கூடா வொழுக்கம்

திருக்குறள் மணக்குடவருரை

மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடிமறைந் தொழுகும் மாந்தர் பலர்.

புறம்குன்றி கண்டனைய ரேனும், அகம்குன்றிமூக்கின் கரியார் உடைத்து.

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

தவம்மறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

வானுயர் தோற்றம் எவன்செய்யும், தன்னெஞ்சம்தானறி குற்றம் படின்?

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும்.

நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல்.

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றேதம் பலவும் தரும்,

மழித்தலும் நீட்டலும் வேண்டாம், உலகம்பழித்த தொழித்து விடின்.

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்னார்வினைபடு பாலால் கொளல்.

Comments

Loading comments…