நசையழுங்கநின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றிகொன்றாரின் குற்ற முடைத்து. ⁠111

தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மைஎக்காலுங் குன்றல் இலராவர்: அக்காரம்யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்தேவரே தின்னினும் வேம்பு. ⁠112

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்துமேலாடு மீனின் பலராவர்; ஏலாஇடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!தொடர்புடையேம் என்பார் சிலர். ⁠113

வடுவிலா வையத்து மன்னிய முன்றில்நடுவண தெய்த இருதலையும் எய்தும்நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்தடுவது போலுந் துயர். ⁠114

நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறுஉம்கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும்புல்லிரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். ⁠115

இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்அடங்காதார் என்றும் அடங்கார்;-தடங்கண்ணாய்!உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும்கைப்பறா பேய்ச்சுரையின் காய். ⁠114

தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க;என்னை அவரொடு பட்டது?-புன்னைவிறற்பூங் கமழ்கானல் வங்குநீர்ச் சேர்ப்பஉறற்பால யார்க்கும் உறும். ⁠117

ஆவே றுருவின வாயினும், ஆபயந்தபால்வே றுருவின வல்லவாம்;-பால்போல்ஒருதன்மைத் தாகும் அறநெறி, ஆபோல்உருவு பலகொளல் ஈங்கு. ⁠118

யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்யாஅர் உபாயத்தின் வாழாதார்?-யாஅர்இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர்கடைபோகச் செல்வம்உய்த் தார்? ⁠119

தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்றியாங்கணும் தேரின் பிறிதில்லை;-ஆங்குத்தாம்போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே.கூற்றங்கொண் டோடும் பொழுது. ⁠120

13. தீவினையச்சம்

துக்கத்துள் தூங்கித் துறவின்கட் சேர்கலாமக்கள் பிணத்த சுடுகாடு-தொக்கவிலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்டபுல்லறி வாளர் வயிறு. ⁠121

இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்க்கரும்பார் கழனியுட் சேர்வர்-சுரும்பார்க்கும்காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்கூட்டுளாய்க் கொண்டுவைப் பார். ⁠122

அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்துக்கத் தொழுநோய் எழுபவே-அக்கால்அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்றபழவினை வந்தடைந்தக் கால் ⁠123

நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும்-பரப்பக்கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக்கடுவினைய ராகியார்ச் சார்ந்து ⁠124

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்வரிசை வரிசையா நந்தும்-வரிசையால்வானூர் மதியம்போல் வைகலும் தேயுமேதானே சிறியார் தொடர்பு. ⁠125

சான்றோ ரெண்மதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தாய்கேள்சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்பாம்பகத்துக் கண்ட துடைத்து ⁠126

யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்தேருந் துணைமை யுடையவர்-சாரல்கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள்மனம்வேறு செய்கையும் வேறு. ⁠127

உள்ளத்தான் நள்ளா துறுதித் தொழிலராய்க்கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை-தெள்ளிப்புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!மனத்துக்கண் மாசாய் விடும். ⁠128

ஓக்கிய ஒள்வாள்தான் ஒன்னார்கைப் பட்டக்கால்ஊக்கம் அழிப்பது உம் மெய்யாகும்-ஆக்கம்இருமையுஞ் சென்று சுடுதலால் நல்லகருமமே கல்லார்கண் தீர்வு. ⁠129

மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கிஎனைத்துழி வாழ்தியோ நெஞ்சே-எனைத்தும்சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்உறுபயனோ இல்லை உயிர்க்கு. ⁠130

Comments

Loading comments…