1. சுயம்வர காண்டம்

புகழேந்தி நளன் கதை

மறைமுதல்வழியிங்கே வந்தருளப் பெற்றேல்பிறவிப் பெருந்துயரம் எல்லாம்-அறவேபிழைத்தேன்யான் என்றானப் பேராழி யானைஅழைத்தேவல் கொண்ட அரசு ⁠11

மெய்த்திருவந் துற்றாலும் வெந்துயர்வந் துற்றாலும்ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே-சித்தம்வருந்தியவா என்னென்றான் மாமறையால் உள்ளம்திருந்தியவா மெய்த்தவத்தோன் தேர்ந்து ⁠12

அம்பொற் கயிலைக்கே ஆகத் தரவணிவார்தம்பொற் படைக்குத் தமியனா-எம்பியைமுன்போக்கினேன் என்றுரைத்தான் பூதலத்தும் மீதலத்தும்வாக்கினேர் இல்லாத மன் ⁠13

காண்டா வனந்தீக் கடவுளுணக் கைக்கணையால்நீண்ட முகில்தடுத்து நின்றாற்கு-மீண்டமரர்தாளிரண்டும் நோவத் தனித்தனியே ஓடியநாள்தோளிரண்டும் அன்றோ துணை ⁠14

பேரரசும் எங்கள் பெருந்திருவும் கைவிட்டுச்சேர்வரிய வெங்கானம் சேர்தற்குக்-காரணம்தான்யாதோவப் பாவென்றான் என்றுந்தன் வெண்குடைக்கீழ்த்தீதோவப் பார்காத்த சேய். ⁠15

கேடில் விழுச்செல்வம் கேடெய்து சூதாடல்ஏடவிழ்தார் மன்னர்க்கு இயல்பேகாண்-வாடிக்கலங்கலைநீ என்றுரைத்தான் காமருவு நாடற்குஇலங்கலைநூல் மார்பன் எடுத்து ⁠16

கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்மண்ணிழந்து போந்து வனம்நண்ணி-விண்ணிழந்தமின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோஎன்போல் உழந்தார் இடர்? ⁠17

சேமவேல் மன்னனுக்குச் செப்புவான் செந்தனிக்கோன்நாமவேல் காளை நளனென்பான்-யாமத்தொலியாழி வையம் ஒருங்கிழப்பப் பண்டுகலியான் விளைந்த கதை ⁠18

காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்தாமரையின் செந்தேன் தளையவிழப்-பூமடந்தைதன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ்நன்னாட்டின் முன்னாட்டும் நாடு ⁠19

கோதை மடவார்தம் கொங்கை மிசைத்திமிர்ந்தசீதக் களபச் செழுஞ்சேற்றால்-வீதிவாய்மானக் கரிவழுக்கும் மாவிந்தம் என்பதோர்ஞானக் கலைவாழ் நகர் ⁠20

நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரைஎன்றும் அகில்கமழும் என்பரால்-தென்றல்அலர்த்தும் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்புலர்த்தும் புகைவான் புகுந்து ⁠21

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவனஅஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன-கஞ்சம்கலங்குவன மாளிகைமேல் காரிகையார் கண்ணேவிலங்குவன மெய்ந்நெறியை விட்டு ⁠22

தெரிவனநூல் என்றும் தெரியா தனவும்வரிவளையார் தங்கள் மருங்கே-ஒருபொழுதும்இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்கல்லா தனவும் கரவு ⁠23

மாமனுநூல் வாழ வருசந்திரன்சுவர்க்கிதாமரையாள் வைகும் தடந்தோளான்-காமருபூந்தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்பாராளும் வேந்தன் பதி ⁠24

ஓடாத தானை நளனென்றுளன்ஒருவன்பீடாரும் செல்வப் பெடைவண்டோ-டூடாமுருகுடைய மாதர் முலைநனைக்கும் தண்தார்அருகுடையான் வெண்குடையான் ஆங்கு ⁠25

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்கிடப்பத்தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்-மாதர்அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்ஒரு கூட்டில் வாழ உலகு ⁠26

வாங்குவளைக் கையார் வதன மதிபூத்தபூங்குவளைக் காட்டிடையே போயினான் - தேங்குவளைத்தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்பூனாடிச் சோலை புக ⁠27

வென்றி மதவேடன் வில்லெடுப்ப வீதியெலாம்தென்றல் மதுநீர் தெளித்துவர-நின்றதளவேனல் மீதலரும் தாழ்வரைசூழ் நாடற்குஇளவேனில் வந்தது எதிர் ⁠28

தேரின் துகளைத் திருந்திழையார் பூங்குழலின்வேரின் புனல்நனைப்ப வேயடைந்தான்-கார்வண்டுதொக்கிருந்தா லித்துழலும் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப்புக்கிருந்தால் அன்ன பொழில் ⁠29

நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்தாணிறத்தாற் பொய்கைத் தலம்சிவப்ப மாணிறத்தான்முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்அன்னப்புள் தோன்றிற்றே ஆங்கு ⁠30

பேதை மடவன்னந் தன்னைப் பிழையாமல்மேதிக் குலமேறி மென்கரும்பைக்-கோதிக்கடித்துத்தான் முத்துமிழும் கங்கைநீர் நாடன்பிடித்துத்தா என்றான் பெயர்ந்து ⁠31

நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம்ஓடி வளைக்கின்ற தொப்பவே-நீடியநற்பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்துதங்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து ⁠32

அன்னந்தனைப்பிடித்தங் காயிழையார் கொண்டுபோய்மன்னன் திருமுன்னர் வைத்தலுமே-அன்னம்மலங்கிற்றே தன்னுடைய வான்கிளையைத் தேடிக்கலங்கிற்றே மன்னவனைக் கண்டு ⁠33

