பொருட்பால்
நாலடியார் - செய்யுளும் செய்திகளும்
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்துநல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்கல்வி அழகே அழகு. 131
இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்மம்மர் அறுக்கும் மருந்து. 132
களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;கடைநிலத்தோ ராயினுங் கற்றறிந் தோரைத்தலைநிலைத்து வைக்கப் படும். 133
வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை;மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வனவிச்சைமற் றல்ல பிற. 134
கல்வி கரையில; கற்பவர் நாள்சில;மெல்ல நினைக்கின் பிணிபல;-தெள்ளிதின்ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்பாலுண் குருகின் தெரிந்து. 135
தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்காணிற் கடைப்பட்டான் என்றிகழார்-காணாய்அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்றமகன்துணையா நல்ல கொளல். 136
தவலருந் தொல்கேள்வித் தன்மையு டையார்இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇநகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்(து)உம்ப ருறைவார் பதி. 137
கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மைநுனியின் கரும்புதின் றற்றே நுனிநீக்கித்தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலாஈரமி லாளர் தொடர்பு. 138
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்நல்லறிவு நாளுந் தலைப்படுவர்-தொல்சிறப்பின்ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடுதண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. 139
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)உலகநூ லோதுவ தெல்லாங்-கலகலகூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்போஒந் துணையறிவா ரில். 140
15. குடிப்பிறப்பு
உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமாகொடிப்புற் கறிக்குமோ மற்று. 141
சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமுன்றும்வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது-வான்றோயும்மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்எய்தியக் கண்ணும் பிறர்க்கு. 142
இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனைவிடுப்ப ஒழிதலோ டின்ன-குடிப்பிறந்தார்குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோடொன்றா வுணரற்பாற் றன்று. 143
நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவைபல்லவர் தூற்றும் பழியாகும்;-எல்லாம்உணருங் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோபுணரும் ஒருவர்க் கெனின்? 144
கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம்,சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்;-எல்லாம்இரப்பார்க்கொன் றியாமை அச்சம்; மரத்தாரிம்மாணாக் குடிப்பிறந் தார். 145
இனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனைமனநன்மை என்றிவை யெல்லாம்-கனமணிமுத்தோ டிமைக்கு முழங்குவரித் தண்சேர்ப்ப!இற்பிறந்தார் கண்ணே யுள. 146
செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்செய்வர் செயற்பா லவை. 147
ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடைஅங்கண்மா ஞாலம் விளக்குறுஉந்-திங்கள்போல்செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கொல்கார் குடிப்பிறந் தார். 148
செல்லா விடத்துங் குடிப்பிறந்தார் செய்வனசெல்லிடத்துஞ் செய்யார் சிறியவர்;-புல்வாய்பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்பொருமுரண் ஆற்றுதல் இன்று. 149
எற்றொன்றும் இல்லா இடத்துங் குடிப்பிறந்தார்அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவர்;அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்தெற்றெனத் தெண்ணீர் படும். 150
16. மேன்மக்கள்
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன்-திங்கள்மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்துதேய்வர் ஒருமா சுறின். 151
இசையும் எனினும் இசையா தெனினும்வசைதீர எண்ணுவர் சான்றோர்! விசையின்நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,அரிமாப் பிழைப்பெய்த கோல்? 152
நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்குரம்பெழுந்து குற்றங்கொண்டேறார்;-உரங்கவறாஉள்ளமெனும் நாரினாற் கட்டி உளவரையாற்செய்வர் செயற்பா லவை. 153
செல்வுழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்தியாப்பர்;நல்வரை நாட! சிலநாள் அடிப்படின்கல்வரையும் உண்டாம் நெறி. 154
புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டிகல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடிநல்லார் வருந்தியுங் கேட்பரே, மற்றவன்பல்லாருள் நாணல் பரிந்து. 155
கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறிஇடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்கூறார்தம் வாயிற் சிதைந்து. 156
கள்ளார்,கள்ளுண்ணார், கடிவ கடிந்தொரீஇ,எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார்,-தள்ளியும்வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்சாயிற் பரிவ திலர். 157
பிறர்மறை யின்கட் செவிடாய்த திறனறிந்தேதிலா ரிற்கட் குருடனாய்த் தீய புறங்கூற்றின்முகையாய் நிற்பானேல், யாதும்அறங்கூற வேண்டா அவற்கு. 158
பன்னாளுஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழைஎன்னானும் வேண்டுப என்றிகழ்ப;-என்னானும்வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்காண்டொறுஞ் செய்வர் சிறப்பு. 159
உடையா ரிவரென் றொருதலையாப் பற்றிக்கடையாயார் பின்சென்று வாழ்வர்;-உடையபிலந்தலைப் பட்டது போலாதே, நல்லகுலந்தலைப் பட்ட விடத்து. 160
17. பெரியாரைப் பிழையாமை
பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்வெறுப்பன செய்யாமை வேண்டும்;-வெறுத்தபின்ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!பேர்க்குதல் யார்க்கும் அரிது. 161
பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும்-அன்னோபயனில் பொழுதாக் கழிப்பரே, நல்லநயமில் அறிவி னவர். 162
அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்மிகைமக்க ளான் மதிக்கற் பால,-நயமுணராக்கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்வையார் வடித்தநூ லார். 163
