புதிய கோணங்கி
பாரதியார் கதைகள்
“குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;ஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;சொல்லடி, சொல்லடி சக்தி மாகாளீ,வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு!தரித்திரம் போகுது, செல்வம் வருகுது;படிப்பு வளருது பாவம் தொலையுது;படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்போவான், போவான்; ஐயோவென்று போவான்.வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது;தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்சரித்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;மந்திர மெல்லாம் வளருது. வளருது!குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடுசொல்லடீ, சொல்லடீ, மலையாள பகவதீ.அந்தரி, வீரி, சண்டிகை சூலி!குடுகுடு குடுகுடு”
“குடுகுடு, குடுகுடு, குடுகுடு, குடுகுடு,சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது,தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது,எட்டு லச்சுமியும் ஏறி வளருது,பயந் தொலையுது, பாவந் தொலையுது,சாத்திரம் வளருது, சாதி குறையுது,நேத்திரம் திறக்குது, நியாயந் தெரியுது,பழைய பயித்தியம் படீலென்று தெளியுது,வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது,சொல்லடீ சக்தி, மலையாள பகவதி,தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது“
Comments
Loading comments…