அஞ்சல் மடவனமே உன்றன் அணிநடையும்வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியதுகாணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டுமாணப் பிடித்ததார் மன் ⁠34

செய்ய கமலத் திருவை நிகரானதையல் பிடித்த தனியன்னம்-வெய்யஅடுமாற்றம் இல்லா அரசன்சொல் கேட்டுத்தடுமாற்றம் தீர்ந்ததே தான் ⁠35

திசைமுகந்த வெண்கவிகைத் தேர்வேந்தே! உன்றன்இசைமுகந்த தோளுக்கு இசைவாள்-வசையில்தமையந்தி என்றோதும் தையலாள் மென்றோள்அமையந்தி என்றோர் அணங்கு ⁠36

அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச்-சொன்னமயில்ஆர்மடந்தை என்றான் அனங்கன் சிலைவளைப்பப்பார்மடந்தை கோமான் பதைத்து ⁠37

எழுவடுதோள் மன்னா இலங்கிழையோர் தூண்டக்கொழுநுதியிற் சாய்ந்த குவளை-உழுநர்மடைமிதிப்பத் தேன்பாயும் மாடொலிநீர் நாடன்கொடைவிதர்ப்பன் பெற்றதோர் கொம்பு ⁠38

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சாஆர்க்கும் சிலம்பே அணிமுரசா-வேற்படையும்வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்ஆளுமே பெண்மை அரசு⁠39

மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேறமாட்டா திடையென்று வாய்விட்டு-நாட்டேன்அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்துபுலம்புமாம் நூபுரங்கள் பூண்டு ⁠40

என்றும் நுடங்கும் இடையென்ப ஏழுலகும்நின்ற கவிகை நிழல்வேந்தே-ஒன்றிஅறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசும்சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து ⁠41

செந்தேன் மொழியாள் செறியளக பந்தியின்கீழ்இந்து முறியென் றியம்புவார்-வந்தென்றும்பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்திஏவாளி தீட்டும் இடம் ⁠42

அன்னமே நீயுரைத்த அன்னத்தை என்னாவிஉன்னவே சோரும் உனக்கவளோ-டென்னஅடைவென்றான் மற்றந்த அன்னமதை முன்னேநடைவென்றாள் தன்பால் நயந்து ⁠43

பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமவள் தன்மாமனைவாய் வாழும் மயிற்குலங்கள்-காமன்படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள் பாதநடைகற்பான் வந்தடைந்தோம் யாம் ⁠44

இற்றது நெஞ்சம் எழுந்த திருங்காதல்அற்றது மானம் அழிந்ததுநாண்-மற்றினியுன்வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்காமத்தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து ⁠45

வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடையவாம நெடும்புயத்தே வைகுவிப்பேன்-சேமநெடுங்குடையாய் என்றுரைத்து நீங்கியதே அன்னம்ஒடுங்கிடையாள் தன்பால் உயர்ந்து ⁠46

இவ்வளவிற் செல்லுங்கொல் இவ்வளவிற் காணுங்கொல்இவ்வளவிற் காதல் இயம்புங்கொல்-இவ்வளவில்மீளுங்கொல் என்றுரையா விம்மினான் மும்மதம்நின்றாளுங்கொல் யானை அரசு ⁠47

சேவற் குயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல் கேட்டுஆவி உருகி அழிந்திட்டான்-பூவின்இடையன்னச் செங்கால் இளவன்னம் சொன்னநடையன்னம் தன்பால் நயந்து ⁠48

அன்னம் உரைத்த குயிலுக் கலசுவான்மென்மயில்தான் தோகை விரித்தாட-முன்னதனைக்கண்டாற்றா துள்ளம் கலங்கினான் காமநோய்கொண்டார்க்கிஃ தன்றோ குணம் ⁠49

வாரணியும் கொங்கை மடவார் நுடங்கிடைக்குப்பேருவமை யாகப் பிறந்துடையீர்-வாரீர்கொடியார் எனச்செங்கை கூப்பினான் நெஞ்சம்துடியா நெடிதுயிராச் சோர்ந்து ⁠50

கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளஞ் சொற்கரும்பால்பொங்குசுழி என்னும் பூந்தடத்தில்-மங்கைநறும்கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோவெய்தாமக் காம விடாய் ⁠51

மன்னன் விடுத்த வடிவில் திகழ்கின்றஅன்னம்போய்க் கன்னி அருகணைய-நன்னுதலும்தன்னாடல் விட்டுத் தனியிடஞ்சேர்ந் தாங்கதனைஎன்னாடல் சொல்லென்றாள் ஈங்கு ⁠52

செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்-மெய்ம்மைநளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்உளனென்பான் வேந்தன் உனக்கு ⁠53

அறங்கிடந்த நெஞ்சும் அருளொழுகு கண்ணும்மறங்கிடந்த திண்தோள் வலியும்-நிலங்கிடந்தசெங்கண்மால் அல்லனேல் தேர்வேந்தர் ஒப்பரோஅங்கண்மா ஞாலத் தவற்கு ⁠54

புள்ளின் மொழியினொடு பூவாளி தன்னுடையஉள்ளம் கவர ஒளியிழந்த-வெள்ளைமதியிருந்த தாமென்ன வாய்த்திருந்தாள் வண்டின்பொதியிருந்த மெல்லோதிப் பொன் ⁠55

மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்அன்னம் உரைக்க அகமுருகி-முன்னம்முயங்கினாள் போல்தன் முலைமுகத்தைப் பாராமயங்கினாள் என்செய்வாள் மற்று? ⁠56

வாவி யுறையும் மடவனமே என்னுடையஆவி உவந்தளித்தாய் ஆதியால்-காவினிடைத்தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி என்றுரைத்தாள்பார்வேந்தன் பாவை பதைத்து ⁠57

