ஒழுக்கமுடைமை

திருக்குறள் மணக்குடவருரை

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம், தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை.

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார்.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்;பிறப்பொழுக்கம்: குன்றக் கெடும்,

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர், இழுக்கத்தின்ஏதம் படுபாக் கறிந்து.

ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லைஒழுக்கம் இலான்கண் உயர்வு.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி.

நன்றிக்கு வித்தாகும். நல்லொழுக்கம்; தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்.

ஒழுக்கம் உடையவர்க் கொல்லாதே தீயவழுக்கியும் வாயாற் சொலல்,

ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.

Comments

Loading comments…