கவிதை நலன்கள்

புகழேந்தி நளன் கதை

காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தைதன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ்நன்னாட்டின் முன்னாட்டும் நாடு

வெஞ்சிலையே கோடுவன; மென்குழலே சோருவனஅஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சம்கலங்குவன; மாளிகைமேல் காரிகையார் கண்ணேவிலங்குவன மெய்ந்நெறியை விட்டு

தெரிவனநூல் என்றும் தெரியா தனவும் .வரிவளையார் தங்கண் மருங்கே - ஒரு பொழுதும்இல்லா தனவும் இரவே இகழ்ந்துஎவரும்கல்லாதனவும் கரவு

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்கிடப்பத்தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்ஒரு கூட்டில் வாழ உலகு

நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்தாணிறத்தாற் பொய்கைத் தலம்சிவப்ப மாணிறத்தான்முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்அன்னப்புள் தோன்றிற்றே ஆங்கு.

அஞ்சல் மடவனமே உன்றன் அணிநடையும்வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியதுகாணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டுமாணப் பிடித்ததார் மன்

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சாஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்.ஆளுமே பெண்மை அரசு

பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாம்; அவள் தன்மாமனைவாய் வாழும் மயிற்குலங்கள் - காமன்படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள் பாதநடைகற்பான் வந்தடைந்தோம் யாம்

செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்-மெய்ம்மைநளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்உளனென்பான் வேந்தன் உனக்கு

வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாமமொழிமேல் செவிவைத்து மோகச் - சுழிமேல்தான்நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்மஞ்சோட அன்னம் வர

முகம்பார்த் தருள்நோக்கி முன்னிரந்து செல்வர்அகம்பார்க்கும் அற்றோரைப் போல - மிகுங்காதல்கேளா விருந்திட்டான். அன்னத்தைக் கேளாரைவாளால் விருந்திட்ட மன்.

அழகு சுமந்திளைத்த ஆகத்தாள்; வண்டுபழகு கருங்கூந்தற் பாவை - மழகளிற்றுவீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம்; மற்றவளேகாமன் திருவுக்கோர் காப்பு

தேவர் பணிதலைமேற் செல்லும்; திரிந்தொருகால்மேவுமிளங் கன்னிபால்; மீண்டேகும் - பாவிற்குழல்போல நின்றுழலும் கொள்கைத்தே பூவின்நிழல்போலும் தண்குடையான் நெஞ்சு

தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்பூங்குவளை தாமரைக்கே பூத்ததே - ஆங்குமதுநோக்கும் தாரானும் வாள்நுதலும் தம்மில்பொதுநோக்கு எதிர்நோக்கும் போது

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்புவில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையென்னும்மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததேபுன்மாலை அந்திப் பொழுது

மன்னர் விழித்தா மரையூத்த மண்டபத்தேபொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச்செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்பொய்கைவாய் போவதே போன்று

பொன்னி யமுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின்சென்னி தடவும் திருநாடன் - பொன்னிற்சுணங்கவிழ்ந்த பூண்முலையாய் சூழமரிற் றுன்னார்கணங்கவிழ்ந்த வேலனிவன் காண்.

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்றென்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில்புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்மக்களையிங் கில்லா தவர்?

காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்டபாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஒடிஒளிக்கின்ற தென்னோ உரை?

போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கிநாவாய் குழற நடுங்குறுவாய் - தீவாய்அரவகற்றும் என்போல் ஆர்கடலே மாதைஇரவகற்றி வந்தாய்கொல் இன்று

கொங்கை யளைந்து சூழல் திருத்திக் கோலஞ்செய்அங்கை யிரண்டும் அடுபுகையால் - இங்ஙன்கருகியவோ என்றழுதாள் காதலனை முன்னாள்பருகியவேற் கண்ணாள் பதைத்து

கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோநீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்றுமாதோடு மன்னன் வரக்கண்ட மாநகருக்குஏதோ உரைப்பன் எதிர்?

கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்தமின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோஎன்போல் உழந்தார் இடர்?

அறங்கிடந்த நெஞ்சும் அருளொழுகு கண்ணும்மறங்கிடந்த திண்தோள் வலியும் - நிலங்கிடந்தசெங்கண்மால் அல்லனேல் தேர்வேந்தர் ஒப்பரோஅங்கண்மா ஞாலத் தவற்கு

வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாமமொழிமேல் செவிவைத்து மோகச் - சுழிமேல்தன்நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்மஞ்சோட அன்னம் வர

இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும்திசைமுகந்தால் அன்ன தெருவும் - வசையிறந்தபொன்னாடு போந்திருந்தாற் போன்றதேபோர்விதர்ப்பநன்னாடற் கோமான் தன் நாடு

"வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்பபொய்கையும் நீள் கழியும் புள்ளிழப்பப் டையவேசெவ்வாய் அன்றில் துணையிழப்பச்சென்றடைந்தான்வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு” (நளவெண்பா)

“பவள வாள் நுதல் திலகம் இழப்பத்தவள வாள் நகை கோவலன் இழப்ப”

கண்ணிமைத்தலால் அடிகள் காசியினில் தோய்தலால்வண்ணமலர்மாலை வாடுதலால் - எண்ணிநறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு - என்பார்.

Comments

Loading comments…