கடவுள் வாழ்த்து
பாரதி அறுபத்தாறு
எனக்கு முன்னே சித்தர் பல ரிருந்தா ரப்பா,யானும் வந்தே னொரு சித்த னிந்த நாட்டில்;மனத்தினிலே நின் றிதனை யெழுதுகின்றாள்மனோன்மணி யென் மாசக்தி வையத் தேவி;தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்செய்ய மணித் தாமரை நேர் முகத்தாள் காதல்வனத்தினிலே தன்னை யொரு மலரைப்போலும்வண்டினைப் போ லெனையு முரு மாற்றிவிட்டாள்.(1)
தீராத கால மெலாந் தானு நிற்பாள்,தெவிட்டாத இன் னமுதின் செவ்வி தழ்ச்சி,நீராகக் கனலாக வானாக் காற்றாநிலமாக வடி வெடுத்தாள், நிலத்தின் மீதுபோராக நோ யாக மரண மாகப்போந்திதனை யழித்திடுவாள் ; புணர்ச்சி கொண்டால்நேராக மோன மஹா னந்த வாழ்வைநிலத்தின் மிசை யளித் தமரத் தன்மை யீவாள்.(2)
மாகாளி பராசக்தி உமையா ளன்னைவைரவி கங்காளி மனோன்மணி மாமாயிபாகார்ந்த தே மொழியாள், படருஞ் செந்தீபாய்ந் திடு மோர் விழி யுடையாள், பரமசக்தி,ஆகார மளித்திடு வாள், அறிவு தந்தாள்,ஆதி பரா சக்தி யென தமிர்தப் பொய்கை,சோகாடவிக் கு ளெனைப் புக வொட்டாமல்துய்ய செழுந் தேன்போலே கவிதை சொல்வாள்.(3)
Comments
Loading comments…