2. கலிதொடர் காண்டம்

புகழேந்தி நளன் கதை

கொழுந்தேறிச் செந்நெற் குலைசாய்க்கும் நாடன்செழுந்தேரில் ஏறினான் சென்று ⁠181

மங்கையர்கள் வாச மலர்கொய்வான் வந்தணையப்பொங்கி எழுந்த பொறிவண்டு - கொங்கோடுஎதிர்கொண் டணைவனபோல் ஏங்குவன முத்தின்கதிர்கொண்ட பூண்முலையாய் காண் ⁠182

பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரேபூவையர்கை தீண்டலுமப் பூங்கொம்பு - மேவியவர்பொன்னடியிற் றாழ்ந்தனவே பூங்குழலாய் காணென்றான்மின்னெடுவேற் கையான் விரைந்து ⁠183

மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமேவேர்த்தாளைக் கானென்றான் வேந்து ⁠184

புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்செல்லும் மடந்தை சிலம்பவித்து - மெல்லப்போய்அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக் கொய்வாளைச்செம்மலரில் தேனே தெளி ⁠185

கொய்த மலரைக் கொடுங்கையி னாலணைத்துமொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து - தையலாள்பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்காதார மில்லா தறிந்து ⁠186

ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும்புலவித்தோற்ற வமளியெனத் தோற்றுமால் - காற்றசைப்பஉக்க மலரோ டுகுத்தவளை முத்தமேஎக்கர் மணன்மே லிசைந்து ⁠187

அலர்ந்த மலர்சிந்தி அம்மலர்மேற் கொம்புபுலர்ந்தசைந்து பூவணைமேற் புல்லிக்-கலந்தொசிந்த

புல்லென்ற கோலத்துப் பூவையரைப் போன்றதேஅல்லென்ற சோலை அலகு ⁠188

கொங்கை முகத்தணையக் கூட்டிக் கொடுங்கையால்அங்கணைக்க வாய்நெகிழ்ந்த ஆம்பற்பூ-கொங்கவிழ்தேன்வார்க்கின்ற கூந்தன் முகத்தை மதியென்றுபார்க்கின்ற தென்னலாம் பார் ⁠189

கொய்த குவளை கிழித்துக் குறுநுதன்மேல்எய்தத் தனிவைத்த ஏந்திழையாள்-வையத்தார்உண்ணாக் கடுவிடத்தை யுண்ட வொருமூன்றுகண்ணானைப் போன்றனளே காண் ⁠190

கொழுநன் கொழுந்தாரை நீர்விசக் கூசிச்செழுமுகத்தைத் தாமரைக்கே சேர்த்தாள்-கெழுமியவக்கோமகற்குத் தானிணைந்த குற்றங்கள் அத்தனையும்பூமகட்குச் சொல்லுவாள் போல் ⁠191

பொய்தற் கமலத்தின் போதிரண்டைக் காதிரண்டில்பெய்து முகமூன்று பெற்றாள்போல்-எய்தவருவாளைப் பாரென்றான் மாற்றாரை வென்றுசெருவாளைப் பார்த்துவக்கும் சேய் ⁠192

பொன்னுடைய வாசப் பொகுட்டு மலரலையத்தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த-மின்னுடையபூணாள் திருமுகத்தைப் புண்டரிகம் என்றயிர்த்துக்காணா தயர்வானைக் காண்க ⁠193

சிறுக்கின்ற வாண்முகமும் செங்காந்தட் கையால்முறுக்குநெடு மூரிக் குழலும்-குறிக்கின்கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட காட்சிஅரும்பாம் பணைமுலையாய் ஆம் ⁠194

சோர்புனலில் மூழ்கி எழுவாள் சுடர்நுதல்மேல்வார்குழலை நீக்கி வருந்தோற்றம்-பாராய்

விரைகொண் டெழுந்தபிறை மேகத் திடையேபுரைகின்ற தென்னலாம் பொற்பு ⁠195

செழுநீலம் நோக்கெறிப்பச் செங்குவளை கொய்வாள்முழுநீலம் என்றயிர்த்து முன்னர்க்-கழுநீரைக்கொய்யாது போவாளைக் கோல்வளைக்குக் காட்டினான்வையாரும் வேற்றடக்கை மன் ⁠196

காவி பொருநெடுங்கண் காதலியும் காதலனும்வாவியும் ஆறும் குடைந்தாடித்-தேவின்கழியாத சிந்தையுடன் கங்கை நதிஆடிஒழியா துறைந்தார் உவந்து ⁠197

நறையொழுக வண்டுறையும் நன்னகர்வாய் நாங்கள்உறையும் இளமரக்கா ஒக்கும்-இறைவளைக்கைச்சிற்றிடையாய் பேரல்குல் தேமொழியாய் மென்முறுவல்பொற்றொடியாய் மற்றிப் பொழில் ⁠198

கன்னியர்தம் வேட்கையே போலும் களிமழலைதன்மணிவாய் உள்ளே தடுமாற-மன்னவனேஇக்கடிகா நீங்கள் உறையும் இளமரக்காஒக்குமதோ என்றாள் உயிர்த்து ⁠199

தொண்டைக் கனிவாய் துடிப்பச் சுடர்நுதல்மேல்வெண்தரளம் என்ன வியர்வரும்பக்-கெண்டைக்கடைசிவப்ப நின்றாள் கழல்மன்னர் வெள்ளைக்குடைசிவப்ப நின்றான் கொடி ⁠200

தங்கள் புலவித் தலையில் தனித்திருந்தமங்கை வதன மணியரங்கில்-அங்கண்வடிவாள்மேற் கால்வளைத்து வார்புருவம் என்னும்கொடியாடக் கண்டானோர் கூத்து ⁠201

சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சீரடியைத்தொல்லை மணிமுடிமேற் சூட்டினான்-வல்லைமுழுநீலக் கோதை முகத்தே மலர்ந்தசெழுநீலம் மாறாச் சிவப்பு ⁠202

அங்கைவேல் மன்னன் அகலம் எனுஞ் செறுவில்கொங்கையேர் பூட்டிக் குறுவியர்நீர்-அங்கடைத்துக்காதல் வரம்பொழுக்கிக் காமப் பயிர்விளைத்தாள்கோவையரின் மேலான கொம்பு ⁠203

வேரி மழைதுளிக்கும் மேகக் கருங்கூந்தற்காரிகையும் தானும்போய்க் கண்ணுற்றான்-மூரித்திரையேற மென்கிடங்கிற் சேலேற வாளைகரையேறும் கங்கைக் கரை ⁠204

சூதக் கணியூறல் ஏற்ற சுருள்வாழைகோதில் நறவேற்கும் குப்பியென-மாதரார்ஐயுற்று நோக்கும் அகன்பொழில்சென் றெய்தினான்வையுற்ற வேற்றானை மன் ⁠205

வான்தோய நீண்டுயர்ந்த மாடக் கொடிநுடங்கத்தான்தோன்று மாற்றின் தடம்பதிதான்-வான்தோன்றிவில்விளக்கே பூக்கும் விதர்ப்பநா டாளுடையான்நல்விளக்கே எங்கள் நகர் ⁠206

பொய்கையும் வாசப் பொழிலும் எழிலுருவச்செய்குன்றும் ஆறும் திரிந்தாடித்-தையலுடன்ஆறிரண்டாண் டெல்லை கழித்தான் அடையலரைக்கூறிரண்டாக் கொல்யானைக் கோ ⁠207

கோல நிறம்விளர்ப்பக் கொங்கை முகங்கருகநீல நிறமயிர்க்கால் நின்றெறிப்ப-நூலென்னத்

தோன்றாத நுண்மருங்குல் தோன்றச் சுரிகுழலாள்ஈன்றாள் குழவி இரண்டு.⁠208

ஆண்டிரண்டா றெல்லை அளவும் திரிந்தேயும்காண்டகைய வெங்கலியும் காண்கிலான்-நீண்ட புகழ்ச்செந்நெறியாற் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்தன்னெறியால் வேறோர் தவறு ⁠209

சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டுபுந்தி மகிழப் புகுந்துகலி-சிந்தையெல்லாம்தன்வயமே ஆக்குந் தமையனுடனிருந்தான்பொன்னசல மார்பற் புகைந்து ⁠210

நாராய னாயநமவென்றவனடியிற்சேராரை வெந்துயரம் சேர்ந்தாற்போல்-பாராளும்கொற்றவனைப் பார்மடந்தைக் கோமானை வாய்மைநெறிகற்றவனைச் சேர்ந்தான் கலி ⁠211

நன்னெறியில் சூதால் நளனைக் களவியற்றித்தன்னரசு வாங்கித் தருகின்றேன்-மன்னவனே!போதுவாய் என்னுடனே என்றான் புலைநரகுக்கேதுவாய் நின்றான் எடுத்து ⁠212

புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்கன்னி இளமேதிக் காற்குழம்பு-பொன்னுரைத்தகல்லேய்க்கும் நாடன் கவறாடப் போயினான்கொல்லேற்றின் மேலேறிக் கொண்டு ⁠213

வெங்கட் சினவிடையின் மேலேறிக் காலேறக்கங்கைத் திரைநீர் கரையேறிச்-செங்கதிர்ப்பைம்பொன்னொழியப் போதும் புறம்பணைசூழ் நன்னாடுபின்னொழியப் போந்தான் பெயர்ந்து ⁠214

அடற்கதிர்வேல் மன்னன் அவனேற்றின் முன்போய்எடுத்தகொடி என்னகொடி என்ன-மிடற்சூதுவெல்லும் கொடியென்றான் வெங்கலியால் அங்கவன்மேல்செல்லும் கொடியோன் தெரிந்து ⁠215

ஏன்றோம் இதுவாயின் மெய்ம்மையே எம்மோடுவான்றோய் மடல்தெங்கின் வான்தேறல்-தான்தேக்கிமீதாடி வாளைவயல் வீந்துழக்கும் நன்னாடன்சூதாட என்றான் துணிந்து ⁠216

காதல் கவறாடல் கள்ளுண்டல் பொய்ம்மொழிதல்ஈதல் மறுத்தல் இவைகண்டாய்-போதில்சினையாமை வைகும் திருநாடா செம்மைநினையாமை பூண்டார் நெறி ⁠217

அறத்தைவேர் கல்லும் அருநரகிற் சேர்க்கும்திறத்தையே கொண்டருளைத் தேய்க்கும்-மறத்தையேபூண்டுவிரோ தஞ்செய்யும் பொய்ச்சூதை மிக்கோர்கள்தீண்டுவரோ வென்றார் தெரிந்து ⁠218

உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்திருவழிக்கும் மாணஞ் சிதைக்கும்-மருவும்ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூதுபொருவரோ தக்கோர் புரிந்து ⁠219

ஆயம் பிடித்தாரும் அல்லற் பொதுமகளிர்நேயம் பிடித்தாரும் நெஞ்சிடையே-மாயம்பிடித்தாரின் வேறல்ல ரென்றுரைப்ப தன்றே -வடித்தாரின் நூலோர் வழக்கு ⁠220

தீது வருக நலம்வருக சிந்தையாற்சூது பொரவிசைந்து சொல்லினோம்-யாதும்விலக்கலிர்நீ ரென்றான் வராலேற மேதிகலக்கலைநீர் நாடன் கனன்று ⁠221

நிறையில் கவறாடல் நீநினைந்தா யாகில்திரையிற் கதிர்முத்தஞ் சிந்தும்-துறையில்கரும்பொடியா மள்ளர் கடாவடிக்கும் நாடாபொரும்படியா தென்றானிப் போது ⁠222

