ஈகையுடைமை
திருக்குறள் மணக்குடவருரை
நல்லா றெனினும் கொளல்தீது; மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று.
வறியார்க்கொன் றீவதே யீகை;மற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்,குலனுடையான் கண்ணே யுள.
இன்னா திரக்கப் படுதல், இரந்தவர்இன்முகம் காணும் அளவு.
சாதலின் இன்னாத தில்லை; இனிததூஉம்ஈதல் இசையாக் கடை..
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல், தாமுடைமைவைத்திழக்கும் வன்கண் ணவர்.
இரத்தலின் இன்னாத மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்.
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்தீப்பிணி தீண்டல் அரிது.
அற்றார் அழிபசி தீர்த்தல்; அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி.
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்; அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின்.
Comments
Loading comments…