மன்னன் புயம்நின் வனமுலைக்குக் கச்சாகும்என்ன முயங்குவிப்பேன் என்றன்னம்-பின்னும்பொருந்தவன்பால் ஓதிமலர்ப் பூங்கணைகள் பாயஇருந்தவன்பால் போன தெழுந்து ⁠58

கொற்றவன்தன் தேவிக்குக் கோமகன் தன் தோழியர்கள்உற்ற தறியா உளநடுங்கிப்-பொற்றொடிக்குவேறுபா டுண்டென்றார் வேந்தனுக்கு மற்றதனைக்கூறினாள் பெற்ற கொடி ⁠59

கருங்குழலார் செங்கையினால் வெண்கவரிப் பைங்கால்மருங்குலவ வார்முரசம் ஆர்ப்ப-நெருங்குபரிவளை நின்றேங்கப் போய்ப்புக்கான் பெற்றவரிவளைக்கை நல்லாள் மனை ⁠60

கோதை சுமந்த கொடிபோல் இடைநுடங்கத்தாதை திருவடிமேல் தான்வீழ்ந்தாள்-மீதெல்லாம்காந்தாரம் பாடிக் களிவண்டு நின்றரற்றும்பூந்தாரம் மெல்லோதிப் பொன் ⁠61

பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதன்மேல்நீரரும்பத் தன்பேதை நின்றாளைப்-பாராக்குலவேந்தன் சிந்தித்தான் கோவேந்தர் தம்மைமலர்வேய்ந்து கொள்ளும் மணம் ⁠62

மங்கை சுயம்வரநாள் ஏழென்று வார்முரசம்எங்கும் அறைகென் றியம்பினான்-பைங்கமுகின்கூந்தல்மேற் கங்கைக் கொழுந்தொடும் நன்னாடன்வேந்தர்மேல் தூதோட விட்டு ⁠63

மாமுத்த வெண்குடையான் மால்களிற்றான் வண்டிசைக்கும்தாமத் தரிச்சந் திரன்சுவர்க்கி-நாமத்தால்பாவேய்ந்த செந்தமிழாம் என்னப் பரந்ததேகோவேந்தர் செல்வக் குழாம் ⁠64

செந்தடையும் வண்டுறைதார்ச் செய்யாள் வளர்மார்பன்கந்தடையும் வேழக் கடைத் தலைவாய்-வந்தடைந்தபூவேந்தர் தங்கள்கிளை பொன்னகளில் ஈண்டிற்றேகோவேந்தன் மாதைக் குறித்து ⁠65

புள்ளுறையும் சோலைகளும் பூங்கமல வாவிகளும்உள்ளும் புறமும் இனிதுறைந்தார்-தெள்ளரிக்கண்பூமகளைப் பொன்னைப் பொருவேல் விதர்ப்பன்றன்கோமகளைத் தம்மனத்தே கொண்டு ⁠66

வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாமமொழிமேல் செவிவைத்து மோகச்-சுழிமேல்தான்நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்மஞ்சோட அன்னம் வர ⁠67

முகம்பார்த் தருள்நோக்கி முன்னிரந்து செல்வர்அகம்பார்க்கும் அற்றோரைப் போல - மிகுங்காதல்கேளா விருந்திட்டான் அன்னத்தைக் கேளாரைவாளால் விருந்திட்ட மன் ⁠68

அன்னக் குலத்தின் அரசே! அழிகின்றஎன்னுயிரை மீள எனக்களித்தாய் - முன்னுரைத்த

தேமொழிக்குத் தீதிலவே என்றான் திருந்தாரைஏமொழிக்கும் வேலான் எடுத்து ⁠69

கொற்றவன்றன் ஏவலினால் போயக் குலக்கொடிபால்உற்றதும் ஆங்கவள்தான் உற்றதுவும்-முற்றும்மொழிந்ததே அன்னம் மொழிகேட் டரசற்குஅழிந்ததே உள்ள அறிவு ⁠70

கேட்ட செவிவழியே கேளா துணர்வோடஒட்டை மனத்தோ டுயிர்தாங்கி-மீண்டும்குழியில் படுகரிபோல் கோமான் கிடந்தான்தழலில் படுதளிர்போல் சாய்ந்து ⁠71

கோதை சுயம்வரநாள் கொற்றவனுக் குற்றுரைப்பஏதமிலாக் காட்சியர்வந் தெய்தினார்-போதில்பெடையோடு வண்டுறங்கும் பேரொலிநீர் நாடன்அடையாத வாயில் அகம் ⁠72

காவலன்றன் தூதர் கடைக்கா வலர்க்கறிவித்தேவலிற்போய் ஈதென் றியம்புதலும்-மாவில்பொலிந்ததேர் பூட்டென்றான் பூவாளி பாய்மெலிந்ததோள் வேந்தன் விரைந்து ⁠73

கெட்ட சிறுமருங்குல் கீழ்மகளிர் நீள்வரம்பில்இட்ட பசுங்குவளை ஏரடித்த கட்டிகரையத்தேன் ஊறும் கடல்நாடன் ஊர்க்குவிரையத்தேர் ஊரென்றான் வேந்து ⁠74

சடைச்செந்நெல் பொன்விளைக்கும் தந்நாடு பின்னாகக்கடல்தானை முன்னாகக் கண்டான் - அடற்கமைந்தவல்லியரும் பொன்தாம வீமன் திருமகளாம்நல்லுயிரும் வாழும் நகர் ⁠75

நெற்றித் தனிக்கண் நெருப்பைக் குளிர்விக்கும்கொற்றத்தனியாழ்க் குலமுனிவன்-உற்றடைந்தான்தேனாடும் தெய்வத் தருவும் திருமணியும்வானாடும் காத்தான் மருங்கு ⁠76

வீரர் விறல்வேந்தர் விண்ணாடு சேர்கின்றார்ஆரும் இலரால் என்றையுற்று-நாரதனார்நன்முகமே நோக்கினான் நாகம் சிறகரிந்தமின்முகவேற் கையான் விரைந்து ⁠77