விட்டொளிர்வில் வீசி விளங்குமணிப் பூணாரம்ஒட்டினேன் உன்பணையும் ஏதென்ன-மட்டவிழ்தார்மல்லேற்ற தோளானும் வான்பணைய மாகத்தன்கொல்லேற்றை வைத்தான் குறித்து ⁠223

காரேயும் கூந்தலார் காரிகைமேற் காதலித்ததாரேயும் தோளான் தனிமனம்போல்-நேரேதவறாய்ப் புரண்ட தமைய னொடுங்கூடிக்கவறாய்ப் புரண்டான் கலி ⁠224

வைத்த மணியாரம் வென்றேன் மறுபலகைக்கொத்த பணயம் உரையென்ன-வைத்தநிதிநூறாயிரத்திரட்டி நூறுநூறாயிரமும்வேறாகத் தோற்றானவ் வேந்து ⁠225

பல்லா யிரம்பரியும் பத்துநூறாயிரத்துச்சொல்லார் மணித்தேரும் தோற்றதற்பின்-வில்லாட்கள்முன்றோற்று வானின் முகிறோற்கும் மால்யானைபின்றோற்றுத் தோற்றான் பிடி ⁠226

சாதுரங்கம் வென்றேன் தரும்பணைய மேதென்னமாதுரங்கம் பூணும் மணித்தேரான்-சூதரங்கிற்

பாவையரைச் செவ்வழியாழ்ப் பண்ணின்மொழிப் பின்னுகுழற்பூவையரைத் தோற்றான் பொருது ⁠227

கற்பின் மகளிர்பா னின்றும் தமைக்கவட்டின்விற்கு மகளிர்பான் மீண்டாற்போல் - நிற்கும்நெறியானை மெய்ம்மைவாய் நின்றானை நீங்கிச்சிறியானைச் சேர்ந்தாள் திரு ⁠228

மனைக்குரியார் அன்றே வருந்துயரம் தீர்ப்பார்சினைச்சங்கின் வெண்டலையைத் தேனால் - நனைக்கும்குவளைப் பணைப்பைந்தாட் குண்டுநீர் நாடாஇவளைப் பணையந்தா வின்று ⁠229

இனிச்சூ தொழிந்தோம் இனவண்டு கிண்டிக்கனிச்சூத வார்பொழிலின் கண்ணே - பனிச்சூதப்பூம்போ தவிழ்க்கும் புனனாடன் பொன்மகளேநாம்போதும் என்றான் நளன் ⁠230

மென்காற் சிறையன்னம் வீற்றிருந்த மென்மலரைப்புன்காகம் கொள்ளத்தான் போனாற்போல்-தன்கால்பொடியாடத் தேவியொடும் போயினா னன்றேகொடியானுக் கப்பார் கொடுத்து ⁠231

கடப்பா ரெவரே கடுவினையை வீமன்மடப்பாவை தன்னுடனே மன்னன் - நடப்பான்வனத்தே செலப்பணித்து மாயத்தாற் சூழ்ந்ததனைத்தே விதியின் வலி ⁠232

ஆருயிரின் தாயே அறத்தின் பெருந்தவமேபேரருளின் கண்ணே பெருமானே-பாரிடத்தையார்காக்கப் போவதுநீ யாங்கென்றார் தங்கண்ணின்நீர்வார்த்துக் கால்கழுவா நின்று⁠233

வேலை கரையிழந்தால் வேத நெறிபிறழ்ந்தால்ஞாலம் முழுதும் நடுவிழந்தால்-சீலம்ஒழிவரோ செம்மை உரைதிறம்பாச் செய்கைஅழிவரோ செங்கோ லவர். ⁠234

வடியேறு கூரிலைவேன் மன்னாவோ உன்றன்அடியேற்கட் காதரவு தீரக்-கொடிநகரில்இன்றிருந்து நாளை எழுந்தருள்க என்றுரைத்தார்வென்றிருந்த தோளான்றாள் வீழ்ந்து ⁠235

மன்றலிளங் கோதை முகநோக்கி மாநகர்வாய்நின்றுருகு வார்கண்ணி னிர்நோக்கி-இன்றிங்கிருத்துமோ வென்றா னிளங்குதலை வாயாள்வருத்தமோ தன்மனத்தில் வைத்து ⁠236

வண்டாடும் தார்நளனை மாநகரில் யாரேனும்கொண்டாடினார் தம்மைக் கொல்லென்று-தண்டாமுரசறைவா யாங்கென்றான் முன்னே முனிந்தாங்கரசறியா வேந்த னழன்று⁠237

அறையும் பறையரவங் கேட்டழிந்து நைந்துபிறைநுதலாள் பேதமையை நோக்கி-முறுவலியாஇந்நகர்க்கீ தென்பொருட்டா வந்த தெனவுரைத்தான்மன்னகற்றும் கூரிலைவேன் மன். ⁠238

தன்வாயில் மென்மொழியே தாங்கினான் ஓங்குநகர்ப்பொன்வாயில் பின்னாகப் போயினான்-முன்னாளில்பூமகளைப் பாரினொடு புல்லினான் தன்மகனைக்கோமகளைத் தேவியொடுங் கொண்டு⁠239

கொற்றவன்பால் செல்வாரைக் கொல்வான் முரசறைந்துவெற்றியோடு புட்கரனும் வீற்றிருப்ப-முற்றும்இழவு படுமாபோல் இல்லங்க டோறும்குழவிபா லுண்டிலவே கொண்டு⁠240

சந்தக் கழற்றா மரையுஞ் சதங்கையணிபைந்தளிரும் நோவப் பதைத்துருகி-எந்தாய்வடந்தோய் களிற்றாய் வழியான தெல்லாம்கடந்தோமோ வென்றார் கலுழ்ந்து⁠241

