புதிய ஆத்திசூடி
ஆத்திசூடி இளம்பிறை யணிந்துமோனத்திருக்கு முழுவெண் மேனியான்,கருநிறங் கொண்டுபாற் கடல் மிசைக் கிடப்போன்,மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்,ஏசுவின் தந்தை யெனப்பல மதத்தினர்உருவகத் தாலே யுணர்ந்துண ராதுபலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்ஒன்றே; அதனியல் ஒளியுறு மறிவாம்;அதனிலை கண்டார் அல்லலை யகற்றினார்;அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவோம்.
அச்சந் தவிர்.ஆண்மை தவறேல்.இளைத்த லிகழ்ச்சி.ஈகை திறன.உடலினை உறுதிசெய்.ஊண்மிக விரும்பு.எண்ணுவ துயர்வு.ஏறுபோல் நட•ஐம்பொறி ஆட்சிகொள்.ஒற்றுமை வலிமையாம்.ஓய்த லொழி.ஔடதங் குறை.கற்ற தொழுகு.கால மழியேல்.கிளைபல தாங்கேல்.
கீழோர்க்கஞ்சேல்.குன்றென நிமிர்ந்துநில்.கூடித் தொழில் செய்.கெடுப்பது சோர்வு.கேட்டிலுந் துணிந்து நில்.கைத்தொழில் போற்று.கொடுமையை யெதிர்த்துநில்.கோல்கைக் கொண்டுவவாழ்.கவ்வியதை விடேல்.சரித்திரத் தேர்ச்சிகொள்.சாவதற் கஞ்சேல்.சிதையா நெஞ்சுகொள்.சீறுவோர்ச் சீறு.சுமையினுக் கிளைத்திடேல்.சூரரைப் போற்று.செய்வது துணிந்து செய்.
சேர்க்கை அழியேல்.சைகையிற் பொருளுணர்.சொல்வது தெளிந்துசொல்.சோதிடந் தனை யிகழ்.சௌரியந் தவறேல்.ஞமலிபோல் வாழேல்.ஞாயிறு போற்று.ஞிமிரென இன்புறு.ஞெகிழ்வ தருளின்.ஞேயங் காத்தல்செய்.தன்மை யிழவேல்.தாழ்ந்து நடவேல்.திருவினை வென்றுவாழ்.தீயோர்க் கஞ்சேல்.துன்ப மறந்திடு.தூற்றுத லொழி.
தெய்வம் நீ யென்றுணர்.தேசத்தைக் காத்தல் செய்.தையலை உயர்வு செய்.தொன்மைக் கஞ்சேல்.தோல்வியிற் கலங்கேல்.தவத்தினை நிதம் புரி.நன்று கருது.நாளெலாம் வினைசெய்.நினைப்பது முடியும்.நீதிநூல் பயில்.நுனியளவு செல்.நூலினைப் பகுத்துணர்.நெற்றி சுருக்கிடேல்.நேர்படப் பேசு.நையப் புடை.நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.பணத்தினைப் பெருக்கு.பாட்டினில் அன்புசெய்.பிணத்தினைப் போற்றேல்.பீழைக் கிடங்கொடேல்.புதியன விரும்பு.பூமி இழந்திடேல்.பெரிதினும் பெரிது கேள்.பேய்களுக் கஞ்சேல்.பொய்மை யிகழ்.போர்த்தொழில் பழகு.மந்திரம் வலிமை.மானம் போற்று.மிடிமையில் அழிந்திடேல்.மீளுமா றுணர்ந்துகொள்.முனையிலே முகத்துநில்.
மூப்பினுக் கிடங்கொடேல்.மெல்லத் தெரிந்து சொல்.மேழி போற்று.மொய்ம்புறத் தவஞ்செய்.மோனம் போற்று.மௌட்டியந் தனைக் கொல்.யவனர்போல் முயற்சிகொள்.யாரையும் மதித்து வாழ்.யௌவனங் காத்தல் செய்.ரஸத்திலே தேர்ச்சிகொள்.ராஜஸம் பயில்.ரீதி தவறேல்.ருசிபல வென்றுணர்.ரூபஞ் செம்மைசெய்.ரேகையிற் கனிகொள்.ரோதனந் தவிர்.
ரௌத்திரம் பழகு.லவம் பல வெள்ளமாம்.லாகவம் பயிற்சிசெய்லீலை யிவ்வுலகு.(உ)லுத்தரை யிகழ்.(உ)லோக நூல் கற்றுணர்.லௌகிக மாற்று.வருவதை மகிழ்ந்துண்.வான நூற் பயிற்சிகொள்.விதையினைத் தெரிந்திடு.வீரியம் பெருக்கு.வெடிப்புறப் பேசு.வேதம் புதுமைசெய்.வையத் தலைமைகொள்.வௌவுதல் நீக்கு.
Comments
Loading comments…