வீமன் மடந்தை மணத்தின் விரைதொடுத்ததாமம் புனைவான் சுயம்வரத்து-மாமன்னர்போயினார் என்றான் புரந்தரற்குப் பொய்யாதவாயினான் மாதவத்தோர் மன் ⁠78

அழகு சுமந்திளைத்த ஆகத்தாள் வண்டுபழகு கருங்கூந்தற் பாவை-மழகளிற்றுவீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம் மற்றவளேகாமன் திருவுக்கோர் காப்பு ⁠79

மால்வரையை வச்சிரத்தால் ஈர்ந்தானும் வானவரும்கோல்வளைதன் மாலைக் குறித்தெழுந்தார் சால்புடையவிண்ணாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்குமண்ணாடு நோக்கி மகிழ்ந்து ⁠80

பைந்தெரியல் வேல்வேந்தன் பாவைபாற் போயினதன்சிந்தை கெடுத்த தனைத் தேடுவான்-முந்திவருவான்போல் தேர்மேல் வருவானைக் கண்டார்பெருவானின் தேவர் பெரிது ⁠81

காவற் குடைவேந்தைக் கண்ணுற்ற விண்ணவர்கோன்ஏவல் தொழிலுக் கிசையென்றான்-ஏவற்கு

மன்னவனும் நேர்ந்தான் மனத்தினால் மற்றதனைஇன்னதென் றோரா திசைந்து ⁠82

செங்கண் மதயானைத் தேர்வேந்தே தேமாலைஎங்களிலே சூட்ட இயல்வீமன்-மங்கைபால்தூதாக என்றானத் தோகையைத்தன் ஆகத்தால்கோதாக வென்றானக் கோ ⁠83

தேவர் பணிதலைமேற் செல்லும் திரிந்தொருகால்மேவுமிளங் கன்னிபால் மீண்டேகும்-பாவிற்குழல்போல நின்றுழலும் கொள்கைத்தே பூவின்நிழல்போலும் தண்குடையான் நெஞ்சு ⁠84

ஆவ துரைத்தாய் அதுவே தலைநின்றேன்தேவர்கோ னேயத் திருநகரில்-காவல்கடக்குமா றென்னென்றான் காமநீர் ஆழிஅடக்குமா றுள்ளத் தவன் ⁠85

வார்வெஞ் சிலையொழி வச்சிரத்தால் மால்வரையைப்போர்வெஞ் சிறகறிந்த பொற்றோளான்-யாருமுனைக்காணார்போய் மற்றவளைக் காணென்றான் கார்வண்டின்பாணாறும் தாரானைப் பார்த்து ⁠86

இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும்திசைமுகந்தால் அன்ன தெருவும்-வசையிறந்தபொன்னாடு போந்திருந்தாற் போன்றதே போர்விதர்ப்பநன்னாடற் கோமான்தன் நாடு ⁠87

தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்பூங்குவளை தாமரைக்கே பூத்ததே-ஆங்குமதுநோக்கும் தாரானும் வாள்நுதலும் தம்மில்பொதுநோக்கு எதிர்நோக்கும் போது ⁠88

நீண்ட கமலத்தை நீலக் கடைசென்றுதீண்டும் அளவில் திறந்ததே - பூண்டதோர்அற்பின்தாழ் கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்கற்பின்தாழ் வீழ்த்த கதவு ⁠89

உய்ஞ்சு கரையேற ஒட்டுங்கொல் ஒண்டொடியாள்நெஞ்சு தடவும் நெடுங்கண்கள் - விஞ்சவேநீண்டதோ அங்ஙனே இங்ஙனே நீள்மலராள்ஆண்டதோள் மன்னன் அழகு ⁠90

மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்பொன்னாணும் புக்கொளிப்பப் புல்லுவனென் - றுன்னாஎடுத்தபே ரன்பை இடையே புகுந்துதடுத்ததே நாணாம் தறி ⁠91

காவல் கடந்தெங்கள் கன்னிமா டம்புகுந்தாய்யாவானோ விஞ்சைக் கிறைவனோ - தேவனோஉள்ளவா சொல்லென்றாள் ஊசற்குழைமீதுவெள்ளாவாள் நீர்சோர விட்டு ⁠92

தீராத காமத் தழலைத்தன் செம்மையெனும்நீரால் அவித்துக் கொடுநின்று - வாராதபொன்னாடர் ஏவலுடன் போந்தவா சொல்லித்தன்நன்னாடுஞ் சொன்னான் நளன் ⁠93

என்னுரையை யாதென்றிகழா திமையவர்வாழ்பொன்னுலகம் காக்கும் புரவலனை - மென்மாலைசூட்டுவா யென்றான் தொடையில்தேன் தும்பிக்கேஊட்டுவான் எல்லாம் உரைத்து ⁠94

இயமரம்நின் றார்ப்ப இனவளைநின் றேங்கவயமருதோள் மன்னா வகுத்த - சுயம்வரந்தான்நின்பொருட்டால் என்று நினைகென்றாள் நீள்குடையான்தன்பொருட்டால் நைவாள் தளர்ந்து ⁠95

போதரிக்கண் மாதராள் பொன்மாலை சூட்டத்தான்ஆதரித்தார் தம்மோ டவையகத்தே - சோதிச்செழுந்தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும்எழுந்தருள்க என்றாள் எடுத்து ⁠96

வானவர்கோன் ஏவல் வழிச்சென்று வாணுதலைத்தானணுகி மீண்டபடி சாற்றவே - தேன்முரலும்வண்டார் நளன்போந்து வச்சிரா யுதற்றொழுதான்கண்டார் உவப்பக் கலந்து ⁠97

