மாபாரதம்
ஆறாகி இருதடங்கண் அஞ்சனவெம்புனல்சோர அளகம்சோரவேறான துகில்தகைந்த கைசோரமெய்சோர வேறோர் சொல்லும்கூறாமல் கோவிந்தா கோவிந்தாஎன்று அரற்றிக் குளிர்ந்து நாவில்ஊறாத அமிழ்து ஊற உடல்புளகித்துஉள்ளமெலாம் உருகினாளே.
ஞானம் ஆகிய பரம்பர அமிழ்தமாய்த் தவிரறு மயக்காகிவானமாய் உடன் வாயுவாய்த் தேயுவாய் வனமுமாய் மண்ணாகித்தான மாமறை முறைமையிற் பற்பல சராசரங்களும் ஆகிஏனமாய் இவை அனைத்தையும் மருப்பினால் ஏந்தினான் எனையாண்டோன்.
Comments
Loading comments…