ஊழ்
திருக்குறள் மணக்குடவருரை
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்;போகூழால் தோன்றும் மடி.
பேதைப் படுக்கும் இழவூழ்; அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்உண்மை யறிவே மிகும்.
ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்றுசூழினும் தான்முந் துறும்.
நல்லவை யெல்லாஅம் தீயவாம்; தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.
பரியினும் ஆகாவாம் பாலல்ல; உய்த்துச்சொரியினும் போகா தம.
வகுத்தான் வகுத்த வகையல்லால், கோடிதொகுத்தாற்கும் துய்த்தல் அரிது.
இருவே றுலகத் தியற்கை, திருவேறுதெள்ளிய ராதலும் வேறு.
துறப்பார்மன் துப்புர வில்லார், உறற்பாலஊட்டா கழியும் எனின்.
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லல் படுவ தெவன்?
Comments
Loading comments…