கடவுள் எங்கே இருக்கிறார்?
பாரதி அறுபத்தாறு
“சொல்லடா ஹரி யென்ற கடவுளெங்கே?சொல்” லென்று ஹிரணியன் தா னுறுமிக் கேட்க,
நல்ல தொரு மகன் சொல்வான்:— “தூணிலுள்ளான்,நாராயணன் துரும்பி லுள்ளான்” என்றான்.வல்ல பெருங் கடவுளிலா வணுவொன்றில்லை,மஹா சக்தி யில்லாத வஸ்து வில்லை,அல்ல வில்லை, அல்ல வில்லை, அல்ல வில்லை ;அனைத்துமே தெய்வ மென்றா லல்ல லுண்டோ ?(15)
கேளப்பா சீடனே, கழுதை யொன்றைக்”கீழான” பன்றியினைத் தேளைக் கண்டுதாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்சங்கர, சங்கர வென்று பணிதல் வேண்டும்;கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டந் தெய்வம்.மீளத்தா னிதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;விண்மட்டுங் கடவுளன்று மண்ணு மஃதே.(16)
சுத்த அறிவே சிவமென் றுரைத்தார் மேலோர் ;சுத்த மண்ணும் சிவமென்றே யுரைக்கும் வேதம்;வித்தகனாங் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்;வித்தை யிலாப்புலையனு மஃதென்னும் வேதம்,பித்தரே அனைத்துயிருங் கடவுளென்றுபேசுவது மெய்யானாற் பெண்டிரென்றும்நித்தநும் தருகினிலே குழந்தை யென்றும்நிற்பனவுந் தெய்வமன்றோ, நிகழ்த்து வீரே.(17)
உயிர்களெலாந் தெய்வ மன்றிப் பிற வொன்றில்லை;ஊர்வனவும் பறப்பனவு நேரே தெய்வம்;பயிலு முயிர் வகை மட்டு மன்றி யிங்குபார்க்கின்ற பொருளெல்லாந் தெய்வங் கண்டீர்;
வெயிலளிக்கு மிரவி, மதி, விண்மீன், மேகம்,மேலுமிங்கு பல பலவாந் தோற்றங் கொண்டேஇயலுகின்ற ஜடப் பொருள்களனைத்துந் தெய்வம்;எழுதுகோல் தெய்வ மிந்த எழுத்துந் தெய்வம்.(18)
Comments
Loading comments…