காமத்துப் பால்

நாலடியார் - செய்யுளும் செய்திகளும்

முயங்காக்காற் பாயும் பசலைமற் றுடிஉயங்காக்கால் உப்பின்றாம் காமம்; வயந்கோதம்நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!புல்லாப் புலப்பதோர் ஆறு ⁠391

தம்மவர் காதலர் தார்சூழ் அணியகலம்விம்ம முயங்குந் துணையில்லார்க்-கிம்மெனப்பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்நெய்தல் அறைந்தன்ன நீர்த்து ⁠392

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கியமம்மார்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்குஇம்மாலை என்செய்வ தென்று ⁠393

செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்ட நீர்மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன்-மெல்விரலின்நாள் வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்தோள்வைத் தணைமேற் கிடந்து ⁠394

கண்கயல் என்னுங் கருத்தினால் காதலிபின்சென்றது அம்ம சிறுசிரல்-பின்சென்றும்ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்கோட்டிய வில்வாக் கறிந்து ⁠395

அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோபரற்கானம் ஆற்றின கொல்லோ;-அரக்கார்ந்தபஞ்சிகொண் டுட்டினும் பையெனப் பையெனவென்(று)அஞ்சிப்பின் வாங்கும் அடி ⁠396

ஒலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளிமாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேற்கோலுஞ்செய் சாந்தந் திமிர்ந்து ⁠397

கடக்கருங் கானத்துக் காளையின் நாளைநடக்கவும் வல்லையோ என்றி; சுடர்த்தொடீஇ!பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையேகற்றான் அஃதுறும் ஆறு ⁠398

முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்இலக்கணம் யாதும் அறியேன் கலைக்கணம்வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்தீம்பாவை செய்த குறி ⁠399

கண்முன் றுடையானும் காக்கையும் பையரவும்என்னீன்ற யாயும் பிழைத்ததென்-பொன்னீன்றகோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்பாங்கனார் சென்ற நெறி ⁠400

Comments

Loading comments…