விரிநிற நாகம் விடருள தேனும்உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்பெருமை யுடையார் செறின். 164
எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்றுதம்மைத்தாம் கொள்வது கோளன்று;-தம்மைஅரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்பெரியராக் கொள்வது கோள். 165
நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழற் போலவிளியுஞ் சிறியவர் கேண்மை;-விளிவின்றிஅல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமேதொல்புக ழாளர் தொடர்பு 166
மன்னர் திருவும் மகளிர் எழினலமும்துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா-துன்னிக்குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்உழைதங்கட் சென்றார்க் கொருங்கு 167
தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்பிரியப் பெரும்படர்நோய் செய்யும்;-பெரியஉலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்கலவாமை கோடி யுறும். 168
கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்செல்லாது வைகிய வைகலும்;-ஒல்வகொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்படாஅவாம் பண்புடையார் கண். 169
பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்குரியா ருரிமை யடக்கம்;-தெரியுங்கால்;செல்வ முடையாருஞ் செல்வரே, தற்சேர்ந்தார்அல்லல் களைப வெனின் 170
18. நல்லினம் சேர்தல்
அறியாப் பருவத் தடங்காரோ டொன்றிநெறியல்ல செய்தொழுகி யவ்வும்-நெறியறிந்தநற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்புற்பணிப் பற்றுவிட் டாங்கு 171
அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்பெறுமின் பெரியார்வாய்ச் சொல். 173
அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்உடங்குடம்பு கொண்டார்க் குறலால்-தொடங்கிப்பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரைஉறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு 173
இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்பிறப்பினை யாரும் முனியார்;-பிறப்பினுள்பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும்நண்பாற்றி நட்கப் பெறின். 174
ஊரங் கனநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்;-ஒருங்குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்நலமாட்சி நல்லாரைச் சார்ந்து 175
ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஒங்கியஅங்கண் விசும்பின் முயலும் தொழப்படுஉம்;குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,குன்றன்னார் கேண்மை கொளின். 176
பாலோ டளாயநீர் பாலாகு மல்லதுநீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்;-தேரின்சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நலலபெரியார் பெருமையைச் சார்ந்து. 177
கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்குமெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற்செல்லாவாம் செற்றார் சினம். 178
நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தங்குலநலத்தால் ஆகுவர் சான்றோர்;-கலநலத்தைத்தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மைதீயினஞ் சேரக் கெடும். 179
மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்தஇனத்தால் இகழப் படுவர்;-புனத்துவெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமேஎறிபுனந் தீப்பட்டக் கால். 180
19. பெருமை
ஈத லிசையா திளமைசே ணீங்குதலால்காத லவருங் கருத்தல்லர்;-காதலித்துஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப்போவதே போலும் பொருள். 181
இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்பொச்சாந் தொழுகுவர் பேதையார்;-அச்சார்வுநின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்என்றும் பரிவ திலர். 182
மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்துசிறுமைக்குப் படாதேநீர் வாழ்மின்-அறிஞராய்நின்றுழி நின்றே நிறம்வேறாங் காரணம்இன்றிப் பலவு முள. 183
உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணிஇறைத்துணினும் ஊராற்றும் என்பர்; கொடைக்கடனும்சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்ஆஅயக் கண்ணும் அரிது. 184
உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்கல்லூற் றுழியூறும் ஆறேபோல-செல்வம்பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிசெய்வர் செயற்பா லவை. 185
பெருவரை நாட! பெரியோர்கண் தீமைகருநரைமேற் சூடேபோற் றோன்றும்;-கருநரையைக்கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்ஒன்றானும் தோன்றாக் கெடும். 186
இசைந்த சிறுமை யியல்பிலா தார்கட்பசைந்த துணையும் பரிவாம்-அசைந்தநகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்பகையேயும் பாடு பெறும். 187
மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்(து)ஒன்னாருட் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம்சலவருட் சாலச் சலமே, நலவருள்நன்மை வரம்பாய் விடல். 188
கடுக்கி யொருவன் கடுஞ்குறளை பேசிமயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்துளக்க மிலாதவர் தூய மனத்தார்;விளக்கினுள் ஒண்சுடரே போன்று. 189
முற்றுற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்துபிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர்;-அத்துற்றுமுக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்துக்கத்துள் நீக்கி விடும். 190
20. தாளாண்மை
கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற்கேளிவ துண்டு கிளைகளோ துஞ்சுப;வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந்தாளர்க் குண்டோ தவறு; 191
ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்,வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்தாழ்வின்றித் தன்னைச் செயின் 192
உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்சிறுதேரை பற்றியுந் தின்னும்;-அறிவினால்காற்றொழில் என்று கருதற்க கையினால்மேற்றொழிலும் ஆங்கே மிகும். 193
இசையா தெனினும் இயற்றியோ ராற்றால்அசையாது நிற்பதாம் ஆண்மை-இசையுங்கால்கண்டல் திரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப!பெண்டிரும் வாழாரோ மற்று. 194
நல்ல குலமென்றும் தீய குலமென்றும்சொல்லள வல்லாற் பொருளில்லை;-தொல்சிறப்பின்ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினைஎன்றிவற்றான் ஆகும் குலம். 195
ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கிஊக்கம் உரையார் உணர்வுடையார்-ஊக்கம்உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு. 196
சிதலை தினப்பட்ட ஆல மரத்தைமதலையாய் மற்றதன் விழுன்றி யாங்குக்குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்றபுதல்வன் மறைப்பக் கெடும். 197
ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்மானந் தலைவருவ செய்பவோ?-யானைவரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்அரிமா மதுகை யவர். 198
தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரிதேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு-ஓங்கும்உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்குபேராண்மை இல்லாக் கடை. 199
பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்கருணைச்சோ றார்வர் கயவர்;-கருனையைப்பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மைநீரும் அமிழ்தாய் விடும். 200
21. சுற்றந்தழால்
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்குஅசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்கேளிரைக் காணக் கெடும். 201
அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப்-பழுமரம்போல்பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதேநல்லாண் மகற்குக் கடன். 202
அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரைஎடுக்கல மென்னார் பெரியோர்;-அடுத்தடுத்துவன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே,தன்காய் பொறுக்கலாக் கொம்பு 203
உலகறியத் தீரக் கலப்பினும் நில்லாசிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை;-நிலைதிரியாநிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்ஒற்கமி லாளர் தொடர்பு. 204
இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல்என்னும் இலராம் இயல்பினால்-துன்னித்தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும்தலைமக்க ளாகற்பா லார். 205
பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்உப்பிலிப் புற்கை உயிர்போன்ற கிளைஞர்மாட்டுஎக்கலத் தானு மினிது. 206
நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதா ரில்லத்துவேளாண்மை வெங்கருனை வேம்பாகும்;-கேளாய்,அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனுந்தமராயார் மாட்டே இனிது. 207
முட்டிகை போல முனியாது வைகலுங்கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;சுட்டுக்கோல் போல எரியும் புகுவரேநட்டா ரெனப்படு வார். 208
நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ இறுமளவும்இன்புறுவ இன்புற் றெழிஇ அவரோடுதுன்புறுவ துன்புறாக் கால். 209
விருப்பிலா ரில்லத்து வேறிருந்து உண்ணும்வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம்; விருப்புடைத்தன்போல்வா ரில்லுள் தயங்குநீர்த் தண்புற்கைஎன்போ டியைந்த அமிழ்து. 210
22. நட்பாராய்தல்
கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்குருத்திற் கரும்புதின் றற்றே;-குருத்திற்கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்மதுர மிலாளர் தொடர்பு. 211
இற்பிறப் பெண்ணி இடைதிரியா ரென்பதோர்நற்புடை கொண்டமை யல்லது;-பொற்கேழ்புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட!மனமறியப் பட்டதொன் றன்று. 212
யானை யானையவர் நண்பொரீஇ நாயனையார்கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;-யானைஅறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்மெய்யதா வால்குழைக்கும் நாய். 213
பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்சிலநாளும் ஒட்டாரோ டொட்டார்;-பலநாளும்நீத்தா ரெனக்கை விடலுண்டோ, தந்நெஞ்சத்தியாத்தாரோ டியாத்த தொடர்பு. 214
கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாதுவேட்டதே வேட்டதாம் நட்பாட்சி;-தோட்டகயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரைநயப்பாரும் நட்பாரும் இல். 215
கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனைஇடையாயார் தெங்கி னனையர்;-தலையாயார்எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,தொன்மை யுடையார் தொடர்பு. 216
கழுநீருட் காரட கேனும் ஒருவன்விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்;-விழுமியகுய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்கைத்துண்டல் காஞ்சிரங் காய். 217
நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்வாய்க்கா லனையார் தொடர்பு. 218
தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்விளியா அருநோயின் நன்றால்-அளியஇகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லபுகழ்தலின் வைதலே நன்று. 219
மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னாமரீஇஇப் பின்னைப் பிரிவு. 220
23. நட்பிற் பிழை பொறுத்தல்
நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரைஅல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்நெல்லுக்கு உமியுண்டு; நீர்க்கு நுரையுண்டுபுல்லிதழ் பூவிற்கு உண்டு 221
செறுத்தோறுடைப்பினுஞ் செம்புனலோ டுடார்,மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரேதாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு 222
இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்பொறுத்தல் தகுவதொன் றன்றோ;-நிறக்கோங்குஉருவவண் டார்க்கும் உயர்வரை நாட!ஒருவர் பொறையிருவர் நட்பு 223
மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தங்கடுவிசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப!விடுதற் கரியா ரியல்பிலரேல் நெஞ்சஞ்சுடுதற்கு முட்டிய தீ 224
இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் பொன்னோடுநல்லிற் சிதைத்ததி நாடொறும் நாடித்தம்இல்லத்தில் ஆக்குத லால் 225
இன்னா செயினும் விடுதற் கரியாரைத்துன்னாத் துறத்தல் தகுவதோ-துன்னருஞ்சீர்விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோகண்குத்திற் றென்றுதங்கை 226
இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்கலந்து பழிகாணார் சான்றோர்; கலந்தபின்தீமை எடுத்துரைக்குந் திண்ணறி வில்லாதார்தாமும் அவரிற் கடை 227
ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால்:காதல்கழுமியார் செய்த கறங்கருவி நாட!விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று 228
தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்தமரன்மை தாமறிந்தா ராயின், அவரைத்தமரினும் நன்கு மதித்துத் தமரன்மைதம்முள் அடக்கிக் கொளல் 229
குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனைநட்டபின் நாடித் திரிவேனேல்-நட்டான்மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்கஅறைகடல்சூழ் வையம் நக 230
24. கூடா நட்பு
செறிப்பில் பழங்கூரை சேறனை யாகஇறைத்துநீர் ஏற்றும் கிடப்பர்;-கறைக்குன்றம்பொங்கருவி தாமும் புனல்வரை நன்னாட!தங்கரும முற்றுந் துணை 231
சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்மாரிபோல் மாண்ட பயத்ததாம்-மாரிவறந்தக்காற் போலுமே வாலருவி நாட!சிறந்தக்காற் சீரிலார் நட்பு 232
நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமைவிண்ணுலகே யொக்கும் விழைவிற்றால்-நுண்ணூல்உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்புணர்தல் நிரயத்துள் ஒன்று 233
பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும்-அருகெல்லாம்சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட!பந்தமி லாளர் தொடர்பு 234
செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச்செய்யாது தாழ்த்துக் கொண் டோட்டலும்-மெய்யாகஇன்புறுஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையேதுன்புறுஉம் பெற்றி தரும். 235
ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்விரிநீர் குவளையை ஆம்பலொக் கல்லாபெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார்கருமங்கள் வேறுபடும் 236
முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையைநெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதேஒற்றுமை கொள்ளாதார் நட்பு 237
முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரைநட்டா னொருவன்கை நீட்டேனேல்-நட்டான்கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்கநெடுமொழி வையம் நக 238
ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்துவேம்படு நெய்பெய் தனைத்தரோ;-தேம்படுநல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்புல்லறிவி னாரொடு நட்பு 239
உருவிற் கமைந்தான்கண் ஊராண்மை யின்மைபருகற் கமைந்தபால் நீரளா யற்றேதெரிவுடையார் தீயினத்தா ராகுதல் நாகம்விரிபெடையோ டாடிவிட் டற்று 240
25. அறிவுடைமை
பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராதுஅணங்கருந் துப்பின் அரா 241
நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்கணிகல மாவ தடக்கம்-பணிவில் சீர்மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமுர்கோத்திரங் கூறப் படும் 242
எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகாதுஎந்நாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால்;தன்னாற்றா னாகும் மறுமை; வடதிசையுங்கொன்னாளர் சாலப் பலர் 243
வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கேஇனந்தீ தெனினும் இயல்புட்ையார் கேண்மைமனந்தீதாம் பக்கம் அரிது 244
கடல் சார்ந்தும் இன்னிர் பிறக்கும் மலைசார்ந்தும்உப்பீண் டுவரி பிறத்தலால்; தத்தம்இனத்தனைய ரல்லர் எறிகடற்றண் சேர்ப்பமனத்தனையர் மக்களென் பார் 245
பரா அரைப் புன்னை படுகடற் றண்சேர்ப்ப!ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? நல்லமரு உச்செய் தியார்மாட்டுந் தங்கு மனத்தார்விராஅஅய்ச் செய்யாமை நன்று 246
உணர உணரும் உணர்வுடை யாரைப்புனரிற் புணருமாம் இன்பம்;-புணரின்;தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்பிரியப் பிரியும் நோய் 247
நன்னிலைக்கண் தன்னை நிறப்பானும், தன்னைநிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னைத்தலையாகச் செய்வானும் தான் 248
கரும வரிசையாற் கல்லாதார் பின்னும்பெருமை யுடையாருஞ் சேறல்-அருமரபின்ஒதம் அரற்றும் ஒலிகடற் றண்சேர்ப்ப!பேதைமை யன்ற தறிவு 249
கருமமு முட்படாப் போகமுந் துவ்வாத்தருமமுந் தக்கார்க்கே செய்யா-ஒரு நிலையேமுட்டின்றி முன்று முடியுமேல் அஃதென்பபட்டினம் பெற்ற கலம் 250
26. அறிவின்மை
நுண்ணுணர் வின்மை வறுமை அஃதுடைமைபண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்;-எண்ணுங்கால்பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ,கண்ணவாத் தக்க கலம் 251
பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்துஅல்ல லுழப்ப தறிதிரேல்-தொல்சிறப்பின்நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே,பூவின் கிழத்தி புலந்து 252
கல்லென்று தந்தை கழற அதனையோர்சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன்-மெல்லஎழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியாவழுக்கோலைக் கொண்டு விடும் 253
கல்லாது நீண்ட ஒருவன் உலகத்துநல்லறி வாள ரிடைப்புக்கு-மெல்லஇருப்பினும் நாயிருந் தற்றே, இராஅதுஉரைப்பினும் நாய்குரைத் தற்று 254
புல்லாப்புன் கோட்டிப் புலவ ரிடைப்புக்குக்கல்லாத சொல்லுங் கடையெல்லாம்-கற்றகடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்படாஅ விடுபாக் கறிந்து 255
கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சிமற்றைய ராவார் பகர்வர்-பனையின்மேல்வற்றிய ஒல கலகலக்கும் எஞ்ஞான்றும்பச்சோலைக் கில்லை யொலி 256
பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;நன்றறியா மாந்தர்க் கறத்தாறுரைக்குங்கால்;குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைநகர்ந்துசென்றிசையா வாகுஞ் செவிக்கு 257
பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று!கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லாநோலா உடம்பிற் கறிவு 258
பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாதுஇழிந்தவை காமுறுஉம் ஈப்போல், இழிந்தவைதாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாரும், தக்கார்வாய்த்தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு 259
கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்விபற்றாது தன்னெஞ் சுதைத்தலால்-மற்றுமோர்தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்புன்கோட்டி கொள்ளுமாம் கீழ் 260
27. நன்றியில் செல்வம்
அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்பொரிதாள் விளைவினை வாவல் குறுகா;பெரிதணிய ராயினும் பீடிவார் செல்வம்கருதுங் கடப்பாட்ட தன்று 261
அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களைநள்ளார் அறிவுடை யார் 262
மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்,வல்லுற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்;செல்வம் பெரிதுடைய ராயினும், சேட்சென்றும்நல்குவார் கட்டே நசை 263
புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;உணர்வ துடைய ரிருப்ப - உணர்விலாவட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,பட்டும் துகிலும் உடுத்து 264
நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்கல்லார்க்கொன் றாகிய காரணம் - தொல்லைவினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்!நினைப்ப வருவதொன் றில். 265
நாறாத் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்!நீறாய் நிலத்து விளியரோ - வேறாயபுன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்நன்மக்கள் பக்கம் துறந்து 266
நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;பயவார்கட் செல்வம் பரம்பப் பயின்கொல்;வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கேநயவாது நிற்கு நிலை. 267
வலவைக ளல்லாதார் காலாறு சென்றுகலவைகள் உண்டு கழிப்பர்-வலவைகள்காலாறுஞ் செல்லார் கருணையால் துய்ப்பவேமேலாறு பாய விருந்து 268
பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாமின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்;வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்வண்மையும் அன்ன தகைத்து 269
ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்ஓதி யனையார் உணர்வுடையார்;-தூய்தாகநல்கூர்ந்தும் செல்வர் இரவாதார்; செல்வரும்நல்கூர்ந்தார் ஈயா ரெனின் 270
28. ஈயாமை
நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உளவரையால்அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்;-அட்டதுஅடைந்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்குஅடைக்குமாம் ஆண்டைக் கதவு 271
எத்துணை யானும் இயைந்த அளவினால்சிற்றஞ் செய்தார் தலைப்படுவர்;-மற்றைப்பெருஞ்ச்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும்என்பார் அழிந்தார் பழிகடலத் துள் 272
துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்றி கலான்வைத்துக் கழியும் மடவோனை-வைத்தபொருளும் அவனை நகுமே உலகத்துஅருளும் அவனை நகும் 273
கொடுத்தலுந் துய்த்தலுந் தேற்றா இடுக்குடைஉள்ளத்தான் பெற்ற பெருஞ்ச்செல்வம் இல்லத்துஉருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்ஏதிலான் துய்க்கப் படும் 274
எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்அறுநீர்ச் சிறுகிணற்றுாறல் பார்த் துண்பர்மறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர்கழிநல் குரவே தலை. 275
எனதென தென்றிருக்கும் ஏழை பொருளைஎனதென தென்றிருப்பன் யானும்;-தனதாயின்தானும் அதனை வழங்கான்; பயன்துவ்வான்;யானும் அதனை அது. 276
வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார்-உழந்ததனைக்காப்புய்ந்தார் கல்லுதலும் உய்த்தார்தங் கைந்நோவயாப்புய்ந்தார் உய்ந்த பல 277
தனதாகத் தான்கொடான்; தாயத் தவருந்தமதாய போழ்தே கொடாஅர்;-தனதாகமுன்னே கொடுப்பின் அவர்கடியார், தான்கடியான்பின்னே அவர்கொடுக்கும் போழ்து 278
இரவலர் கன்றாக ஈவார்ஆ வாகவிரகிற் சுரப்பதாம் வண்மை-விரகின்றிவல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்கொல்லச் சுரப்பதாங் கீழ் 279
ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்-காத்தல்குறைபடில் துன்பம், கெடில்துன்பம் துன்பக்குஉறைபதி மற்றைப் பொருள் 280
29. இன்மை
அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்ஒத்த குடிப்பிறந்தக் கண்னுமொன் றில்லாதார்செத்த பிணத்திற் கடை 281
நீரினும் நுண்ணிது நெய்யென்பார், நெய்யினும்யாரும் அறிவர் புகைநுட்பம்;-தேரின்நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்புகற்கரிய பூழை நுழைந்து 282
கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்கால்செல்லாவாம் செம்பொறி வண்டினம்;-கொல்லைக்கலாஅற் கிளிகடியுங் கானக நாட!இலாஅஅர்க் கில்லை தமர் 283
உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்தொண்டா யிரவர் தொகுபவே;-வண்டாய்த்திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்ஒருவரும் இவ்வுலகத் தில் 284
பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும்;சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்குருவிகன்மேற் கழுஉங் கணமலை நன்னாட!இன்மை தழுவப்பட் டார்க்கு 285
உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்குஉள்ளு ரிருந்துமொன் றாற்றாதான்;-உள்ளூர்இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்விருந்தின னாதலே நன்று 286
நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங்கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்;-கூர்மையின்முல்லை அலைக்கும் எயிற்றாய்!நிரப்பென்னும்அல்லல் அடையப்பட் டார் 287
இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாதுமுட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளுர் வாழ்தலின்நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டுங்கெட்டாற்று வாழ்க்கையே நன்று 288
கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கிஅடகு பறித்துக்கொண் டட்டுக்-குடைகலனாஉப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவேதுப்பரவு சென்றுலந்தக் கால் 289
ஆர்த்த பொறி அணிகிளர் வண்டினம்பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவம்;-நீர்த்தருவிதாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!வாழாதார்க் கில்லை தமர் 290
30. மானம்
திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்பெருமிதங் கண்டக் கடைத்தும்-எரிமண்டிக்கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமேமான முடையார் மனம் 291
என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்றுதம்பா டுரைப்பரோ தம்முடையார்;~தம்பாடுஉரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்குஉரையாரோ தாமுற்ற நோய் 292
யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின்காணவே கற்பழியும் என்பார்போல்-நாணிப்புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்மறந்திடுக செல்வர் தொடர்பு 293
இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடாதுஉம்மையும் நல்ல பயத்தலால்;-செம்மையின்நானம் கமழுங் கதுப்பினாய்! நன்றேகாண்மான முடையார் மதிப்பு 294
பாவமும் ஏனைப் பழியும் படவருவசாயினும் சான்றவர் செய்கலார்;-சாதல்ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்அருநவை ஆற்றுதல் இன்று 295
மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்செல்வரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரேசெல்வரைச் சென்றிரவா தார் 296
கடையெலாம் காய்பசி அஞ்சமற் றேனைஇடையெலாம் இன்னாமை அஞ்சும்-புடைபரந்தவிற்புருவ வேனெடுங் கண்ணாய்! தலையெல்லாம்சொற்பழி அஞ்சி விடும் 297
நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்-கொல்லன்உலையூதுந் தியேபோல் உள்கனலுங் கொல்லோ,தலையாய சான்றோர் மனம் 298
நச்சியார்க் கீயாமை நாணன்று, நாணாளும்அச்சத்தால் நாணுதல் நாணன்றாம்; எச்சத்தின்மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்ததுசொல்லா திருப்பது நாண் 299
கடமா தொலைச்சிய கானுறை வேங்கைஇடம்வழ்ந்த துண்ணா திறக்கும்;-இடமுடையவானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்,மானம் மழுங்க வரின் 300
31. இரவச்சம்
நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்தம்மாலாம் ஆக்கம் இலரென்று-தம்மைமருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்தெருண்ட அறிவி னவர் 301
இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்அழித்துப் பிறக்கும் பிறப்பு 302
இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்செல்லாரும் அல்லர் சிறுநெறி-புல்லாஅகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட்டல்லான் முகம்புகுதல் ஆற்றுமோ மேல்? 303
திருதன்னை நீப்பினும் தெய்வம் செறினும்உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்றெருத்திறைஞ்சி நில்லாதா மேல் 304
கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்இரவாது வாழ்வதாம் வாழ்க்கை-இரவினைஉள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோகொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு 305
இன்னா இயைக இனிய ஒழிகென்றுதன்னையே தானிரப்பத் தீர்வதற்-கென்னைகொல்காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்டேதி லவரை இரவு 306
என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்தென்று மவனே பிறக்கலான்-குன்றின்பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட!இரப்பாரை எள்ளா மகன் 307
புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனைஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையேமாயானோ மாற்றி விடின் 308
ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றிவழிபடுதல் வல்லுத லல்லால்;-பரிசழிந்துசெய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதேபையத்தான் செல்லும் நெறி? 309
பழமைகந் தாகப் பசைந்த வழியேகிழமைதான் யாதானுஞ் செய்க; கிழமைபொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்தறாஅச் சுடுவதோர் தீ 310
32. அவை அறிதல்
மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்சொன்ஞானஞ் சோர விடல் 311
நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்தீப்புலவற் சேரார் செறிவுடையார்;-தீப்புலவன்கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்தோட்புடைக் கொள்ளா எழும் 312
சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார்;-கற்றசெலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்,பலவுரைக்கும் மாந்தர் பலர் 313
கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்பெற்றதாம் பேதையோர் சூத்திரம்-மற்றதனைநல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்புல்லறிவு காட்டிவிடும் 314
வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ-டொன்றிஉரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள்கரைவித்துப் போலுந்தம் பல் 315
பாடமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாதமுடர் முனிதக்க சொல்லுங்கால்-கேடருஞ்சீர்ச்சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரைஈன்றாட் கிறப்பப் பரிந்து 316
பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக்கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; மற்றும்முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்அறிதற் கரிய பொருள் 317
புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்உய்த்தக மெல்லா நிறைப்பினும்-மற்றவற்றைப்போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்துதேற்றும் புலவரும் வேறு 318
பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின்கொழித்தகலங் காட்டாதார் சொற்கள்-பழிப்பில்நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட்!உரையாமோ நூலிற்கு நன்கு? 319
இற்பிறப் பில்லா ரெனைத்துநூல் கற்பினும்சொற்பிறரைக் காக்குங் கருவியரோ?-இற்பிறந்தநல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்புல்லறிவு தாமறிவ தில். 320
33. புல்லறிவாண்மை
அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்பொருளாகக் கொள்வர் புலவர்;-பொருளல்லாஏழை அதனை இகழந்துரைக்கும் பாற்கூழைமுழை சுவையுணரா தாங்கு 321
அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்;கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றில்செவ்விய கொளல்தேற்றா தாங்கு 322
இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம்எனைத்தானும் தாங்கண் டிருந்தும்-தினைத்துணையும்நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள்பொன்றிலென் பொன்றாக்கா லென்? 323
உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,பலர்மன்னுந் தூற்றும் பழியால்;-பலருள்ளும்கண்டாரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்தண்டித் தனிப்பகை கோள் 324
எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளிவைதான் ஒருவன் ஒருவனை;-வையவயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்வியத்தக்கான் வாழும் எனின் 325
முப்புமேல் வாராமை முன்னே அறவினையைஊக்கி அதன்கண் முயலாதான்-நூக்கிப்புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்தொழுத்தையாற் கூறப் படும் 326
தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்ஏமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார்-தாமயங்கிஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்போக்குவார் புல்லறிவி னார் 327
சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சிஇறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்பொன்னும் புளிவிளங்கா யாம் 328
வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்மறுமை மனத்தாரே யாகி;-மறுமையைஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச்சிந்தியார் சிற்றறிவி னார் 329
என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை;-அன்னோஅளவிறந்த காதல்தம் ஆருயி ரன்னார்க்கொளஇழைக்கும் கூற்றமுங் கண்டு 330
34. பேதமை
கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமைநிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டைவலையகத்து செம்மாப்பார் மாண்பு 331
பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்ஒசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்இற்செய் குறைவினை நீக்கி அறவினைமற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு 332
குலந்தவங் கல்வி குடிமைமுப் பைந்தும்விலங்காமல் எய்தியக் கண்ணும்-நலஞ்சான்றமையறுதொல்சீர் உலகம் அறியாமைநெய்யிலாப் பாற்சோற்றின் நேர் 333
கன்னணி நல்ல கடையாய மாக்களின்;சொன்னனி தாமுணர வாயினும்-இன்னினியேநிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்றுற்றவர்க்குத் தாமுதவ லான் 334
பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்கறுவுகொண்டேலாதிார் மாட்டும்-கறுவினால்கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்குநாத்தின்னும் நல்ல சுனைத்து 335
தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரைஎங்கண் வணக்குதும் என்பவர்-புன்கேண்மைநற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!கற்கிள்ளிக் கையிழந் தற்று 336
ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்போகா தெறும்பு, புறுஞ்சுற்றும்;-யாதுங்கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றிவிடாஅர் உலகத் தவர் 337
நல்லவை நாடொறும் எய்தார், அறஞ்செய்யார்இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார்;-எல்லாம்இனியார்தோள் சேரார், இசைப்பட வாழார்முனியார்கொல் தாம்வாழும் நாள் 338
விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை-தழங்குகுரல்பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதேஆய்நலம் இல்லாதார் மாட்டு 339
கற்றளவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின்மைத்துனர் பல்கி மருந்தின் தணியாதபித்தனென் றெள்ளப் படும் 340
35. கீழ்மை
கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்குப்பை கிளைப்போவாக் கோழிபோல்;-மிக்ககனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்மனம்புரிந்த வாறே மிகும் 341
காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்தாழாது போவாம் என உரைப்பின்-கீழ்தான்உறங்குவோம் என்றெழுந்து போமாம், அஃதன்றிமறங்குமாம் மற்றொன்று உரைத்து 342
பெருநடைதாம்பெறினும் பெற்றி பிழையாதொருநடைய ராகுவர் சான்றோர்;-பெருநடைபெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட!வற்றாம் ஒருநடை கீழ் 343
தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்;-பனையனைத்தென்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட!நன்றில நன்றறியார் மாட்டு. 344
பொற்கலத் துட்டிப் புறந்தரினும் நாய்பிறர்எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்;-அச்சீர்பெருமை யுடைத்தாகக் கொளினுங்கீழ் செய்யுங்கருமங்கள் வேறுபடும் 345
சக்கர்ரச் செல்வம் பெறினும் விழுமியோர்எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்;-எக்காலும்முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னைஇந்திரனா எண்ணி விடும் 346
மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்;எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்செய்தொழிலாற் காணப்படும் 347
கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்இடுக்கண் பிறர்மாட் டுவக்கும், அடுத்தடுத்துவேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!ஏகுமாம் எள்ளுமாம் கீழ் 348
பழைய ரிவரென்று பன்னாட்பின் நிற்பின்உழையினிய ராகுவர் சான்றோர்; விழையாதேகள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப!எள்ளுவர் கீழா யவர் 349
கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றுந் தீற்றினும்வையம்பூண் கல்லா சிறுகுண்டை;-ஐயகேள்எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்செய்தொழிலாற் காணப்படும் 350
36. கயமை
ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்காத்தோம்பித் தம்மை அடக்குப;-முத்தொறூஉம்தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்போத்தறார் புல்லறிவி னார். 351
செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்வழும்பறுக்க கில்லாவாந் தேரை;-வழும்பில்சீர்நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்தேர்கிற்கும் பெற்றி அரிது 352
கணமலை நன்னாட! கண்ணின் றொருவர்குணனேயுங் கூறற் கரிதால், குணனழுங்கக்குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்கெற்றா லியன்றதோ நா. 353
கோடேந் தகலல்குற் பெண்டிர்தம் பெண்ணீர்மைசேடியர் போலச் செயல்தேற்றார்; கூடிப்புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணிர்மை காட்டிமதித்திறப்பர் மற்றையவர் 354
தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லாஉளநீரார் மாதோ கயவர்; அளிநீரார்க்கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவேஇன்னாங்கு செய்வார்ப் பெறின் 355
மலைநலம் உள்ளும் குறவன்; பயந்தவிளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்செய்தநன்றுள்ளுவர் சான்றோர்; கயந்தன்னைவைததை உள்ளி விடும் 356
ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்தபிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; கயவர்க்கெழுநூறு நன்றிசெய் தொன்றுதி தாயின்எழுநூறுந் தீதாய் விடும். 357
ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வனமோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள்;-கோட்டைவயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றிசெயிர்வேழ மாகுத லின்று 358
இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிதுநின்றாதும் என்று நினைத்திருந்-தொன்றிஉரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகிமரையிலையின் மாய்ந்தார் பலர் 359
நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்ஈரங் கிடையகத் தில்லாகும்;-ஓரும்நிறைப்பெருஞ்ச் செல்வத்து நின்றக் கடைத்தும்அறைப்பெருங்கல் லன்னா ருடைத்து 360
37. பன்னெறி
மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம்?-விழைதக்கமாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்காண்டற் கரியதோர் காடு 361
வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும்இழுக்கினைத் தாம்பெறுவ ராயின், இழுக்கெனைத்துஞ்செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்கையுறாப் பாணி பெரிது 362
எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம்;-சிறுகாலைஅட்டில் புகாதான் அரும்பிணி-அட்டதனைஉண்டி யுதவாதாள் இல்வாழ்பேய்;-இம்முவர்கொண்டானைக் கொல்லும் படை 363
கடியெனக் கேட்டுக் கடியான், வெடிபடஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்;-பேர்த்துமோர்இற்கொண் டினிதிருஉம் ஏமுறுதல் என்பவே,கற்கொண் டெறியுந் தவறு 364
தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கிடையே இனியார்கட் டங்கல்; கடையேபுணராதென் றெண்ணிப் பொருள்நசையால் தம்மைஉணரார்பின் சென்று நிலை 365
கல்லாக் கழிப்பர் தலையாயர்,நல்லவைதுவ்வாக் கழிப்பர் இடைகள்,கடைகள்இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்முனிவினாற் கண்பா டிலர் 366
செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்செந்நெல்லே யாகி விளைதலால்-அந்நெல்வயனிறையக் காய்க்கும் வளவய லூரா!மகனறிவு தந்தை யறிவு 367
உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போற்கீழ்மேலாய் நிற்கும் உலகு 368
இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்தணியாத உள்ளம் உடையார்;-மணிவரன்றிவீழும் அருவி விறன்மலை நன்னாட!வாழ்வின் வரைபாய்தல் நன்று 369
புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்விதுப்புற நாடின்வே றல்ல;-புதுப்புனலும்மாரி அறவே அறுமே, அவரன்பும்வாரி, அறவே அறும் 370
38. பொதுமகளிர்
விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்துளக்கற நாடின்வே றல்ல;-விளக்கொளியும்நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்கையற்ற கண்ணே அறும் 371
அங்கோட் டகலல்குல் ஆயிழையால் நம்மோடுசெங்கோடு பாய்துமே என்றாள்மன்;-செங்கோட்டின்மேற்காணம் இன்மையான் மேவா தொழிந்தாளேகாற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து 372
அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்செங்கண்மா லாயினும் ஆகமன்;-தங்கைக்கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்விடுப்பர்தங் கையாற் றொழுது 373
ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக்காணமி லாதார் கடுவனையர்;-காணவேசெக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்அக்காரம் அன்னார் அவர்க்கு 374
பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலைதேம்படு தெண்கயத்து மீன்காட்டும்-ஆங்குமலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்விலங்கன்ன வெள்ளறிவி னார் 375
பொத்தகநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல்நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த - பொற்றொடியும்போர்தகர்க்கோ டாயினாள்; நன்னெஞ்சே!நிற்றியோ போதியோ நீ? 376
ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள் கொண்டுசேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினைஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவேதாமாம் பலரால் நகை 377
ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்தாம் ஆர்ந்த போதே தகர்க்கோடாம் - மான்நோக்கில்தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரேசெந்நெறிச் சேர்தும்என் பார் 378
ஊறுசெய் நெஞ்சம்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்தேறமொழிந்த மொழிகேட்டுத் - தேறிஎமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்தமரல்லர் தம் உடம்பினார் 379
உள்ளம் ஒருவன் உழையதா வொண்ணுதலார்கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளிஅறிந்த இடத்தும் அறியாராம் பாவம்செறிந்த வுடம்பி னார் 380
39. கற்புடை மகளிர்
அரும்பெறற் கற்பின் அயிராணி யன்னபெரும்பெயர்ப் பெண்டி ரெனினும், விரும்பிப்பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே பேணும்நறுநுதலாள் நன்மைத் துணை 381
குடநீரட் டுண்ணும் இடுக்கண் பொழுதுங்கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழிமாதர் மனைமாட்சி யாள் 382
நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்மேலாறு மேலுறை சோரினும்-மேலாயவல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின்இல்லாள் அமர்ந்ததே இல் 383
கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், உட்கிஇடனறிந் தூடி இனிதின் உணரும்மடமொழி மாதாரள் பெண் 384
எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும்அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; எஞ்ஞான்றும்என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையாற்பன்மார்பு சேர்ந்தொழுகு வார் 385
உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; தெள்ளியஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோநானுடையாள் பெற்ற நலம் 386
கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்றுஒருங்கொப்பக் கொண்டாறாம் ஊரன்; ஒருங்கொவ்வாநன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாதுஎன்னையுந் தோய வரும் 387
கொடியவை கூறாதி பாண! நீ கூறின்அடிபைய இட்டொதுங்கிச் சென்று-துடியின்இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால்வலக்கண் அனையார்க் குரை 388
சாய்பறிக்க நீர்திகழுந் தண்வய லூரன்மீதுஈப்பறக்க நொந்தேனும் யானேமன்;தீப்பறக்கத்தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்நோக்கி யிருந்தேனும் யான் 389
அரும்பவிழ் தாரினான் எம் அருளும் என்றுபெரும்பொய் உரையாதி, பாண, கரும்பின்கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்இடைக்கண் அனையார்க் குரை 390
Comments
Loading comments…