தூயதன் மக்கள் துயர்நோக்கிச் சூழ்கின்றமாய விதியின் வலிநோக்கி - யாதும்தெரியாது சித்திரம்போல் நின்றிட்டான் செம்மைபுரிவான் துயரால் புலர்ந்து⁠242

காதல் இருவரையும் கொண்டு கடுஞ்சுரம் போக்கேதம் உடைத்திவரைக் கொண்டுநீ-மாதராய்வீமன் திருநகர்க்கே மீளென்றான் விண்ணவர்முன்தாமம் புனைந்தாளைத் தான்⁠243

குற்றமில் காட்சிக் குதலைவாய் மைந்தரையும்பெற்றுக் கொளலாம் பெறலாமோ-கொற்றவனேகோக்காதலனைக் குலமகளுக் கென்றுரைத்தாள்நோக்கான் மழைபொழியா நொந்து⁠244

கைதவந்தான் நீக்கிக் கருத்திற் கறையகற்றிச்செய்தவந்தான் எத்தனையும் செய்தாலும்-மைதீர்மகப்பெறா மானிடர்கள் வானவர்தம் மூர்க்குப்புகப்பெறார் மாதராய் போந்து⁠245

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்றென்னுடைய ரேனும் உடையரோ-இன்னடிசில்புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்மக்களையிங் கில்லாதவர்?⁠246

சொன்ன கலையின் துறையனைத்தும் தோய்ந்தாலும்என்ன பயனுடைத்தாம் இன்முகத்து-முன்னங்குறுகு தலைக் கிண்கிணிக்காற் கோமக்கள் பால்வாய்ச்சிறுகுதலை கேளாச் செவி ⁠247

போற்றரிய செல்வம் புனனாட் டொடும்போகத்தோற்றமையும் யாவற்குந் தோற்றாதே-ஆற்றலாய்எம்பதிக்கே போந்தருளு கென்றா ளெழிற்கமலச்செம்பதிக்கே வீற்றிருந்த தேன் ⁠248

சினக்கதிர்வேற் கண்மடவாய் செல்வர்பாற் சென்றீஎனக்கென்னு மிம்மாற்றங் கண்டாய்-தனக்குரியதானந் துடைத்துத் தருமத்தை வேர்பறித்துமானந் துடைப்பதோர் வாள்⁠249

மன்னவராய் மன்னர் தமையடைந்து வாழ்வெய்திஇன்னமுதம் தேக்கி யிருப்பாரேல்-சொன்னபெரும்பே டிகளலரேற் பித்தரே யன்றோஅரும்பேடை மானே யவர் ⁠250

செங்கோலாய் உன்றன் திருவுள்ளம் ஈதாயின்எங்கோன் விதர்ப்பன் எழில்நகர்க்கே-நங்கோலக்காதலரைப் போக்கி அருளென்றாள் காதலருக்கேதிலரைப் போல எடுத்து ⁠251

பேதை பிரியப் பிரியாத பேரன்பின்காதலரைக் கொண்டுபோய்க் காதலிதன்-தாதைக்குக்காட்டுநீ என்றான் கலங்காத உள்ளத்தைவாட்டுநீர் கண்ணிலே வைத்து ⁠252

தந்தை திருமுகத்தை நோக்கித்தமைப்பயந்தாள்இந்து முகத்தை எதிர்நோக்கி-எந்தம்மை

வேறாகப் போக்குதிரோ என்றார் விழிவழியஆறாகக் கண்ணி அழுது ⁠253

அஞ்சனந்தோய் கண்ணின் அருவிநீர் ஆங்கவர்க்குமஞ்சனநீர் ஆக வழிந்தோட - நெஞ்சுருகிவல்லிவிடா மெல்லிடையாள் மக்களைத்தன் மார்போடும்புல்லிவிடா நின்றாள் புலர்ந்து ⁠254

இருவர் உயிரும் இருகையான் வாங்கிஒருவன் கொண்டேகுவான் ஒத்து-அருமறையோன்கோமைந்த னோடிளைய கோதையைக் கொண்டேகினான்வீமன் நகர்க்கே விரைந்து ⁠255

காத லவர்மேலே கண்ணோட விண்ணோடும்ஊதை எனநின்றுயிர்ப்போட-யாதும்உரையாடா துள்ளம் ஒடுங்கினான் வண்டுவிரையாடும் தாரான் மெலிந்து ⁠256

சேலுற்ற வாவித் திருநாடு பின்னொழியக்காலிற் போய்த் தேவியொடும் கண்ணுற்றான் - ஞாலஞ்சேர்கள்ளிவே கத்தரவின் கண்மணிகள் தாம்பொடியாத்துள்ளிவே கின்ற சுரம் ⁠257

கன்னிறத்த சிந்தைக் கலியுமவன் முன்பாகப்பொன்னிறத்த புள்வடிவாய்ப் போந்திருந்தான் - நன்னெறிக்கேஅஞ்சிப்பார் ஈந்த அரசனையும் தேவியையும்வஞ்சிப்பான் வேண்டி வனத்து. ⁠258

தேன்பிடிக்கும் தண்துழாய்ச் செங்கண் கருமுகிலைமான்பிடிக்கச் சொன்ன மயிலேபோல்-தான்பிடிக்கப்பொற்புள்ளைப் பற்றித்தா என்றாள் புதுமழலைச்சொற்கிள்ளை வாயாள் தொழுது ⁠259

பொற்புள் ளதனைப் பிடிப்பான் நளன்புகுதக்கைக்குள் வருமாபோற் கழன்றோடி - எய்க்கும்இளைக்குமா போல் இருந்ததுகண் டன்றேவளைக்குமா றெண்ணி மன் ⁠260