விண்ணவர்தம் ஏவலுடன் வீமன் திருமகள்பால்நண்ணு புகழ்நளனும் நன்குரைத்த - பெண்ணணங்கின்வன்மொழியும் தேவர் மனமகிழத் தான்மொழிந்தமென்மொழியும் சென்றுரைத்தான் மீண்டு ⁠98

அங்கி அமுதம்நீர் அம்பூ அணியாடைஎங்குநீ வேண்டினைமற் றவ்விடத்தே - சங்கையறப்பெற்றாய் எனவருணன் ஆகண்டலன் தருமன்மற்றோனும் ஈந்தார் வரம் ⁠99

அங்கவர்கள் வேண்டும் வரங்கொடுக்கப் பெற்றவர்கள்தங்களொடும் தார்வேந்தன் சார்ந்தனன் மேல் - மங்கைவயமருவு கின்ற மனக்கா வலர்க்குச்சயமரந்தான் கண்டதோர் சார்பு ⁠100

தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்தமாதுவந்த பின்போன வன்னெஞ்சால் - யாதும்அயிர்த்தாள் உயிர்த்தாள் அணிவதனம் எல்லாம்வியர்த்தாள் உரைமறந்தாள் வீழ்ந்து ⁠101

உள்ளம்போய் நாண்போய் உரைபோய் வரிநெடுங்கண்வெள்ளம்போய் வேகின்ற மென்தளிர்போல் - பிள்ளைமீன்புள்ளரிக்கும் நாடன் திருமடந்தை பூவாளிஉள்ளரிக்கச் சோர்ந்தாள் உயிர் ⁠102

பூவின்வாய் வாளி புகுந்த வழியேயென்.ஆவியார் போனாலும் அவ்வழியே - பாவியேன்ஆசைபோ காதென் றழிந்தாள் அணியாழின்ஓசைபோல் சொல்லாள் உயிர்த்து ⁠103

வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்பபொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்ப - பையவேசெவ்வாய் அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு ⁠104

மாயிரு ஞாலத் துயிர்காண வானரங்கில்பாயிருள் என்னும் படாம்வாங்கிச் சேய்நின்றுஅறைந்தா ரணம்பாட ஆடிப்போய் வெய்யோன்மறைந்தான் குடபால் வரை ⁠105

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்புவில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையென்னும்மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததேபுன்மாலை அந்திப் பொழுது ⁠106

புற்கென்றார் அந்தி புனைமலர்க்கண் நீரரும்பநிற்கின்ற தந்தோ நிலங்காப்பான் - முற்கொண்டுஅடைகின்ற வேந்தர்க்கும் ஆண்டஞ்சி னோர்க்கும்இடைநின்ற காலம்போல் இன்று ⁠107

பைந்தொடியாள் ஆவி பருகுவான் நிற்கின்றஅந்தி முறுவலித்த தாமென்ன - வந்ததால்

மையார்மேற் கண்ணாள் வனமுலைமேல் ஆரழலைப்பெய்வான் அமைந்த பிறை ⁠108

கூட்டுமைபோய் சிறந்த கூரிருளைக் கூன்கோட்டால்கோட்டுமண் கொண்ட குளிர்திங்கள் - ஈட்டுமணிப்பூணிலா மென்முலைமேல் போதச் சொரிந்ததேநீணிலா வென்னும் நெருப்பு ⁠109

அன்னங்காள் நீங்களுமவ் வாதித்தன் தானும்போய்மன்னும் படியகலா வல்லிரவில் - மின்னும்மழைத்தாரை வல்லிருட்கும் வாடைக்கும் நாங்கள்பிழைத்தால்வந் தேனென்னும் பேர் ⁠110

கொப்புளங் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுதும்மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலொதேன்பொதிந்த வாயால் தெரிந்து ⁠111

கானுந் தடங்காவும் காமன் படைவீடுவானுந்தேர் வீதி மறிகடலும் - மீனக்கொடியாடை வையமெல்லாம் கோதண்ட சாலைபொடியாடி கொன்றதெல்லாம் பொய் ⁠112

கொள்ளைபோ கின்ற துயிரென்னும் கோளரவின்முள்ளெயிறோ மூரி நிலாவென்னும் - உள்ளம்கொடிதிரா என்னும் குழையும் தழல்போல்நெடிதிரா வாய்புலர நின்று ⁠113

வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோகொங்கை அனலிற் கொழுந்தியோ - திங்கள்விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோஎரிகின்ற தென்னோ இரா? ⁠114

ஊழி பலவோர் இரவாயிற் றோவென்னும்கோழி குரலடைத்த தோவென்னும் - ஆழி

துயிலாதோ என்னும் சுடர்மதியம் கான்றவெயிலால் உடலுருகா வீழ்ந்து ⁠115

ஆடி வரிவண் டருகே பறக்கவேவாடி மெலிவாள் வனமுலைமேல் - ஓடிப்பொறையாகச் சோர்வாள் பொறுக்குமோ மோகத்துறைவாய் அடங்காத் துயர்? ⁠116

ஈரமதியே இளநிலவே இங்ஙனமேசோர்குழலில் மீதே சொரிவதெவன் - மாரன்பொரவளித்தான் கண்ணி எனக்குப் புலராஇரவளித்தான் அல்லனோ இன்று ⁠117

தாங்கு நிலவின் தழல்போய்த் தலைக்கொள்ளத்தேங்குழல்சேர் வண்டு சிறைவெதும்ப - ஓங்குயிர்ப்பின்தாமங் கரியாத் தனியே தளர்கின்றாள்யாமங் கரியாக இன்று ⁠118

மையிட்ட கண்ணருவி வார வளைசோரக்கையிற் கபோலத் தலம்வைத்து - மெய்வருந்தித்தேனிருந்த பூங்கணையே தீயாகத் தேமொழியாள்தானிருந்து செய்வாள் தவம் ⁠119

அள்ளிக் கொளலாய் அடையத் திரண்டொன்றாய்க்கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளாய் - உள்ளம்புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்இதயமே போன்ற திரா ⁠120

