காதலின் புகழ்

பாரதி அறுபத்தாறு

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;

காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;கான முண்டாம் ; சிற்ப முதற் கலைக ளுண்டாம்;ஆதலினாற் காதல் செய்வீர், உலகத் தீரே !அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;காதலினாற் சாகாம லிருத்தல் கூடும்;கவலை போம், அதனாலே மரணம் பொய்யாம். (49)

ஆதி சக்திதனை யுடம்பில் அரனுங் கோத்தான்;அயன் வாணிதனை நாவில் அமர்த்திக் கொண்டான்;சோதி மணி முகத்தினளைச் செல்வ மெல்லாஞ்சுரந் தருளும் விழியாளைத் திருவை மார்பில்மாதவனு மேந்தினான்; வானோர்க் கேனும்மாதரின்பம் போற் பிறிதோ ரின்பமுண்டோ?காதல் செயு மனைவியே சக்தி, கண்டீர்.கடவு ணிலை அவளாலே யெய்த வேண்டும்.(50)

கொங்கைகளே சிவலிங்க மென்று கூறிக்கோக் கவிஞன் காளிதாஸனும் பூஜித்தான்;மங்கைதனைக் காட்டினிலு முடன் கொண்டேகிமற்றவட்கா மதி மயங்கிப் பொன் மான் பின்னேசிங்க நிகர் வீரர் பிரான் தெளிவின் மிக்கஸ்ரீதரனுஞ் சென்று பல துன்ப முற்றான்;இங்கு புவி மிசைக் காவியங்க ளெல்லாம்இலக்கிய மெல்லாங் காதற் புகழ்ச்சி யன்றோ? (51)

நாடகத்திற் காவியத்திற் காதலென்றால்நாட்டினர் தாம் வியப் பெய்தி நன்றாமென்பர்;ஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோரத்தேஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்;

பாடைகட்டி யதைக் கொல்ல வழி செய்கின்றார்;பாரினிலே காதலெனும் பயிரை மாய்க்கமூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்துமுறை தவறி யிட ரெய்திக் கெடுகின்றாரே.(52)

காதலிலே யின்பமெய்திக் களித்து நின்றால்கனமான மன்னவர் போ ரெண்ணுவாரோ?மாதருடன் மனமொன்றி மயங்கிவிட்டால்மந்திரிமார் போர்த் தொழிலை மனங்கொள்வாரோ?பாதி நடுக் கலவியிலே காதல் பேசிப்பகலெல்லா மிர வெல்லாங் குருவி போலேகாதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருதுவாரோ?(53)

Comments

Loading comments…