கொற்றக் கயற்கட் கொடியே இருவோரும்ஒற்றைத் துகிலா லுடைபுனைந்து - மற்றிந்தப்பொற்றுகிலாற் புள்வளைக்கப் போதுவோ மென்றுரைத்தான்பற்றகலா வுள்ளம் பரிந்து ⁠261

எற்றித் திரைபொர நொந்தேறி யிளமணலிற்பற்றிப் பவளம் படர்நிழற்கீழ் - முத்தீன்றுவெள்வளைத்தா யோடு நீர் வேலைத் திருநாடன்புள்வளைத்தான் ஆடையாற் போந்து ⁠262

கூந்தல் இளங்குயிலும் கோமானும் கொண்டணைந்தபூந்துகில் கொண் டந்தரத்தே போய்நின்று - வேந்தனேநன்னாடு தோற்பித்தோன் நானேகாண் என்றதேபொன்னாடு மானிறத்த புள் ⁠263

காவிபோற் கண்ணிக்கும் கண்ணியந்தோட் காளைக்கும்ஆவிபோ லாடையுமொன் றானதே - பூவிரியக்கள்வேட்டு வண்டுழலுங் கானத் திடைக்கனகப்புள்வேட்டை யாதரித்த போது ⁠264

அறம்பிழைத்தார் பொய்த்தார் அருள்சிதைத்தார் மானத்திறம்பிழைத்தார் தெய்வம் இகழ்ந்தார் - புறக்கடையில்சென்றார் புகுநரகஞ் சேர்வாய்கொல் என்றழியாநின்றாள் விதியை நினைந்து ⁠265

வையம் துயருழப்ப மாயம் பலசூழ்ந்துதெய்வங் கெடுத்தாற் செயலுண்டோ - மெய்வகையே

சேர்ந்தருளி நின்றதனிச் செங்கோலா யிங்கொழியப்போந்தருளு கென்றாள் புலந்து ⁠266

அந்த நெடுஞ்சுரத்தின் மீதேக வாங்கழலும்வெந்தழலை யாற்றுவாள் மேற்கடற்கே - எந்தைகுளிப்பான்போற் சென்றடைந்தான் கூரிருளாற் பாரையொளிப்பான்போற் பொற்றே ருடன் ⁠267

பானு நெடுந்தேர் படுகடலிற் பாய்ந்ததற்பின்கான வடம்பின் கவட்டிலைகள் - மானின்குளம்பேய்க்கும் நன்னாடன் கோதையொடுஞ் சென்றான்இளம்பேய்க்கும் தோன்றா விருள் ⁠268

எங்காம் புகலிடமென் றெண்ணி யிருள் வழிபோய்வெங்கா னகந்திரியும் வேளைதனில் - அங்கேயோர்பாழ்மண்டபங்கண்டான் பால்வெண் குடைநிழற்கீழ்வாழ்மண்டபங்கண்டான் வந்து ⁠269

மூரி யிரவும்போய் முற்றிருளாய் மூண்டதால்சாறு மிடமற்றுத் தானில்லை - சோர்கூந்தல்மாதாரய் நாமிந்த மண்டபத்தே கண்டுயிலப்போதரா யென்றான் புலர்ந்து ⁠270

வையம் உடையான் மகரயாழ் கேட்டருளும்தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் - இவ்விரவில்கேட்டவா வென்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்தோட்டவார் கோதையாள் சோர்ந்து ⁠271

பண்டை வினைப்பயனைப் பாரிடத்தி லார்கடப்பார்கொண்டல் நிழலிற் குழைதடவும் - கெண்டைவழியரீைரென்றான் மனநடுங்கி வெய்துற்றழியனியென்றான் அரசு ⁠272

விரைமலர்ப்பூ மெல்லணையும் மெய்காவல் பூண்ட பரிசனமும் பள்ளி யறையும் - அரசேநான் காணேனிங் கென்னாக் கலங்கினாள் கண்பனிப்பப் பூணேர் முலையாள் புலர்ந்து ⁠273

தீய வனமும் துயின்று திசைஎட்டு மேதுயின்று பேயுந் துயின்றதாற் பேர்யாமம் - நீயுமினிக் - கண்மேற் றுயில்கை கடனென்றான் - கைகொடுத்து மண்மேற் றிருமேனி வைத்து ⁠274

புன்கண்கூர் யாமத்துப் பூமிமேற் றான்படுத்துத் தன்கண் துயில்வாளைத் தான்கண்டு - மென்கண் பொடியாதால் உள்ளாவி போகாதால் நெஞ்சம் வெடியாதால் என்றான் விழுந்து ⁠275

முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி இன்றுதுயில இறைவனுக்கே - என்றனது கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள் மைபுகுந்த கண்ணி வர. ⁠276

வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலாத் தாமம் எனக்களித்த தையலாள் - யாமத்துப் பாரே அணையாயப் படைக்கண் துயின்றால்மற் றாரே துயரடையார் ஆங்கு ⁠276

பெய்ம்மலர்ப்பூங் கோதை பிரியப் பிரியாத செம்மை யுடைமணத்தான் செங்கோலான் - பொய்ம்மை விலக்கினான் நெஞ்சத்தை வேறாக்கி நின்று கலக்கினான் வஞ்சக் கலி ⁠278

வஞ்சக் கலிவலியான் மாகத் தராவளைக்குஞ் செஞ்சுடரின் வந்த கருஞ்சுடர்போல் - விஞ்ச மதித்ததேர்த்தானை வயவேந்தன் நெஞ்சத் துதித்ததே வேறோர் உணர்வு 279

காரிகைதன் வெந்துயரம் காணாமல் நீத்தந்தக் கூரிருளிற் போவான் குறித்தெழுந்து - நேரே இருவர்க்கும் ஒருயிர்போ லெய்தியதோர் ஆடை அரிதற் கவனினைந்தா னாங்கு ⁠280