ஊக்கிய சொல்லர் ஒலிக்கும் துடிக்குரலர்வீக்கிய கச்சையர் வேல்வாளர் - காக்கஇடையாமம் காவலர்கள் போந்தார் இருளில்புடைவாய் இருள்புடைத்தாற் போன்று ⁠121

சேமங் களிறுபுகத் தீம்பாலின் செவ்வழியாழ்தாமுள் ளிழைபுகுந்த தார்வண்டு - காமன்தன்பூவாளி ஐந்தும் புகத்துயில் புக்கதேஒவாது முந்நீர் உலகு ⁠122

ஊன்தின் றுவகையால் உள்ள வுயிர்புறம்பேதோன்றும் கழுதும் துயின்றதே - தான்றன்உரைசோரச் சோர உடல்சோர வாயின்இரைசோரக் கைசோர நின்று ⁠123

அன்றில் ஒருகண் துயின் றொருகண் ஆர்வத்தால்இன்றுணைமேல் வைத்துறங்கும் என்னும்சொல் - இன்றுதவிர்ந்தே போலரற்றிச் சாம்புகின்ற போதேஅவிழ்ந்ததே கண்ணிர் அவட்கு ⁠124

ஏழுலகும் சூழிருளாய் என்பொருட்டால் வேகின்றஆழ்துயரம் ஏதென் றறிகிலேன் - பாழிவரையோ எனுநெடுந்தோள் மன்னாவோ தின்னும்இரையோ இரவுக்கு யான்? ⁠125

கருவிக்கு நீங்காத காரிருள்வாய்க் கங்குல்உருவிப் புகுந்ததால் ஊதை - பருகிக்கார்வண்டுபோ கட்ட மலர்போல் மருள்மாலைஉண்டுபோ கட்ட உயிர்க்கு ⁠126

எழுந்திருக்கும் ஏமாந்து பூமாந்த தவிசின்விழுந்திருக்கும் தன்னுடம்பை மீளச் - செழுந்தரளத்தூணோடு சேர்க்கும் துணையேதும் இல்லாதேநானோடு நின்றழியும் நைந்து ⁠127

விரிகின்ற மெல்லமளி வெண்ணிலவின் மீதேசொரிகின்ற காரிருள்போல் சோரும் - புரிகுழலைத்தாங்கும் தளரும் தழலே நெடிதுயிர்க்கும்ஏங்கும் துயரோ டிருந்து ⁠128

உடைய மிடுக்கெல்லாம் என்மேல் ஒச்சிவிடிய மிடுக்கின்மை யாலோ - கொடியன்மேல்மாகாதல் வைத்ததோ மன்னவர்தம் இன்னருளோஏகாத தென்னோ இரா? ⁠129

மயங்கும் தெளியும் மனநடுங்கும் வெய்துற்றுஉயங்கும் வறிதே உலாவும் - வயங்கிழைபோய்ச்சோரும் துயிலும் துயிலாக் கருநெடுங்கண்நீரும் கடைசோர நின்று ⁠130

விழுது படத்திணிந்த வீங்கிருள்வாய்ப் பட்டுக்கழுதும் வழிதேடும் கங்குல் - பொழுதிடையேநீருயிர்க்கும் கண்ணோடு நெஞ்சுருகி வீழ்வார்தம்ஆருயிர்க்கு உண்டோ அரண் ⁠131

பூசுரர்தம் கைம்மலரும் பூங்குமுத மும்முகிழ்ப்பக்காசினியும் தாமரையும் கண்விழிப்ப - வாசம்அலர்ந்ததேங் கோதையின் ஆழ்துயரத் தோடுபுலர்ந்ததே அற்றைப் பொழுது ⁠132

வில்லி கணையிழப்ப வெண்மதியம் சீரிழப்பத்தொல்லை இருள்கிழியத் தோன்றினான் - வல்லிமணமாலை வேட்டிடுந்தோள் வாளரசர் முன்னேகுணவாயில் செங்கதிரோன் குன்று ⁠133

முரைசெறிந்த நாளேழும் முற்றியபின் கொற்றவரைசெறிந்த தோள்மன்னர் வந்தார் - விரைசெறிந்தமாலை துவள முடிதயங்க வால்வளையும்காலை முரசும் கலந்து ⁠134

மன்றலந்தார் மன்னன் நடுவணைய வந்திருந்தான்கன்று குதட்டிய கார்நீலம் - முன்றில்

குறுவிழிக்கு நேர்நாடன் கோதைபெருங் கண்ணின்சிறுவிழிக்கு நோற்றிருந்த சேய் ⁠135

நித்திலத்தின் பொற்றோடு நீலமணித் தோடாகமைத்தடங்கண் செல்ல வயவேந்தர் - சித்தம்மருங்கே வரவண்டின் பந்தற்கீழ் வந்தாள்அருங்கேழ் மணிப்பூண் அணங்கு ⁠136

பேதை மடமயிலைச் சூழும் பிணைமான் போல்கோதை மடமானைக் கொண்டணைந்த - மாதர்மருங்கின் வெளிவழியே மன்னவர்கண் புக்குநெங்கினவே மேன்மேல் நிறைந்து ⁠137

மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தேபொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச்செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்பொய்கைவாய் போவதே போன்று ⁠138

வடங்கொள் வனமுலையாள் வார்குழைமேல் ஓடும்நெடுங்கண் கடைபார்த்து நின்றான் - இடங்கண்டுபூவாளி வேந்தன்றன் பொன்னாவம் பின்னேயிட்டுஏவாளி நாணின்பால் இட்டு ⁠139

மன்னர் குலமும் பெயரும் வளநாடும்இன்ன பரிசென் றியலணங்கு - முன்னின்றுநார்வேந்தன் பெற்ற தனிக்கொடிக்குக் காட்டினாள்தேர்வேந்தர் தம்மைத் தெரிந்து ⁠140

