சின்ன சங்கரன் கதை

பாரதியார் கதைகள்

“சாற்றுவதும் காமக்கலை சாதிப்பதும்போற்றுவதும் காமனடிப்போது”

மானே கையில் தானே தரித்தானே – ஒருமாதைத் தரித்தானே மழுவைத் தரித்தானே.(மா)

பல்லவி

மானே கையில் தானே தரித்தானே – ஒருமாதைத் தரித்தானே மழுவைத் தரித்தானே(மா)

அனுபல்லவி

கோனே சிவனே குருவே யருவே மெய்ஞ்ஞான பான மோனமான நாதா தாமரைப் பாதா(மா)

சரணம்

எந்தனை மோக்ஷ கதியினில் சேர்த்திடஇன்னமு மாகாதா?— உன்னைச்சொந்தக் குல தெய்வமென்று நித் தந்துதிசொன்னது போதாதா?

விந்தை யுடனிங்கு வந்தென்னை யாளவும்மெத்த மெத்த வாதா?வந்தனை தந்துனைப் போற்றிடும் ராமசாமிக் கவுண்டராஜ – போஜனுக் கருள் செய்ய்யும் பாதா(மா)

“மிக்கவுண்டா ராஜபோஜனுக் கருள் செய் யும்பாதா!”

“தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்து முதலைஉண்ட பாலனை யழைத்ததும்...ம்...ம்...ம்,தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோசாற்றீர்?”

கவுண்டவுண்ட தெனமாரன் கணைபொழிய மிகச் சோர்ந்து கண்ணீராற்றிற்கவுண்டவுண்ட மார்பினளாய் மகளுன்னைநினைந்து மனங் கரையா நின்றாள்கவுண்டவுண்ட சீதையினைமாலையிட்ட பெருமானே கவுண்டனூரிற்கவுண்டவுண்ட ராமசாமித் துரையேவிரைவினிற் கலவிசெய்யே”

Comments

Loading comments…