எண்ணிய எண்ணம் முடிப்ப இகல்வேந்தன் கண்ணி யதையறிந்து காய்கலியும் - பண்ணினுக்குக் கேளான தேமொழியை நீங்கக் கிளரொளிசேர் வாளாய் மருங்கிருந்தான் வந்து ⁠281

ஒற்றைத் துகிலும் உயிரும் இரண்டாக முற்றுந்தன் அன்பை முதலோடும் - பற்றி அரிந்தான் அரிந்திட்ட டவள்நிலைமை நெஞ்சில் தெரிந்தான் இருந்தான் திகைத்து ⁠282

போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும் ஆயர் கொணர்ந்த அடுபாலின் - தோயல் கடைவார்தம் கைபோல ஆயிற்றே காலன் வடிவாய வேலான் மனம் ⁠283

சிந்துரத்தான் தெய்வ முனிவன் தெரிந்துரைத்த மந்திரத்தால் தம்பித்த மாநீர்போல் - முந்த ஒளித்ததேர்த்தானை உயர்வேந்தன் நெஞ்சம் வலித்ததே தீக்கலியால் வந்து ⁠284

தமயந்தியைப் பிரிதல்

தீக்கானகத்துறையும் தெய்வங்காள் வீமன்தன் கோக்காதலியைக் குறிக்கொண்மின் - நீக்காத காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டின் றேதிலன்போல் போகின்றேன் யான் ⁠285

ஏந்தும் இளமுலையாள் இன்னுயிரும் தன்னருளும் பூந்துகிலும் வேறாகப் போயினான் - தீந்தேன்

தொடைவிரவு நாள்மாலை சூட்டினாள் தன்னைஇடையிருளில் கானகத்தே இட்டு ⁠286

தாருவெனப் பார்மேல் தருசந்த திரன்சுவர்க்கிமேருவரைத் தோளான் விரவார்போல் - கூரிருளில்செங்கோ னகஞ்சிதையத் தேவியைவிட் டேகினான்வெங்கா னகந்தனிலே வேந்து⁠287

தமயந்தி துயர்

நீலம் அளவே நெகிழ நிரைமுத்தினகோல மலரின் கொடியிடையாள் - வேல்வேந்தேஎங்குற்றாய் என்னா இனவளைக்கை நீட்டினாள்அங்குத்தான் காணாதயர்ந்து⁠288

உடுத்த துகிலரிந்த தொண்டொடியாள் கண்டுமடுத்த துயிலான் மறுகி - அடுத்தடுத்துமன்னேயென அழைப்பாள் மற்றுமவ னைக்கானாதென்னேயிஃ தென்னென் றெழுந்து⁠289

வெய்ய தரையென்னும் மெல்லமளி யைத்தடவிக்கையளிக்கொண் டெவ்விடத்தும் காணாமல் - ஐயகோஎன்னப்போய் வீழ்ந்தாள் இனமேதி மென்கரும்பைத்தின்னப்போம் நாடன் திரு⁠290

அழல்வெஞ் சிலைவேடன் அம்புருவ ஆற்றாதுழலுங் களிமயில்போல் ஓடிக் - குழல்வண்டெழுந்தோட வீழ்ந்தாள் இருங்குழைமேல் கண்ணித்கொழுந்தோட வீமன் கொடி⁠291

வான்முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்ததுபோல்தானும் குழலும் தனிவீழ்ந்தாள் - ஏனம்குளம்பான் மணிகிளைக்கும் குண்டுநீர் நாடன்இளம்பாவை கைதலைமேல் இட்டு⁠292

தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகாம்கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனைவாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்கூவினவே கோழிக் குலம் ⁠293

வான நெடுவீதி செல்லும் மணித்தேரோன்தான மடந்தைக்குத் தார்வேந்தன் - போனநெறிகாட்டுவான் போலிருள்போய்க் கைவாங்கக் கானுடேநீட்டுவான் செங்கரத்தை நின்று ⁠294

செய்தபிழை ஏதென்னும் தேர்வேந்தே என்றழைக்கும்எய்துதுயர்க் கரைகாணேனென்னும் - பையவேஎன்னென்னா தென்னென்னும் இக்கானின் விட்டேகும்மன்னென்னா வாடும் அயர்ந்து ⁠295

அல்லியரந்தார் மார்பன் அடித்தா மரையவள்தன்நல்லுயிரும் ஆசையும்போல் நாறுதலும் - மல்லுறுதோள்வேந்தனே என்று விழுந்தாள் விழிவேலைசார்ந்தநீர் வெள்ளத்தே தான் ⁠296

வெறித்த இளமான்காள்! மென்மயில்காள்! இந்தநெறிக்கண் நெடிதுழி வாழ்வீர் - பிரித்தெம்மைப்போனாரைக் காட்டுதிரோ என்னாப் புலம்பினாள்வானாடர் பெற்றிலா மான் ⁠297

அரவு விழுங்குதல்

வேட்ட கரியை விழுங்கிப் பெரும்பசியான்மோட்டு வயிற்றரவு முன்தோன்ற - மீட்டதனைஓரா தருகணைந்தாள் உண்தேன் அறற்கூந்தல்பேரார் விழியாள் புலர்ந்து ⁠298

அங்கண் விசும்பின் அவிர்மதிமேல் சென்றடையும் வெங்கண் அரவுபோல் மெல்லியலைக் - கொங்கைக்கு

மேலெல்லாம் தோன்ற விழுங்கியதே வெங்கானின்பாலெல்லாம் தீயுமிழும் பாம்பு⁠299

வாளரவின் வாய்ப்பட்டு மாயாமுன் மன்னவநின்தாளடைந்து வாழுந் தமியேனைத் - தோளால்விலக்காயோ என்றழுதாள் வெவ்வரவின் வாய்க்கிங்கிலக்காகி நின்றாள் எடுத்து ⁠300

