தீவினையச்சம்
திருக்குறள் மணக்குடவருரை
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்துன்னற்க தீவினைப் பால்.
எனைப்பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகைவீயாது பின்சென் றடும்.
தீவினை செய்தார் கெடுதல், நிழல்தன்னைவீயா தடியுறைந் தற்று.
மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
இலமென்று தீயவை செய்யற்க; செய்யின்இலனாகும் மற்றும் பெயர்த்து.
தீப்பால தான்பிறர்கட் செய்யற்க, நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.
தீயவை தீய பயத்தலால், தீயவைதீயினும் அஞ்சப் படும்.
தீவினையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர்,தீவினை என்னும் செருக்கு.
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.
அறிவினு ளெல்லாம் தலைஎன்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல்.
Comments
Loading comments…