பொன்னியமுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின்சென்னி தடவும் திருநாடன் - பொன்னிற்சுணங்கவிழ்ந்த பூண்முலையாய் சூழமரிற் றுன்னார்கணங்கவிழ்ந்த வேலனிவன் காண் ⁠141

போர்வாய் வடிவேலாற் போழப் படாதோரும்சூர்வாய் மதரரிக்கண் தோகாய்கேள் - பார்வாய்ப்பருத்ததோர் மால்வரையைப் பண்டொருகாற் செண்டால்திரித்தகோ விங்கிருந்த சேய் ⁠142

வென்றி நிலமடந்தை மென்முலைமேல் வெண்டுகில்போல்குன்றருவி பாயும் குடநாடன் - நின்றபுகழ்மாதே யிவன்கண்டாய் மானத் தனிக்கொடியின்மீதே சிலையுயர்த்த வேந்து ⁠143

ஆழிவடி யம்பலம்ப நின்றானும் அன்றொருகால்ஏழிசைநூற் சங்கத் திருந்தானும் - நீள்விசும்பின்நற்றேவர் தூது நடந்தானும் பாரதப்போர்செற்றானும் கண்டாயிச்சேய் ⁠144

தெரியில் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டைஅரவின் பசுந்தலையென் றஞ்சி - இரவெல்லாம்பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும்வள்ளைக் குருநாடர் மன் ⁠145

தேமருதார்க் காளை யிவன்கண்டாய் செம்மலர்மேல்காமருசங் கீன்ற கதிர்முத்தைத் - தாமரைதன்பத்திரத்தால் ஏற்கும் படுகர்ப் பழனஞ்சூழ்மத்திரத்தார் கோமான் மகன் ⁠146

அஞ்சாயல் மானே யிவன்கண்டாய் ஆலைவாய்வெஞ்சாறு பாய விளைந்தெழுந்த - செஞ்சாலிப்பச்சைத்தாள் மேதிக் கடைவாயிற் பாலொழுகும்மச்சத்தார் கோமான் மகன் ⁠147

வண்ணக் குவளை மலர்வெளவி வண்டெடுத்தபண்ணிற் செவிவைத்துப் பைங்குவளை - உண்ணாதருங்கடா நிற்கும் அவந்திநாடாளும்இருங்கடா யானை இவன் ⁠148

விடக்கதிர்வேற் காளை இவன்கண்டாய் மீனின்தொடக்கொழியப் போய்நிமிர்ந்த தூண்டில் - மடற்கமுகின்செந்தோடு பீறித்தேன் செந்நெற் பசுந்தோட்டில்வந்தோடும் பாஞ்சாலர் மன் ⁠149

அன்னம் துயிலெழுப்ப அந்தா மரைவயலில்செந்நெல் அரிவார் சினையாமை - வன்முதுகில்கூனிரும்பு தீட்டும் குலக்கோ சலநாடான்தேனிருந்த சொல்லாயிச் சேய் ⁠150

புண்டரிகம் தீயெரிவ போல்விரியப் பூம்புகைபோல்வண்டிரியும் தெண்ணீர் மகதர்கோன் - எண்டிசையில்போர்வேந்தர் கண்டறியாப் பொன்னாவம் பின்னுடையதேர்வேந்தன் கண்டாயிச் சேய் ⁠151

கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவளக் கோடிடறித்தேன்கழியில் வீழத் திரைக்கரத்தால் - வான்கடல்வந்தந்தோ எனவெடுக்கும் அங்கநா டாளுடையான்செந்தேன் மொழியாயிச் சேய் ⁠152

வெள்வாளைக் காளைமீன் மேதிக் குலமெழுப்பக்கள்வார்ந்த தாமரையின் காடுழக்கிப் - புள்ளோடுவண்டிரியச் செல்லும் மணிநீர்க் கலிங்கர்கோன்தண்டெரியல் தேர்வேந்தன் தான் ⁠153

அங்கை வரிவளையாய் ஆழித் திரைகொணர்ந்தசெங்கண் மகரத்தைத் தீண்டிப்போய்க் - கங்கயிடைச்சேல்குளிக்கும் கேகயர்கோன் தெவ்வாடற் கைவரைமேல்வேல்குளிக்க நின்றானிவ் வேந்து ⁠154

மாநீர் நெடுங்கயத்து வள்ளைக் கொடிமீதுதானேகும் அன்னம் தனிக்கயிற்றில் - போம்நீள்கழைக்கோ தையரேய்க்கும் காந்தார நாடன்மழைக்கோதை மானேயிம் மன் ⁠155

அங்கை நெடுவேற்கண் ஆயிழையாய் வாவியின்வாய்ச்சங்கம் புடைபெயரத் தான்கலங்கிச் - செங்கமலப்பூச்சிந்தும் நாட்டேறல் பொன்விளைக்கும் தண்பணைசூழ்மாச்சிந்து நாட்டானிம் மன் ⁠156

காவலரைத் தன்சேடி காட்டக்கண் டீரிருவர்தேவர் நளனுருவாச் சென்றிருந்தார் - பூவரைந்தமாசிலாப் பூங்குழலாள் மற்றவரை காணாநின்றுஊசலா டுற்றாள் உளம் ⁠157

பூணுக் கழகளிக்கும் பொற்றொடியைக் கண்டக்கால்நானுக்கு நெஞ்சுடைய நல்வேந்தர் - நீணிலத்துமற்றேவர் வராதார் வானவரும் வந்திருந்தார்பொற்றேர் நளனுருவாப் போந்து ⁠158

மின்னுந்தார் வீமன்றன் மெய்மரபிற் செம்மைசேர்கன்னியான் ஆகிற் கடிமாலை - அன்னந்தான்சொன்னவனைச் சூட்ட அருள்ளென்றாள் சூழ்விதியின்மன்னவனைத் தன்மனத்தே கொண்டு ⁠159