வென்றிச் சினவரவின் வெவ்வாய் இடைப்பட்டுவன்துயராற் போயாவி மாள்கின்றேன் - இன்றுள்திருமுகநான் காண்கிலேன் தேர்வேந்தே என்றாள்பொருமுகவேற் கண்ணாள் புலர்ந்து ⁠301

மற்றொடுத்த தோள்பிரிந்து மாயாத வல்வினையேன்பெற்றெடுத்த மக்காள் பிரிந்தேகும் - கொற்றவனைநீரேனும் காண்குதிரோ என்றழுதாள் நீள்குழற்குக்காரேனும் ஒவ்வாள் கலுழ்ந்து ⁠302

அடையும் கடுங்கானில் ஆடரவின் வாய்ப்பட்டுடையுமுயிர் நாயகனே ஓகோ - விடையெனக்குத்தந்தருள்வாய் என்னாத்தன் தாமரைக் கை கூப்பினாள்செந்துவர்வாய் மென்மொழியாள் தேர்ந்து ⁠303

உண்டோர் அழுகுரல்என் றொற்றி வருகின்றவெண்தோடன் செம்பங்கி வில்வேடன் - கண்டான்கழுகுவாழ் கானகத்துக் காரரவின் வாயில்முழுகுவாள் தெய்வ முகம் ⁠304

வெய்ய அரவின் விடவாயின் உட்பட்டேன்ஐயன்மீர் உங்கட் கபயம்யான் - உய்யஅருளீரோ என்னா அரற்றினாள் அஞ்சிஇருளீரும் பூணாள் எடுத்து ⁠305

சங்க நிதிபோல் தருசந் திரன்சுவர்க்கிவெங்கலிவாய் நின்றுலகம் மீட்டாற்போல் மங்கையைவெம்பாம்பின்வாய் நின்றும் பறித்தான் பகைகடிந்தகாம்பின் வில்வேடன் கண்டு ⁠306

ஆருயிறும் நானும் அழியாமல் ஐயாவிப்பேரரவின் வாயிற் பிழைப்பித்தாய் - தேரில்இதற்குண்டோ கைம்மா றெனவுரைத்தாள் வென்றிவிதர்ப்பன்றான் பெற்ற விளக்கு ⁠307

வேடன் காத்தல் இந்து நுதலி எழில்நோக்கி ஏதோதன்சிந்தை கருதிச் சிலைவேடன் - பைந்தொடிநீபோதுவாய் என்னுடனே என்றான் புலைநரகுக்கேதுவாய் நின்றான் எடுத்து ⁠308

வேடன் அழைப்ப விழிபதைத்து வெய்துயிராஆடன் மயில்போல் அலமரா - ஓடினாள்தூறெலா மாகச் சுரிகுழல்வேற் கண்ணினிஆறெலாமாக வழுது ⁠309

தீக்கட் புலிதொடரச் செல்லும் சிறுமான்போல்ஆக்கை தளர வலம்ந்து - போக்கற்றுச்சீறா விழித்தாள் சிலைவேடன் அவ்வளவில்நீறாய் விழுந்தாள் நிலத்து ⁠310

வண்டமிழ்வாணர்ப்பிழை வன்குடிபோல் தீத்தழன்மீமண்டு கொடுஞ்சுரத்தோர் மாடிருந்து - பண்டையுளவாழ்வெல்லாம் தானினைந்து மற்றழுதாள் மன்னிழைத்ததாழ்வெலாம் தன்தலைமேற் றந்து ⁠311

வழிப் போக்கன் துணையாதல்

அவ்வளவி லாதிப் பெருவழியி லாய்வணிகன்இவ்வளவு தீவினையேன் என்பாள்தன் - மெய்வடிவைக்

கண்டானை யுற்றாள் கமலமயி லேயென்றான்உண்டாய தெல்லாம் உணர்ந்து ⁠312

எக்குலத்தாய் யார்மடந்தை யாதுன்னுர் யாதுன்பேர்நெக்குருகி நீயழுதற் கென்னிமித்தம் - மைக்குழலாய்கட்டுரைத்துக் காணென்றான் கார்வண்டு காந்தாரம்விட்டுரைக்குந் தார்வணிகர் வேந்து ⁠313

முன்னை வினையின் வலியால் முடிமன்னன்என்னைப் பிரிய இருங்கானில் - அன்னவனைக்காணா தழுகின்றேன் என்றாள் கதிரிமைக்கும்பூணாரம் பூண்டாள் புலர்ந்து ⁠314

சேதி நகர் சேர்தல்

சேதி நகர்க்கே திருவைச் செலவிட்டுஅப்போதிற் கொடைவணிகன் போயினான் - நீதிகிடத்துவான் மன்னவர்தம் கீர்த்தியினைப் பார்மேல்நடத்துவான் வட்டை நடந்து ⁠315

அற்ற துகிலும் அறாதொழுகு கண்ணிரும்உற்ற துயரும் உடையவளாய் - மற்றொருத்திநின்றாளைக் கண்டோம் நிலவேந்தன்பொற்றேவி என்றார் மடவார் எடுத்து ⁠316

போயகலா முன்னம் புனையிழையாய் பூங்குயிலைஆய மயிலை யறியவே - நீயேகிக்கொண்டுவா வென்றாள்தன் கொவ்வைக் கணிதிறந்துவண்டுவாழ் கூந்தன் மயில் ⁠317

ஆங்கவளும் ஏக அரசன் பெருந்தேவிபூங்கழலின் மீதே புரண்டழுதாள் - தாங்கும்இனவளையாய் உற்ற துயர்எல்லாம்எனது வினைவலிகாண் என்றாள் மெலிந்து ⁠318

அந்தா மரையி லவளேயென்றையுற்றுச்சிந்தா குலமெனக்குத் தீராதால் - பைந்தொடியேஉள்ளவாறெல்லாம் உரையென்றாள் ஒண்மலரின்கள்ளவார் கூந்தலாள் கண்டு ⁠319

