கடவுள் வாழ்த்து
திருக்குறள் மணக்குடவருரை
அகர முதல எழுத்தெல்லாம்; ஆதிபகவன் முதற்றே உலகு.
கற்றதனா லாய பயனென்கொல், வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்?
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்,நிலமிசை நீடுவாழ் வார்.
தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்,மனக்கவலை மாற்றல் அரிது,
அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்,பிறவாழி நீந்தல் அரிது,
வேண்டுதல் வேண்டாமை யில்லான் அடிசேர்ந்தார்யாண்டும் இடும்பை யிலர்,
இருள்சேர் இருவினையுஞ் சேரா, இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு,
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார், நீடுவாழ் வார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவார்; நீந்தார்இறைவனடி சேரா தவர்.
கோளில் பொறியின் குணமிலவே, எண்குணத்தான்தாளை வணங்காத் தலை,
Comments
Loading comments…