குவளைக் கண்ணன் புகழ்

பாரதி அறுபத்தாறு

யாழ்ப்பாணத் தையனையென் னிடங் கொணர்ந்தான்,இணையடியை நந்தி பிரான் முதுகில் வைத்துக்காழ்ப்பான கயிலை மிசை வாழ்வான், பார்மேற்கனத்த புகழ்க் குவளையூர்க் கண்ண னென்பான்;பார்ப்பாரக் குலத் தினிலே பிறந்தான் கண்ணன்:பறையரையும் மறவரையு நிகராக் கொண்டான்;தீர்ப்பான சுருதி வழி தன்னிற் சேர்ந்தான்.சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார்.(42)

மஹத்தான முனிவ ரெலாங் கண்ணன் தோழர்;வானவ ரெல்லாங் கண்ண னடியா ராவார்;

மிகத் தானு முயர்ந்த துணிவுடைய நெஞ்சின்வீரர் பிரான் குவளையூர்க் கண்ணனென்பான்.ஜகத்தினி லோ ருவமை யிலா யாழ்ப்பாணத்துஸாமி தனை யிவ னென்றன் மனைக் கொணர்ந்தான்.அகத்தினிலே யவன் பாத மலரைப் பூண்டேன்;“அன்றே யப்போதே வீடதுவே வீடு.”(43)

பாங்கான குருக்களை நாம் போற்றிக் கொண்டோம்;பாரினிலே பயந் தெளிந்தோம்; பாச மற்றோம்;நீங்காத சிவ சக்தி யருளைப் பெற்றோம்;நிலத்தின் மிசை யமர நிலை யுற்றோ மப்பா.தாங்காமல் வையகத்தை யழிக்கும் வேந்தர்,தாரணியிற் பலருள்ளார், தருக்கி வீழ்வார்;ஏங்காம லஞ்சாம லிடர் செய்யாமல்என்று மருள் ஞானியரே யெமக்கு வேந்தர்.(44)

Comments

Loading comments…