ஸர்வமத ஸம ரஸம்

பாரதி அறுபத்தாறு

மீளவு மங் கொரு பகலில் வந்தா னென்றன்மனை யிடத்தே கோவிந்த வீரஞானி,ஆள வந்தான் பூமியினை, யவனி வேந்தர்அனைவருக்கு மேலானோன், அன்பு வேந்தன்;நாளைப் பார்த்தொளிர்தரு நன் மலரைப் போலேநம்பிரான் வரவுகண்டு மன மலர்ந்தேன்;வேளையிலே நமது தொழில் முடித்துக் கொள்வோம்;வெயிலுள்ளபோதினிலே யுலர்த்திக்கொள்வோம்;

காற்றுள்ள போதே நாம் தூற்றிக் கொள்வோம்;கனமான குருவை யெதிர் கண்ட போதேமாற்றான அஹந்தையினைத் துடைத்துக்கொள்வோம்;மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;

கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;குலைவான மாயைதனை யடித்துக் கொள்வோம்;பேற்றாலே குரு வந்தான்; இவன்பால் ஞானப் [ளேபேற்றை யெல்லாம் பெறுவோம் யாம்“ என்றெனுள்சிந்தித்து:— ”மெய்ப் பொருளை யுணர்த்தாயையே!தேய்வென்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம்வந்தித்து நினைக் கேட்டேன் கூறாய்” என்றேன்.வானவனாங் கோவிந்த ஸாமி சொல்வான்:—”அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்;பந்தமில்லை; பந்தமில்லை; பந்தமில்லை;பயமில்லை ; பயமில்லை; பயமே யில்லை.(59)

”அதுவே நீயென்பது முன் வேத வோத்தாம்;அதுவென்றா லெதுவென் நா னறையக் கேளாய்!அதுவென்றால் முன்னிற்கும் பொருளினாமம்;அவனியிலே பொருளெல்லா மதுவாம்;—நீயும்அதுவன்றிப் பிறிதில்லை; ஆதலாலே,அவனியின் மீதெது வரினு மசைவுறாமல்மதுவுண்ட மலர்மாலை யிராமன் தாளைமனத்தினிலே நிறுத்தி யிங்கு வாழ்வாய்,சீடா.(60)

”பாரான உடம்பினிலே மயிர்களைப் போற்பலப்பலவாம் பூண்டு வரு மியற்கையாலே;நேராக மானுடர் தாம் பிறரைக் கொல்லநினையாமல் வாழ்ந்திட்டாலுமுதல் வேண்டா;காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டா;கால்வாய்கள் பாய்ச்சுவதிற் கலகம் வேண்டா;சீரான மழை பெய்யும்; தெய்வமுண்டு;சிவன் செத்தாலன்றி மண்மேற் செழுமையுண்டு.(61)

“ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்அனைவருக்கு முழைப்பின்றி யுணவுண்டாகும்;பேதமிட்டுக் கலகமிட்டு வேலிகட்டிப்பின் னதற்குக் காவலென்று பேருமிட்டுநீதமில்லாக் கள்வர் நெறி யாயிற்றப்பா?நினைக்குங் கா லிது கொடிய நிகழ்ச்சியன்றோ?பாதமலர் காட்டி நினை யன்னை காத்தாள்பாரினிலித் தரும் நீ பகருவாயே.(62)

”ஒரு மொழியே பலமொழிக்கு மிடங் கொடுக்கும்;ஒரு மொழியே மலமொழிக்கு மொழிக்கு மென்றஒரு மொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்ஒரு மொழி ”ஓம் நமச்சிவாய” வென்பர்;”ஹரி ஹரி” யென்றிடினு மஃதே; ”ராம ராம””சிவ சிவ”; வென்றிட்டாலு மஃதே யாகும்;தெரி வுறவே ”ஓம் சக்தி”யென்று மேலோர்ஜெபம் புரிவ தப் பொருளின் பெயரே யாகும்.(63)

”ஸாரமுள்ள பொருளினை நான் சொல்லி விட்டேன்:சஞ்சலங்க ளினி வேண்டா, சரதந் தெய்வம்;ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;எப்போது மருளை மனத் திசைத்துக் கொள்வாய்;வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்.(66)

பூமியிலே, கண்ட மைந்து, மதங்கள் கோடி!புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்

Comments

Loading comments…