என்னைத் தனிவனத்திட் டெங்கோன் பிரிந்தேகஅன்னவனைக் காணா தலமருவேன் - இந்நகர்க்கேவந்தே னிதுவென் வரவென்றாள் வாய்புலராச்செந்தேன் மொழிபதறாச் சோர்ந்து ⁠320

உன்ற்லைவன் தன்னை யொருவகையால் நாடியேதந்து விடுமளவும் தாழ்குழலாய் - என்றனுடன்இங்கே இருக்க இனிதென்றாளேந்திழையைக்கொங்கேயுந் தாராள் குறித்து ⁠321

ஈங்கிவளிவ்வாறிருப்ப இன்னலுழந் தேயேகிப்பூங்குயிலும் போர்வேற் புரவலனும் - யாங்குற்றார்சென்றுணர்தி என்று செலவிட்டான்குன்றுறழ்தோள் வீமன் குறித்து ⁠322

ஓடும் புரவித்தேர் வெய்யோன் ஒளிசென்றுநாடும் இடமெல்லாம் நாடிப்போய் - கூடினான்போதிற் றிருநாடும் பொய்கைத் திருநாடாஞ்சேதித் திருநாடு சென்று ⁠323

தாமஞ்சே ரோதித் தமயந்தி நின்றாளைஆமென்றறியா அருமறையோன் - வீமன்கொடிமேல் விழுந்தழுவான் கொம்புமவன் செம்பொன்அடிமேல் விழுந்தாள் அழுது ⁠324

மங்கை விழிநிர் மறையோன் கழல்கழுவஅங்கவன்றன் கண்ணிரவளுடன்மேற் - பொங்கக்கடல்போலுங் காதலார் கையற்றோர் தங்கள்உடல்போலும் ஒத்தார் உயிர் ⁠325

மாரி பொருகூந்தன் மாதராய் நீபயந்தகாரிகைதான் பட்டதுயர் கண்டாயோ - சோர்குழலும்வேணியாய் வெண்டுகிலும் பாதியாய் வெந்துயருக்காணியாய் நின்றா ளயர்ந்து ⁠326

தன்மகளாவ தறியாத் தடுமாறாப்பொன்வடிவின் மேலழுது போய்வீழ்ந்தாள் - மென்மலரைக்கோதிப்போய் மேதி குருகெழுப்பும் தண்பணைசூழ்சேதிக்கோன் தேவி திகைத்து ⁠327

கந்தனையும் கன்னியையும் கண்டாயி னுஞ்சிறிதுதன்துயரம் தீர்ந்து தனியாறத் - தந்தைபதியிலே போக்கினான் சேதியர்கோன் பண்டைவிதியிலே போந்தாளை மீண்டு ⁠328

விதர்ப்பம் சேர்தல்

கோயிலும் அந்தப் புரமும் கொடிநுடங்கும்வாயிலும் நின்று மயங்கியதே - தீயகொடும்கானாள மக்களையும் கைவிட்டுக் காதலன்பின்போனாள் புகுந்த பொழுது ⁠329

அழுவார் விழுவார் அயிர்ப்பார் உயிர்ப்பார்தொழுவார் தமரெங்கும் சூழ்வார் - வழுவாக்காமநீ ரோதக் கடல் கிளர்ந்தால் ஒத்தவேநாமவேல் வீமன் நகர் ⁠330

தந்தையைமுன் காண்டலுமே தாமரைக்க ணீர்சொரியச்சிந்தை கலங்கி திகைத்தலமந் - தெந்தாயான்பட்டதே என்னப்போய் வீழ்ந்தாள் படைநெடுங்கண்விட்டநீர் மேலே விழ ⁠331

செவ்வண்ண வாயாளும் தேர்வேந் தனுமகளைஅவ்வண்ணங் கண்டக்காலா ற்றுவரோ - மெய்வண்ணம்

ஓய்ந்துநா நீர்போய் உலர்கின்ற தொத்ததமர்நீந்தினார் கண்ணி னின்று. ⁠332

பணியிருளிற் பாழ்மண்டபத்திலே யுன்னைநினையாது நீத்தகன்ற போது - தனியேநின்றென்னிணைந்து என்செய்தாய் என்னாப் புலம்பினாள்பொன்னினைத்தாய் நோக்கிப் புலர்ந்து ⁠333

3. கலி நீங்கு காண்டம்

மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்காலிக்குப் பின்னேயுங்காணலாம் - மால்யானைமுந்தருளும் வேத முதலே யெனவழைப்பவந்தருளும் செந்தா மரை ⁠334

போதுவார் நீறணிந்து பொய்யாத ஐந்தெழுத்தைஒதுவார் உள்ளம் எனவுரைப்பார் - நீதியார்பெம்மான் அமரர் பெருமான் ஒருமான்கைஅம்மானின் றாடும் அரங்கு ⁠335

மன்னா உனக்கபயம் என்னா வனத்தீயிற்பன்னாக வேந்தன் பதைத்துருகிச் - சொன்னமொழிவழியே சென்றான் முரட்கலியின் வஞ்சப்பழிவழியே செல்கின்றான் பார்த்து ⁠336

ஆரும் திரியா அரையிருளில் அங்ஙனமேசோர்குழலை நீத்த துயரோடும் - வீரன்திரிவானத் தீக்கானிற் செந்தீயின் வாய்ப்பட்டெரிவானைக் கண்டான் எதிர் ⁠337

தீக்கடவுள் தந்த வரத்தைத் திருமணத்தில்ஆக்கி யருளால் அரவரசைப் - போக்கிஅடைந்தான் அடைதலுமே ஆரழலோன் அஞ்சிஉடைந்தான் போய்ப்புக்கான் உவந்து ⁠338

Comments

Loading comments…