பாயிரம்

புகழேந்தி நளன் கதை

நேசர் இதங்கூர நிலவலயம் தாங்குநளன்மாசரி தங்கூற வருந்துணையாம் - ஈசன்கரியா னனத்தான் கருது புகழ்பூண்டகரியா னனத்தான் கழல் ⁠1

வளன்கூர் வயல்குழு மாநிடத மன்னன்நளன்சீர் நவிலுநல நல்கும் - உளஞ்சேர்மாமகிழ்மா றன்புகழாம் வண்தமிழ்வே தம்விரித்தமாமகிழ்மா றன்தாள் மலர் ⁠2

ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்முன்னின்றான் வேழம் முதலேஎன அழைப்பஎன்னென்றான் எங்கட் கிறை ⁠3

கலாப மயிலிருந்த பாகத்தார் கங்கைஉலாவு சடைமேல் உறையும் - நிலாவைவழியவார்த் தாலன்ன மாநீற்றார் நாகம்கழியவார்த் தார்நமக்கோர் காப்பு. ⁠4

நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழல்நாறிக்காலை இருள்சீக்கும் காய்கதிர்போல் - சோலைமணித்தோகை மேல்தோன்றி மாக்கடல் சூர்வென்றோன்அணிச்சே வடியென் அரண் ⁠5

வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின்தந்துவினால் கட்டச் சமைவதொக்கும் பைந்தொடையில்தேன்பாடுந் தார்நளன்றன் தெய்வத் திருக்கதையையான்பாடல் உற்ற இது ⁠6

பாரார் நிடத பதிநளன்சீர் வெண்பாவால்பேரார் புகழேந்தி பேசினான் - தாரார்செழியனையும் சென்னியையும் சேரத் திறைகொள்மொழியின் சுவையே முதிர்ந்து ⁠7

பாண்டவரின் முன்தோன்றல் பார்முழுதும் தோற்றொருநாள்ஆண்டகையே தூதுவனாய்ச் சென்றவனி - வேண்டமறுத்தான் இருந்தானை மண்ணொடும் போய்மாளப்பொறுத்தான் இருந்தான் புலர்ந்து ⁠8

நாட்டின்கண் வாழ்வைத் துறந்துபோய் நான்மறையோர்ஈட்டங்கள் சூழ இருந்தானைக்-காட்டில்பெருந்தகையைக் கண்டார்கள் பேரெழில்தோள் வேந்தர்வருந்தகையார் எல்லோரும் வந்து ⁠9

கொற்றவேல் தானைக் குருநாடன் பாலணைந்தான்எற்றுநீர் ஞாலத் திருள்நீங்க-முற்றும்வழிமுறையே வந்த மறையெல்லாம் தந்தான்மொழிமுறையே கோத்த முனி ⁠10

Comments

Loading comments…