தவமுடைமை
திருக்குறள் மணக்குடவருரை
தவம்செய்வார் தம்கருமம் செய்வார்;மற் றல்லார்அவம்செய்வார் ஆசையிற் பட்டு.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம்?
தவமும் தவமுடையார்க் காகும்; அவமதனைஅஃதிலார் மேற்கொள் வது.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு.
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாம் தொழும்.
சுடச்சுடப் பொன்போல் ஒளிவிடும் துன்பம்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவற்கு.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்எண்ணிற் றவத்தான் வரும்.
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்.
வேண்டிய வேண்டியாங் கெய்தலான் செய்தவம்ஈண்டு முயலப் படும்.
Comments
Loading comments…