கண்ணிமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணிநறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு ⁠160

விண்ணரசர் எல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக்கண்ணகன் ஞாலம் களிகூர - மண்ணரசர்வன்மாலை தம்மனத்தே சூட வயவேந்தைப்பொன்மாலை சூட்டினாள் பொன் ⁠161

திண்டோள் வயவேந்தர் செந்தா மரைமுகம்போய்வெண்டா மரையாய் வெளுத்தவே - ஒண்டரளக்

கோமாலை வேலான் குலமாலை வேற்கண்ணாள்பூமாலை பெற்றிருந்த போது ⁠162

மல்லல் மறுகின் மடநா குடனாகச்செல்லும் மழவிடைபோல் செம்மாந்து - மெல்லியலாள்பொன்மாலை பெற்ற தோளோடும் புறப்பட்டான்நன்மாலை வேலான் நளன் ⁠163

வேலை பெறாவமுதம் வீமன் திருமடந்தைமாலை பெறாதகலும் வானாடர் - வேலைபொருங்கலிநீர் ஞாலத்தைப் புன்னெறில் ஆக்கும்இருங்கலியைக் கண்டார் எதிர் ⁠164

ஈங்குவர வென்னென் றிமையவர்தம் கோன்வினவத்தீங்கு தருகலியும் செப்பினான் - நீங்கள்விருப்பான வீமன் திருமடந்தை யோடும்இருப்பான் வருகின்றேன் யான் ⁠165

மன்னவரில் வைவேல் நளனே மதிவதனக்கன்னி மணமாலை கைக்கொண்டான் - உன்னுடையஉள்ளக் கருத்தை ஒழித்தே குதியென்றான்வெள்ளைத் தனியானை வேந்தது ⁠166

விண்ணரசர் நிற்க வெறித்தேன் மனமாலைமண்ணரசர்க் கீந்த மடமாதின் - எண்ணம்கெடுக்கின்றேன் மற்றவள்தன் கேள்வற்கும் கீழ்மைகொடுக்கின்றேன் என்றான் கொதித்து ⁠167

வாய்மையும் செங்கோல் வளனும் மனத்தின்கண்தூய்மையும் மற்றவன் தோள்வலியும் - பூமான்நெடுங்கற்பும் மற்றவர்க்கு நின்றுரைத்துப் போனான்அருங்கொற்ற வச்சிரத்தான் ஆங்கு ⁠168

செருக்கதிர்வேல் கண்ணியுடன் தேர்வேந்தன் கூடஇருக்கத் தரியேன் இவரைப் - பிரிக்கஉடனாக என்றான் உடனே பிறந்தவிடநாகம் அன்னான் வெகுண்டு ⁠169

வெங்கதிரோன் தானும் விதர்ப்பன் திருமடந்தைமங்கலநாள் காண வருவான்போல் - செங்குமுதம்வாயடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நன்னெஞ்சில்தீயடங்க ஏறினான் தேர் ⁠170

இன்னுயிர்க்கு நேரே இளமுறுவல் என்கின்றபொன்னழகைத் தாமே புதைப்பார்போல் - மென்மலரும்சூட்டினார் சூட்டித் துடிசேர் இடையாளைப்பூட்டினார் மின்னிமைக்கும் பூண் ⁠171

கணிமொழிந்த நாளிற் கடிமணமும் செய்தார்அணிமொழிக்கும் அண்ண லவற்கும் - பணிமொழியார்குற்றேவல் செய்யக் கொழும்பொன் அறைபுக்கார்மற்றெவரும் ஒவ்வார் மகிழ்ந்து ⁠172

செந்திருவின் கொங்கையினும் தேர்வேந்த னாகத்தும்வந்துருவ வார்சிலையைக் கால்வளைத்து - வெந்தீயும்நஞ்சும் தொடுத்தனைய நாம மலர்வாளிஅஞ்சும் தொடுத்தான் அவன் ⁠173

ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கிஇருவரெனும் தோற்ற மின்றிப் - பொருவெங்கனற்கேயும் வேலானுங் காரிகையுஞ் சேர்ந்தார்புனற்கே புனல்கலந்தாற் போன்று ⁠174

குழைமேலும் கோமா னுயிர்மேலும் கூந்தல்மழைமேலும் வாளோடி மீள - விழைமேலே

அல்லோடும் வேலான் அகலத்தோ டும்பொருதாள்வல்லோடும் கொங்கை மடுத்து ⁠175

வீரனக லச்செறுவின் மீதோடிக் குங்குமத்தின்ஈரவிள வண்ட லிட்டதே - நேர்பொருதகாராரும் மெல்லோதிக் கன்னியவள் காதலெனும்ஓராறு பாய வுடைந்து ⁠176

கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்செங்கயற்க ணோடிச் செவிதடவ - அங்கைவளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்விளைபூசற் கொல்யானை வேந்து ⁠177

தையல் தளிர்கரங்கள் தன்தடக்கை யாற்பற்றிவையம் முழுதும் மகிழ்தூங்கத் - துய்யமணந்தான் முடிந்ததற்பின் வாணுதல் தானும்புணர்ந்தார் நெடுங்காலம் புக்கு ⁠178

முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்அழைக்கைக்கு முன்செல் அடி ⁠179

செக்கர் நெடுவானில் திங்கள் நிலாத்துளும்பிஉக்க தெனச்சடைமேல் உம்பர்நீர் - மிக்கொழுகும்வெள்ளத்தான் வெள்ளி நெடுங்கிரியான் மெய்யன்பர்உள்ளத்தான் எங்கட் குளன் ⁠180

தவளத் தனிக்குடையின் வெண்ணிழலும் தையல்குவளைக் கருநிழலும் கொள்ளப் - பவளக்

Comments

Loading comments…