அடக்க முடைமை

திருக்குறள் மணக்குடவருரை

காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம்அதனினூங் கில்லை உயிர்க்கு.

செறிவறிந்து, சீர்மை பயக்கும், அறிவறிந்துஆற்றின் அடங்கப் பெறின்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்,எழுமையும் ஏமாப் புடைத்து.

நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது.

யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குட் பட்டு,

தீயினால் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதேநாவினால் சுட்ட வடு.

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்,நன்றாகா தாகி விடும்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து.

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் உழைந்து.

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமைஆரிருள் உய்த்து விடும்.

Comments

Loading comments…