இன்னாசெய்யாமை

திருக்குறள் மணக்குடவருரை

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கண் செயல்,

கறுத்தின்னா செய்தவற் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.

செய்யாமை செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமம் தரும்.

சிறப்பீனும் செல்வம் பெறினும், பிறர்க்கின்னாசெய்யாமை மாசற்றார் கோள்,

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானும்மாணா செய்யாமை தலை,

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதுநோய்தன்னோய்போல் போற்றாக் கடை.

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க் கின்னா செயல்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னாபிற்பகல் தானே வரும்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்; நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல்,

Comments

Loading comments…