சினத்தின் கேடு

பாரதி அறுபத்தாறு

சினங் கொள்வார் தமைத் தாமே தீயாற் சுட்டுச்செத் திடுவா ரொப் பாவார்; சினங் கொள்வார்தாம்.மனங் கொண்டு தங் கழுத்தைத் தாமே வெய்யவாள் கொண்டு கிழித்திடுவார் மானுவா ராம்.தினங்கோடி முறை மனிதர் சினத்தில் வீழ்வார்,சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்.(8)

மாகாளி பராசக்தி துணையே வேண்டும்;வையகத்தி லெதற்கு மினிக்கவலை வேண்டா;சாகாம லிருப்பது நஞ் சதுரா லன்று;சக்தி யருளா லன்றோ பிறந்தோம் பார் மேல்?பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்,பாரீர் நீர் கேளீரோ, படைத்தோன் காப்பான்வேகாத மனங் கொண்டு களித்து வாழ்வீர்மேதினியி லேது வந்தா லெமக்கென் னென்றே.(9)

Comments

Loading comments…